Top bar Ad

31/12/18

வாத பித்த சிலேத்ம தோஷக்குறிகள்

ஒப்பொடுகுளிர்ந்து வரும்முகம்‌ வேறாம்‌ பலகாலு முள்ளஞ்‌ சேத்‌துமமேதிர ளெடுத்து வெப்பொடு முழங்கால்‌ குளிர்ந்திடுந் தலைவலி மிஞ்சிமலமுஞ்‌ சிக்கிடுகில்‌ கைப்புப்‌ புளிப்புத்தித்திப்புங்‌ குதிக்கும்‌ வாயுங்‌ கறுத்து வாதமுட செப்பும்‌ பித்த சிலேத்‌துமமுஞ்‌ செய்யும்‌ தோஷத்‌ துயராமே.

உடலில்‌ குளிர்ச்சி அதிரிக்கும்‌, நெஞ்சில்‌ கோழை கட்டும்‌. உடம்பில்‌ எரிச்சல்‌ அதிகமாகும்‌, முழங்காலிலிருந்து பாதம்வரை சில்லிட்டுவிடும்‌, தலைவலி உண்டாகும்‌. மலச்சிக்கல்‌ அதிகரிக்கும்‌. வாயில்‌ கைப்பு, புளிப்பு, தித்திப்பு முதலான பற்பல சுவைகளும்‌ காணும்‌. வாய்‌ கருநிறத்தையடையும்‌. இது வாதபித்த சிலேத்மம்‌ (சன்னிபாதம்‌) இம்மூன்றும்‌ சேர்ந்ததன்‌ குறிகளாகும்‌.

தோஷங்களின்‌ மாத்திரை காலம்‌

தருணசுரத்தி லபத்யத்தால்‌ தானும்‌ தோஷமேழுக்கும்‌ வருமிலக்கணங்கள்‌ சொன்னதல்லால்‌ மாத்திரை வகையேதான்கேளாய்‌ ஒருமித்தங்கே பதினஞ்சா மொழிந்தாலேழு நாளன்றே தருமொத்திலங்குங்‌ குழல்மாதே செப்புங்காணு முத்தமிழே

இவ்வாறு ஆரம்ப சுரத்தில்‌ அபத்திய சேவையினால்‌ ஏற்படும்‌ 7 வித தோஷங்களின்‌ குறி குணங்களையும்‌ உரைத்தோம்‌. இவை 7 முதல்‌ 8 நாள்‌ வரை உடலை வருத்தும்‌.

29/12/18

இரத்த சீவுக, பித்த சீவுக லக்ஷணம்‌

தடித்துச்‌ சிவந்து முள்போல்‌ நாக்குந் தாகமிலாச்‌ சுரமேறி யெடுத்தாலிரத்த சீவுகந்தா னினித்தான்‌ பித்த சீவுகங்கேள்‌ வெடித்தே முள்போல்‌ நீரற்று மீறுநாவே பொன்னிறமாய்‌ தொடுத்தபிரம்மை மூர்ச்சை சரக்‌ தொண்டை வேதனையுண்டாமே.

நாக்குத் தடித்துச்‌ சிவப்பாகி, முள்போல்‌ சிறுசிறு கொப்புளங்கள் ஏற்படும்‌. தாகமிறாது சுரம்‌ அடிக்கும்‌. இது இரத்த சீவுகம்‌ (ரத்த ஜிஹ்வா) ஆகும்‌.
நாக்கு முள்போல்‌ ஆகி நாவறட்சி அதிகரித்து மஞ்சள்‌ நிறமாகும்‌. மயக்கம்‌, மூர்ச்சை சுரம்‌, தொண்டைவலி இவைகளும்‌ ஏற்படும்‌. இது பித்த சீவுக தோஷமாகும்‌, (பித்த ஜிஹ்வா)
சீவுகம்‌ - ஜிஹ்வா அதாவது நாக்கு என்று பொருள்‌படும்‌.

சீத விஷ தோஷ லக்ஷணம்‌

ஒருநாள்‌ தன்னி லிரண்டுதரம்‌ முகந்தே மூன்று நாலுதிரம்‌ வருமே குளிருங்‌ காய்ச்சலுந்தான்‌ மற்றுந்தாகந்‌ தலைவலியும்‌ தருமே களையு நாத்தானுந் தகமுள்போலத்‌ தடித்தக்கால்‌ செருமேற்பொருவேல்‌ விழியாளே / சீதமான விஷதோஷமிதே

ஒரு நாளைக்குள்‌ 2, அல்லது 3, அல்லது 4 தடவை குளிருடன்‌ காய்ச்சல்‌ வரும்‌. தாகம்‌, தலைவலி, களைப்பு, நாக்கு முள் போலத்‌ தடித்‌துப் போதல்‌ முதலான குறிகள்‌ ஏற்பட்டால்‌ அது சீதவிஷ தோஷ சுரமாகும்‌.

26/12/18

சுரத்தில்‌ உபயோகிக்கக்‌ கூடாத வஸ்துக்கள்‌

காரம்‌ புளிதுவர்‌ மதுரமுடன்‌ கசப்புச்‌ சுவாது போசனந்தான்‌ சேருங்‌ குளிர்த்திக்‌ குளிர்நீர்தான்‌ சிந்தாசோ கங்‌ கிரிசியுடன்‌ போரார்‌ விழியார்‌ சங்கந்தான்‌ பொருந்தித்தருண சுரந்தன்னில்‌ தீராதென்ன மாகாதோஷஞ்‌ சேருங்காணும்‌ திண்ணமிதே.
பூவுஞ்‌சீவுஞ்‌ சந்தனமும்‌ பொருந்தும்‌ பாக்கும்‌ வெத்திலையும்‌ மேவுங்‌ கொடிசிவ பாடை மெத்தவெல்ல மெள்ளெண்ணெய்‌ தாவுங்‌ காத்து வரும்‌ வீடு தக்க மனையாள்‌ தனைப்பார்க்கல்‌ நாவுண்‌ ணுருசி மந்தமுட நறுநெய்‌ சுரத்தோக்கவ பத்தியமே.
ஆகாதவ்வ பத்திய தோஷந்தான்‌ ஆயிழை சங்கந்தன்தோஷ மீகா விஷதோஷந்தான்‌ விஷசீதத்‌ தோஷந்தான்‌ வாகாயிரத்தசிங்குவந்தான்‌ வருமே பித்த சீவுகந்தான்‌ தோகாய்‌ கிட்டிணசங்கு வந்தான்‌ தோஷமேழாங்‌ கண்டீரே.

ஆரம்ப நிலையிலுள்ள ஜ்வரத்தில்‌ காரம்‌, புளிப்பு, தித்திப்பு, குளிர்ந்த தண்ணீர்‌, கவலை, வருத்தம்‌, பெண்களின்‌ சேர்க்கை, துவர்ப்பு முதலியவைகளை நீக்க வேண்டும்‌.

புஷ்பங்களைத்‌ தரித்தல்‌, சந்தனம்‌ பூசிக்கொள்ளல்‌, பாக்கு வெத்திலை உபயோகித்தல்‌, வெல்லம்‌, நல்லெண்ணெய்‌ இவைகளையும்‌ அதிகமாக உபயோகம்‌ செய்தல்‌, மனைவியைப்‌ பார்த்தல்‌, நெய்‌ உட்கொள்ளுதல்‌ முதலானவைகள்‌ சுரரோகிக்கு அபத்தியங்களாகும்‌.

ஆகவே அவை அபத்திய தோஷம்‌, ஸ்திரீ சங்கமத்‌ தோஷம்‌, விஷதோஷம்‌, விஷசீதத்தோஷம்‌, இரத்த சீவுக தோஷம்‌, பித்த சீவுக தோஷம்‌, கிருட்டின சீவுக தோஷம்‌ என ஏழு வகைப்படும்‌.

24/12/18

சீத ஜ்வர லக்ஷ்ணமும்‌ விஷமச்சுர லக்ஷ்ணமும்‌

இனியசீதச்‌ சுரந்தானு மிரசதாது தன்னில்‌ வந்தால்‌ முனிவதாக நிரந்தரமும்‌ மூன்றேவிடாமல்‌ தான்சொரிக்கும்‌ தனியேயன்றி யெத்திகந் தானோர்பொழுது சொரித்தேகும்‌ நனிவாம்‌ பின்னாஞ்‌ சபிகாத நன்றாய்‌ விஷமச்‌ சுரத்துள்ளே.
பத்திலும்‌ நாலினிலும்‌ பனிரெண்டு மூன்‌றிலுஞ்‌ சத்தமந்‌ தன்னிலுந் தூன்விட்டு வந்திடி லுத்தமம்‌ புவியோர்கள்‌ மீதுற .. மத்‌துள சுரமென வறிந்து கொள்ளுவீர்‌.

சீத ஜ்வரம்‌ ரஸ தாதுவையடைந்தால்‌ மூன்று நாட்களுக்கு விடாமல்‌ ஜ்வரமடிக்கும்‌. அல்லது ஒரு நாளைக்கு ஒருமுறை வந்து விட்டுவிடும்‌.

4 நாட்களுக்கு ஒரு முறை வீதம்‌ 10 நாளும்‌, அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை 12 நாள்‌ வரையிலுமோ அல்லது 7 நாட்களுக்கொரு முறையோ வரக்கூடிய சுரம்‌ விஷம ஜ்வரமாகும்‌.

குலைப்பு சுரம்

அன்னவிரசந் தெரிகன்‌ றவங்‌கி பித்‌தந்தனை மறைத்துப்‌ பின்னைவாதச்‌ சிலேஷ்மத்தால்‌ பெருகுங்‌ குளிரா லுடற்கனமா முன்னவேயில்லா பித்தத்தால்‌ முறியும்‌ வாத சிலேஷ்மந்தான்‌ அன்ன பித்தக்‌ கோபத்தா லலைபோல்‌ குளிரை வுத்திடுமே.
வுத்ததோர்‌ குளிருண்டாகி யுயர்ந்ததோர்‌ சுவாசமாகி மத்ததோர்க்‌ காசதாக மதிமிக மயக்கமாகிச்‌ செத்திடல்‌ போலவாகித்‌ தீபுரத்‌ சுரமேயாகிற்‌ குத்துடை மாதேயீது குலைப்பென வறியலாமே.

சரியாகப்‌ பக்குவமடையாத அன்னரஸம்‌, உடலிலுள்ள ஜாடராக்னி, பித்தம்‌ முதலானதைக்‌ கெடுத்து, வாயுவையும்‌ கபத்தையும்‌ அதிகரித்துத்‌ தாங்க முடியாத குளிரையும்‌ உடம்பு கனத்தையும்‌ ஏற்படுத்தும்‌. அல்லது பித்தம்‌ குறைவடைவதால்‌ வாதகபங்கள்‌ முறிந்து குளிரை உண்டாக்கும்‌. இதனால்‌ சுவாசம்‌ அதிகரித்து இருமல்‌, நாவறட்‌சி, மயக்கம்‌ முதலான குறிகள்‌ உண்டாகும்‌.

23/12/18

ஆகிக ஜ்வரம்‌ (முறை ஜ்வரம்‌)

ஒன்றுட னிடண்டிலு மோர்மூன்று நாலிலும்‌ நன்‌றிடு மஞ்சிலும்‌ நடுவிரல் தன்னிலுந் துன்‌றிடு பக்கமுந்‌ தோன்‌ றிடு மாதமுஞ்‌ சென்றனோ மூன்றிலுஞ்‌ சேர்ந்ததே யாகிகம்‌.

தினமுமோ அல்லது 2 நாட்களுக்கு ஒரு முறையோ, அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது 5 நாட்‌களுக்கு ஒரு முறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு தடவையோ அல்‌லது 3 மாதத்திற்கு ஒரு தடவையோ தீர்மானமாக வரக்‌கூடிய ஜ்வரத்திற்கு ஆகிக ஜ்வரம்‌ எனப்‌ பெயர்‌.

22/12/18

மாமாக சுரம்‌


மெய்தான்‌ சிலுத்து வழல்தாகம்‌ வீக்கம்‌ கால்கள்‌ வயிறதுவுங் கைகாலெரிப்‌ போடசிதூ நகங்‌ கண்தோலிரத்தமி லாவெளுப்பு செய்வாம்‌ பத்தியங்‌ கண்ணழற்சிச்‌ சிரமும்‌ வயறும்‌ வலிப்பெய்தி நைவாய்‌ வாந்திக கண்ணகம்‌ பென்னாலா மாமாகச்‌ சுரமாமே.

உடம்பில்‌ குளிர்‌ உண்டாகி , எரிச்சல்‌, நாவறட்சி‌, முதலானவைகளுடன்‌ கால்‌, வயிறு முதலிய இடங்களில்‌ வீக்கம்‌, கை - கால் எரிச்சல்‌, நகம்‌, கண்கள்‌, தோல்‌ முதலான இடங்களில்‌ இரத்தம்‌ குறைந்து வெளுத்‌துப் போதல்‌, கண்களில்‌ வலி, தலை, வயிறு முதலிய இடங்‌களில் வலி, வாந்தி முதலான குறிகள்‌ உண்டானால்‌ அது மாமாக சுரம்‌ எனப்படும்‌.

20/12/18

ஆகந்துக ஜ்வரம் (அபிகாத ஜ்வரம்‌)

மந்தசீத வுட்டினத்தால்‌ மானார்‌ கலவியோரிருபால்‌ வெந்த வெய்யில்‌ நடைகோபம்‌ வேலையிவைகள்‌ தாகமதால்‌ லெந்த நீரு மாடுதலில்‌ லியலா முறக்கம்‌ விடுதலினா லிந்த வகையே பதினொன்று லெடுக்கு மபிகாத சுரமே.
வெகுவதாம்‌ பதினொன்‌ னென்றி லபிகாதந்தோன்றில தகுசுர தாபம்‌ வேர்வு தாகமூ டாகந்‌ சீத மிகவுடம்‌ பதிக நோவு வீறுபோ சனத்தில்‌ வாஞ்சை தொகுமதி மயக்கந்‌ தானுந்‌ தோன்‌றிடு மென்னலாமே.

மந்தம்‌, குளிர்ச்சி, உஷ்ணம்‌, புணர்ச்சி, வெயிலில்‌ நடத்தல்‌, கோபித்தல்‌, தாகம்‌, தண்‌ணீரில்‌ குளித்தல்‌, தூக்கமின்மை, அதிகமாக வழி நடத்தல்‌, அதிகமான சரீர வேலை ஆகிய இந்த பதினொரு வகைக்‌ காரணங்களினாலும்‌ அபிகாத ஜ்வரம்‌ ( ஆகந்துகம்‌) உண்டாகும்‌.

பொதுவாக ஜ்வரம்‌, உடம்பெரிச்சல்‌, வியர்வை,நாவறட்சி, குளிர்‌, உடம்பில்‌ குத்‌துவலி ஆகாரத்தில்‌ இச்சை, மயக்கம்‌ முதலான குழிகள்‌ உண்டாகும்‌.

18/12/18

அஜீர்ணச்‌ சுர லக்ஷ்ணம்‌

விக்கலுங்‌ காசந்தானும்‌ மேலுற சுவாசந்தானும்‌ பக்கமும்‌ நெறியுஞ்‌ சந்து பாதமும்‌ நோகஸ்தானம்‌ மிக்கதோ ரசீரணத்தில்‌ விளங்கிய சுரமேதானு மக்கினி மந்தந்தானு மசீரணச்சுரமதாமே

விக்கல்‌, இருமல்‌, மேல்மூச்சு, விலாப் பக்கம்‌, மூட்டுகள்‌, கால் முதலான இடங்களில்‌ கடுமையான வலி, பசியின்மை முதலான குறிகளுடன்‌ சுரம்‌ காணுமேயானால்‌, அது அஜீரணச்‌ சுரமாகும்‌.

17/12/18

பூதச்சுர லக்ஷ்ணம்‌

போதமழிந்து பொய்பேசும்‌ போசனத்தில்‌ மிகவாஞ்சை யேதப்படவே சுரம்சோம்பு மியலா மயிற்குத்‌ திடலாடல்‌ பேதமதாக விழிவெளுத்தல்‌ ப்ரதாபத்‌ துடனே தானகைத்தல்‌ தோதஞ் சந்தில்‌ மிகக்கண்டால்‌ சொல்லும்‌ பூதச்சுரமென்றே.

நினைவு மறந்து பொய்களை உரைப்பான்‌. ஆகாரத்தையதிகம்‌ உட்கொள்வான்‌. ஜ்வரம்‌, சோம்பல்‌, மயிர்க்கூர்சல்‌, விழி வெளுத்தல்‌, காரணமின்றிச்‌ சிரித்தல்‌, மூட்டு வலி முதலியவைகளும்‌ இருந்தால்‌ அது பூதஜ்வரமாகும்‌.

16/12/18

வாதசோபச்‌ சுரக்குறிகளும்‌ பித்தசோபச்‌ சுரக்குறிகளும்‌

சில
அய்யுயர்‌ வாதசோப மானாக்கால்‌ குணமே கேளாய்‌ மெய்யுடன்‌ சிரஸுகம்ப மீறிய குளிருமாகும்‌ பய்யற வல்குல்‌ மாதே! பயித்தியச்‌ சுரத்தின்‌ சோபந் திய்யன வழத்தியென்றுச் ‌ செப்பினார்‌ செகத்திலுள்ளோர்‌.

வாத வீக்கத்துடன்‌ கூடிய சுரத்தில்‌ தலை நடுக்கமும்‌, குளிரும்‌ அதிகமிருக்கும்‌, பித்த வீக்கத்துடன்‌ கூடிய சுரத்தில்‌ அழற்சியேற்படும்‌.

15/12/18

சன்னி பாத ஜ்வரக்‌ குறிகள்‌

சன்னிவாத சரம்‌ சோம்பு தாகம்‌ பிரமை யழல்‌ மூர்ச்சை துன்னிவாய்ரீ ரரோசிது வாதுதந் தினவு தலை சந்து கன்னங்‌ கண்‌ தளிந்தபித்தங்‌ கண்தோ லுகிற சிவப்பறாமை யுன்னு நாக்‌ கருப்பூமைசெவிடுறக்க மன்றிக்குளிராமே.

வாதம்‌, பித்தம்‌, கபம்‌ மூன்றும்‌ கோபித்து ஏற்படும்‌ ஜ்வரத்தில்‌ அதிகமான நாவறட்சி, மயக்கம்‌, எரிச்சல்‌, மூர்ச்சை, அரோசகம்‌, அரிப்பு, தலை, மூட்டுகள்‌ இவைகளில்‌ கடுமையான வலி, கன்னங்கள்‌, கண்‌, தோல்‌ முதலான இடங்களில்‌ மஞ்சள்‌ நிறம்‌, நாக்கில்‌ கருநிறம்‌, தூக்கமில்லாமை, குளிர்‌ முதலான குறிகளுண்டாகும்‌.

14/12/18

வாத கபச்‌ சுர லக்ஷ்ணம்‌

சோம்புடன்‌ திமிரேயாகிற்‌ சொல்மொழி தவறேயாகில் தேம்பிடுஞ்‌ சுவாசகாசஞ்‌ சிரத்தொடு சந்துநோதல்‌ காம்புறு தோழாய்‌ சீதங்‌ காண்பசி யருசியோட யாம்படி குணங்கள்‌ வாதத்‌ தையுறு சுரமதாமே.

சோம்பல்‌, மதமதப்பு, உளருதல்‌, மேல்மூச்சு, இருமல்‌, மூட்டு, தலை இவ்விடங்களில்‌ வலி, குளிர்‌, அருசி (சுவையின்மை) , முதலான குறிகளுடன்‌ சுரம்‌ இருந்தால்‌ அது வாதகபச்‌ சுரமாகும்‌.

13/12/18

வாத பித்த ஜ்வர லக்ஷ்ணம்‌

தழலென வழத்தியுண்டாய்‌ தக்கவாய்‌ வரண்டுலர்ந்து யுழலையோக்‌ காளத்தோடே யுறக்கமு மில்லையாகில்‌ குடிலுறு தலையுஞ்‌ சந்துங்‌ கொடூரமாய்‌ நொந்துதாகில்‌ சுழலுறு வாதபித்தச்‌ சுரமெனச்‌ சொல்லலாமே.

உடம்பு நெருப்பைப் போல்‌ அனல்‌ வீசும்‌. வாய்‌ வறண்டு உலரும்‌. அழற்சியுடன்‌ வாந்தியாகும்‌. தூக்கமிராது. தலை, மூட்டுகள்‌ இவைகளில்‌ தாங்க முடியாத வலி முதலானவை ஏற்பட்டால்‌ அது வாத பித்தச் சுரமாகும்‌.

கபச்சுர லக்ஷ்ணம்‌

வாந்தியாய்‌ மூக்குநீர்பாய்‌ வைத்துள விரத்தஞ்சீதந் போந்தநெஞ்‌ செரிப்புக்‌ காருதல்‌ புகல்திமிர்‌ சுவாசகாசம்‌ சே(ர்)ந்தவுட்‌ டிணமேவேண்டல்‌ சிலிர்த்‌துடல்‌ வெளுத்‌ துமேனி காந்தளென்‌ கறத்துமாதே கபச்சுர ரோகிதானே.

சுரத்துடன்‌ வாந்தி, ஜலதோஷம்‌, சீதபேதி, நெஞ்சுக்கரிப்பு, உடம்பில்‌ மதமதப்பு, மேல்மூச்சுடன்‌ இருமல்‌, உஷ்ணமான பதார்த்தத்தில்‌ விருப்பம்‌, உடம்பு வெண்ணிறமடைதல்‌ முதலான குறிகளேற்படில்‌ கபசுரமாகும்‌.

12/12/18

பித்த ஜ்வர லக்ஷ்ணம்‌

வன்னிபோற்‌ கரமே மூர்ச்சை மதமதி சாரம்‌ வாந்தி பின்னையுப்‌ புரைப்பதாகம்‌ பெருமுக மதரங்‌ காது மின்னிடு முருகங்கண்‌ ணு மேனியும்‌ பிதமாயே பன்னிடுங்‌ குளிர்ச்சிதோன் றும்‌ பயித்தியச்‌ சுரமதாமே.

நெருப்பைப் போல்‌ அனல்‌ வீசும்‌. மூர்ச்சையுண்டாகும்‌. அதிசாரம்‌ (வயிற்றுப்போக்கு), வாந்தி, தாகம்‌ இவைகளேற்படும்‌. முகம்‌, உதடு, காதுகள்‌ இவைகளில்‌ மினுமினுப்புத்‌ தோன்றும்‌. உடம்பும்‌ கண்களும்‌ மஞ்சணிக்கும்‌. குளிரும்‌ தோன்றும்‌,

வாத ஜ்வர லக்ஷ்ணம்‌

வாதநரமே குளிர்கம்பம்‌ வானீர் தகைப்பு மயிர்குத்து போதமூறித்‌ தாபமுடன்‌ புகல்வாய்க்குறடு தானொடுங்கல்‌ பேதமாகத்‌ தலைக்கடிகைப்‌ பிளந்தாப்‌ போல கன்னந்தோல்‌ காதுங்கருகிச்‌ சுவாசமுடன்‌ காசமிகவாங்‌ கண்டீரே.

குளிர்‌, நடுக்கம்‌, வாயில்‌ நீரூரல்‌, பயம்‌, மயிர்க்கூச்சல்‌, உடம்பில்‌ எரிச்சல்‌, வாயைத்‌ திறக்க முடியாமை, தலையைப்‌ பிளக்கும்படியான வலி, கன்னம்‌, தோல்‌, காது முதலான இடங்களில்‌ கருமை நிறம்‌, சுவாசம்‌, இருமல்‌ முதலான குறிகளுடன்‌ ஜ்வரம்‌ இருந்தால்‌ அது வாத ஜ்வரமாகும்‌.

11/12/18

ரோகோத்பத்தி

உரமுறு தக்கன்யாகத்‌ துருத்திர னெற்றிக்கண்ணாற்‌ சுரமுய ரோகம்பற்றி பாபஞ்சொல்லு மிறுத்துச்‌ சோசன்‌ திரமுறு கோபஞ்சேர்ந்த மந்தஞ்செப்பு மோகமயனாதருதம்‌ அறமுற வேர்க்கண்களே ! அபசாரத்‌ தோடுபத்தே.

தக்ஷன்‌ யாகத்தைப்‌ பரமசிவன்‌ நெற்றிக்‌ கண்ணால்‌ அழித்த போது ஏற்பட்ட கோபாக்கினியே கர ரோகம்‌ ஆயிற்று. இதற்கு பாபம்‌, மிருத்யு, சோசன்‌, கோபம்‌, மந்தன்‌, மோகம்‌, மயன்‌, தருதம்‌, அபசாரம்‌ என்ற பெயர்களும்‌ உண்டு.

10/12/18

அ(ஸ்‌)த்தி சுர லக்ஷ்னம்‌

நரம்பெலும்‌ புடம்பு சந்து நறுக்கியே பிளத்தல்போல யுறம்பெற வந்தாலந்தி யுற்றதோர்‌ சுரமேயென்க வலம்பெற வடிவேற்கண்ணா யறிவுறு முனிவோர்தாமும்‌ நலம்பெற வடநூல்தன்னை நல்கிய பயன்கள்‌ தானே

நரம்பு, எலும்பு, உடம்பு, கை, துடை இவைகளின்‌ இடுக்குகள்‌ முதலான இடங்களில்‌ கடுமையான வலி ஏற்படும்‌. ஜ்வரமும்‌ அதிகமிருக்கும்‌.

9/12/18

மஜ்ஜைகத, சுக்கிலகத சுரத்தின்‌ லக்ஷ்ணம்

காசமுஞ்‌ சுவாசந்தா னுங்‌ கதித்‌தெழு விக்கல்தானும்‌ மோசமில்‌ மதிமயக்க முயங்குமெய்‌ மிகவுமோய்தல்‌ மாசமாம்‌ பிராணவாயு பகர்ந்திடு மபானவாயு மாசற நடுக்கமுண்டாம்‌ மச்சையிற்‌ சரமதாமே. உறக்கமே மிகவுண்டாகி உற்றதோர்‌ ஞானங்கெட்டு பிறக்குமோர்‌ வார்த்தை யெல்லாம்‌ பேய்மொழியாகக்கூறில்‌ சிறக்குமோர்‌ சுக்கிலத்தைச்‌ சேர்ந்திடுஞ்‌ சுரமேயென்க இறக்குமேயினைப்புத்தானுமில்லையென்‌ றுரைக்கலாமே.

இருமல்‌, பெருமூச்சு, விக்கல்‌, அடிக்கடி மயக்கம்‌, உடம்பு ஓச்சல் ‌ ( உடல் தளர்வாக இருத்தல் ), பிராணவாயு, அபானவாயு இவைகளை அதிகரிக்கச்‌ செய்யும்‌. நடுக்கம்‌ ஏற்படும்‌. இக்குறிகள் உண்டானால்‌ மஜ்ஜையைப் பற்றிய ஜ்வரமாகும்‌, சுக்கிலத்தைப்‌ பற்றினால்‌, அதிகமான தூக்கம்‌ ஏற்பட்டு, அறிவு கெடும்‌. இளைப்பு இருக்காது.

8/12/18

பித்த தாது, மேதை தாது கத சுர லக்ஷணம்‌

நடுக்கிடு வயிறேயுப்பும்‌ நல்லதோ ருடம்புவற்றிக்‌ கடுத்திடும்‌ பித்ததாது கலந்திடும்‌ சுரமேதென்க வடுத்திடும்‌ விழியாய்‌ நோவு வாய்மிக வெருவல்‌ சீத மிகுத்திட வுடம்பே வற்றும்‌ மேதையிற்‌ சுரமதாமே.

நடுக்கலுடன்‌ வயது உப்புசமாகும்‌. உடம்பு இளைக்கும்‌. கடுப்பு உண்டாகும்‌. அது பித்த தாதுவைப்‌ பற்றி நின்ற ஜ்வரமாகும்‌. (மாமிச தாதுவைப்‌ பற்றியது என்‌றிருத்தல்‌ வேண்டும்‌. ) வாய்‌ பிதற்றலுடன்‌ உடம்பு குளிர்ந்து, மெலிவடையும்‌. இவை மேதோகத‌ ஜ்வரத்தின்‌ லக்ஷ்ணங்களாகும்‌.

ரஸ தாது, ரத்த தாதுவில்‌ பாலிய சுர நிதானம்‌

மூதுறு தாதுவொன்றில்‌ மும்மூன்று நாளே நின்று தாதுவைத்‌ தானேபற்றித்‌ தான்வரு மிகவேயென்க கா துருவிழியின்‌ மாதே! காசினி நிலனார்‌ தங்கள்‌ மீதுரு சுரமேதென்க விளம்பினர்‌ மேலோர்தாமே. முகமது மிகமினுங்‌கி முள்ளென மயிற்குச்சிட்டால்‌ தகமையாஞ்‌ சுரமிரசத்‌ தா துவில்‌ வந்ததென்க துகமிரு மிரத்ததாது சுகமிரு நெறியிற்‌ றோற்ற நகமிரு கைகால்சந்‌து நடுக்கியே பிளந்த நோவாம்‌.

இரஸாதி தாதுக்களில்‌ ஒவ்வொன்றிலும் சுரம்‌ 3 நாட்கள்‌ நிற்கும்‌. முகத்தில்‌ மினுமினுப்பு உண்‌டாகி, முட்களைப்போல்‌ மயிர்க்கூச்சல்‌ ஏற்பட்டாலும்‌ சுரம்‌ ரஸதாதுவைப்‌ பற்றியது என்று தெரிந்துகொள்ளவும்‌. நகக்கண்கள்‌, கைகால்‌, தொடையிடுக்கு முதலான இடங்களில்‌ நடுக்கத்துடன்‌ அதிக வலியுண்டாகும்‌.

7/12/18

சுர நிதானம்‌

சீரான முனிவோர்கள்‌ திரட்டிய தோர்வடநூலின்‌ பேரான சுரந்தனக்கு பிறப்புடனாம்‌ மிதானமதை பாரான தமிழதனால்‌ பகர்ந்திடவே தமிழோர்க்குக்‌ காரான நெடுமால்தன்‌ கடிமலற்றாள்‌ காப்பாமே விண்ணினிற்‌ தேவர்க்கெல்லாம்‌ விளங்குமாமுதல்வன்போல மண்ணினிலின்‌ னோர்கள்நோய்க்கு வருஞ்சுர முதலேயென்க நுண்ணிய நிதானந்தன்‌ னைநவிலவே பவழமேனி கண்ணுதற்‌ கடவுள்பெற்ற கணபதிக் காப்பதாமே.

முனிவர்கள்‌ வட நூலிலிருந்து திரட்டி எடுத்‌தெழுதிய சுரநோயின்‌ நிதானம்‌, உற்பத்தி இவைகளைத்‌ தமிழ்‌ தெரிந்தவர்களுக்குப்‌ பிரயோஜனமாக வேண்டி, தமிழில்‌ செய்ய விஷ்ணுவின்‌ பாதங்களைத்‌ துதிக்கிறேன்‌. ஆகாய மார்க்கத்தில்‌ சஞ்சரிக்கன்ற தேவர்களுக்கு முதல்வன்‌ (கணபதி) எப்படியோ அப்படியே இம்மண்ணினில்‌ வாசம்‌ செய்யும்‌ மனிதர்களுக்கு வரும்‌ நோய்களில்‌ ஜ்வரம்‌ முதலாவதாகும்‌. ஆகவே அதனுடைய நிதானங்களை (குறிகுணங்‌களை)ச்‌ சொல்கிறார். அதற்கு கணபதி அருள்செய்வாராக.

6/12/18

சோகத்‌ தோகைகள்‌

நோய்களின் எண்ணிக்கை
உற்றிடு்‌ஞ் சிரஸுதன்னில்‌ ஓதுங்கு முன்னேற்றேழு மற்றது செவியிலின்றேழ்‌ வாயில்‌ நூற்றென்பத்தாறு கற்றிடுங்‌ கண்ணினோவுக்‌ கருதிய தொண்‌ணூத்தாறு முற்றியகழுத்தி லாறேழ்‌ மூக்கில்‌ மூவொன்பதன்றே. என்றதோர்‌ கன்னந்தன்‌னி லின்பதா நோவு நாற்ப தென்றதோர்‌ நெற்‌றிதன்‌னி லியங்குநா வெட்டுநோவு துன்றுறுநற்‌ பிடரிதன்னில்‌ சொல்லுக பத்துநோவு வென்‌ றிசேகரத்தில்‌ தூத்து முப்பதாம்‌ விளம்பலாமே.
சிரஸில்‌ 307 வியாதிகள்‌
செவியில்‌ 7 வியாதிகள்‌
வாயில்‌ 186 வியாதிகள்‌
கண்களில்‌ 96 வியாதிகள்‌
கழுத்தில்‌ 42 வியாதிகள்‌
மூக்கில்‌ 27 வியாதிகள்‌
கன்னத்தில்‌ 40 வியாதிகள்‌
நெற்றியில்‌ 32 வியாதிகள்‌
பிடரி (பின்‌) 10 வியாதிகள்‌
கைகளில்‌ 130 வியாதிகள்‌
விளம்பிடு வாதநோவு எண்பத்து நாலுமிக்க உளங்கனி சன்னிமுப்ப தோங்குடல்‌ வாயுமெட்டு கழங்கமு முப்பத்தேழு கரப்பனு மறுபத்தாறு தளங்கொள்விப்‌ புருதிநாலு சாற்றுவைகுருவை யெட்டே.
அய்யெட்டுப்பிளவை தானுமன்பினா லுடலின்‌ நின்று மெய்யுற்ற பவுக்டரமெட்டு மகோதர முப்பதென்ன உய்யசிக்‌ கிரிவை வெட்டி யொன்பது வுண்மையாகச்‌ செய்யவண்‌ டொருபத்‌ தெட்டுச்‌ செப்புமன்‌ வளவுசெப்பு.
செப்புக சிலந்தி யெண்பத்‌ தொண்ணினிற்‌ செய்கையாக வொப்புபாண்‌ டிருபத்தெட்டு முண்மையீ ரேழுநூறு வெப்புகாண்‌ பத்திரண்டாம்‌ விளங்குமின்‌ நோவதெல்லாந் தப்பிலா வாதக்கூறு சாற்றுக தரணிமேலே.
நோய்‌ என்பதைக்‌ குறிப்பிட நோவு!! என்று கூறப்பட்‌டிருக்கிறது.
வாத நோய்கள்‌ 84 வகை
சன்னி பாதம்‌ 30 வகை
குடல்‌ வாயு 8 வகை
கழங்கம்‌ 37 வகை
கரப்பான்‌ 66 வகை
விப்புருதிகள்‌ 4 வகை
குறுவை 8 வகை
பிளவை 40 வகை
பவுத்திரம்‌ 8 வகை
மகோதரம்‌ 30 வகை
கிரிவைவெட்டி 9 வகை
வண்டுகடி 18 வகை
சிலந்தி 81 வகை
பாண்டு 28 வகை
வெப்பு 20 வகை
சாற்றஞ்‌ஞீற் றன்பத்தாறு தானிவை வயிற்றிலென்று மெத்தமில்த்‌ தண்டுநூத்தெண்‌ பத்தஞ்சென்‌ றியம்பவாகி தோத்தமுன்‌ னபானந்தன்னில்‌ சொல்லுக அறுபத்பதொன்று சீதமாம்‌ விரையில்தானே சப்புக்‌ ரிருபத்தஞ்செ.
செப்புகை யெரிப்பு நூறு திகைப்பு தொண்ணூரு றெண்ணும்‌ வெப்புமோ ரன்பத்தாறு விளங்கிய லேழுமொன்பாம்‌ ஒப்பிலா வைசூரியெண்ணாம்‌ உண்மைகா மாலையெட்டுத்‌ தப்பிலா வோடுபாம்பு சாற்றுக விருபத்தேழே.
சாற்றுமுட்‌ டிருபதுள்ளடி தன்னிலே அன்பத்தொன்று ஆற்றலற்‌ சொறியருபது வழலை நாலு மாத்தொரு மட்டில்‌ நோவு வண்மையா யொருநூற்றெட்டு தொத்து செஞ்சாலிநோவு சொல்‌லுக அறுபத்தொன்றே
ஒன்றரை யீரேழ்‌ நூறில்‌ இணங்குமெண்‌ பத்திமூன்று நன்றுசேர்‌ பித்தரோகம்‌ நாடி நீரறிந்து கொள்ளே நின்றுட லுட்டிணங்கள்‌ நிகழ்தறி தளர்ச்சை நெஞ்சுள்‌ ளொன்றிய வாயதோன்றி லொறித்திடி லுண்மைதானே.
வயிற்றில்‌ 558 நோய்களும்‌
ஆண் உறுப்பில்‌ 185 நோய்களும்‌
அபாணத்தில்‌ 61 நோய்களும்‌
விதையில்‌ 25 நோய்களும்‌
கையெரிச்சலில்‌ 100 நோய்களும்‌
திகைப்பு (மூச்சு திணரல்‌) 96 நோய்களும்‌
வெப்புப்பாவை 56 நோய்களும்‌
வைசூரியில்‌ 63 வகைகளும்‌
காமாலை 8 வகைகளும்‌
பாம்பு 27 வகைகளும்
மூட்டு 52 வகைகளும்
சொறி 60 வகைகளும்
வழலை 4 வகைகளும்
மட்டில்‌ நோய்‌ 108 வகைகளும்
செஞ்சாலி 61 வகைகளும்
பித்த ரோகம்‌ 83 வகைகளும்
உண்மையாங்‌ காலில்மண்ணை யுள்ளொரு நூற்றொண்ணூரும்‌ வண்மையாந்‌ துடையில்தானே மகிழ்ந்துசொல்‌ லிருநூற்றொண்ணு திண்மையாங்கு றுக்குதன்னில்‌ செப்புக முந்நூற்றாறும்‌ வண்மையாந்தனத்தில்‌ தானும்‌ வரைந்து நோயாறே ழென்றே.
ஆறாறு வுந்திதன்‌னி லழவிவா விரு நூறென்றும்‌ வீறான முதுகு தன்னில்‌ விளங்குக வெண்பத்தொன்று பேறான பிடரிதன்னில்‌ பிசகிடா எழுபத்தைந்து மாறாத கைக்‌கீழ்‌ தன்னில்‌ வகைந்தவைம்பத்துநான்கே.
அன்பதே பத்‌துமூன்று வார்முலை யகலமார்புற்‌ தும்பிபோல்‌ துளை துளைத்‌துத்‌ துயர்மிகு மடியல்‌ வீழல்‌ நம்பியே விருமலென்ன நடத்திய சுவசகாசங்‌ கும்புற்பன்‌ னாகுமுந்நூற்‌ குருவினா லுரைக்கலுற்றேன்‌.
காலில்‌ 190 வியாதிகளும்‌
தடையில்‌ 201 வியாதிகளும்
குறுக்கில்‌ 306 வியாதிகளும்
தனத்தில்‌ 42 வியாதிகளும்
தொப்புளில்‌ 56 வியாதிகளும்
விலா 200 வியாதிகளும்
முதுகில்‌ 81 வியாதிகளும்
பிடரியில்‌ (முன்‌) 75 வியாதிகளும்
கைக்கு அடியில்‌ 40 வியாதிகளும்
மார்பில்‌ 63 வியாதிகளும்
இருமல்‌, சுவாசகாசம்‌ 300 வியாதிகளும்
குறியுறு சடத்திற்‌ தானே குறித்தநா லாயிரத்தி னறிவுற வந்த நானூற்று நாற்பத்தெட்‌ டானநோயின்‌ பேரறி புலாதிகளிற்கூடியப்‌ புராரிதன்‌ பாதம்‌ போற்றி நெறியுறு வியிற்றானே நிகழ்த்துமா யிரத்தெட்டென்றே
ஆயிரத்‌ தெட்டு நாவி லலங்கார வல்லபத்தால்‌ மாயுறு விசும்புட்டேறு மலர்வண்ணன்‌ வகுத்தநோய்கள்‌ எய்வதோர்‌ வினையால்‌ நூத்த றுபதென்றி யம்பு கோயில்‌ பாயிரக்‌ காவியம்பக்‌ கம்நூற்‌ றெட்டென்‌ றோதே.
நூற்றுட னெட்டதாகி நுகந்திடு வியா திதன்னிற்‌ போற்றிடு முப்பதென் று புகழ்ந்திடு நூலின்மிக்கச்‌ சாற்றிய நோவதெல்லாந் தலைவனாம்‌ வாதபித்தஞ்‌ சேற்றுமங்‌ கழன்‌ றுயர்த்துத்‌ திரிவித வியாதியென்‌றே.
திரிவித வியாதி தன்னிற்‌ செப்புவன்‌ வாத மென்னக்‌ குறியுறுசிரசிற்‌ பத்து குலவிய செயலினாலு நெறியுறு வாயிற்‌ பன்னேழ்‌ நிகழ்த்தினோ மூவேழ்கண்ணிற்‌ செறியுறு கரத்தினொன்று செப்புக விரண்டு நூலே.
செப்புக விரண்டு மூக்கிற்‌ செறிந்த கன்னத்தில்‌ நாலு மெப்புறு மிரண்டு நெற்றி விளங்கிய பிடரிலொன்று ஒப்புக புரத்திலேழு உரைத்திடு வாதம்‌ பத்து தப்பொலி வாதசன்னி தானொரு பத்‌ துமூன்றே.

இந்த உடம்பில்‌ ஏற்படும்‌ வியாதிகள்‌ 4448 ஆகும்‌. சரீரத்தில்‌ 1008, நாக்கில்‌ 1008, பூர்வஜன்ம வினையினால்‌ 160, காலில்‌ 108, இவ்வாறு ஏற்பட்ட வியாதிகளுக்‌கெல்லாம்‌ தலைவன்‌ வாத பித்த கபங்களாகும்‌.
சிரஸில்‌ 10, வாயில்‌ 17, கண்களில்‌ 21ம்‌, கரத்தில்‌ ஒன்றுமாகும்‌. மூக்கில்‌ 2, கன்னத்தில்‌ 4‌, நெற்றியில்‌ 2, பிடரியில்‌ 1, விலாப்புறங்களில்‌ 7, வாதம்‌ 10, வாத சன்னி 13.

4/12/18

கப வியாதிகளின்‌ விபரம்‌

தானெனு மீழ்‌ நூறு தன்னிலென்பத்து மூணு லூனுயிர்‌ சீதளத்தி வாழ்வினை யதிகஞ்செய்தே யீனமா முடலும்‌ வற்றி யெழுந்தபின்‌ நோயதெல்லாந் தேனமா மொழியாய்‌ வண்ணஞ்‌ சேத்துமஞ் செப்பலுற்றேன்‌.

கபத்தினால் ஏற்படும்‌ வியாதிகள்‌ 1483. இவைகள்‌ குளிர்ச்சியினாலும்‌, பூர்வ ஜன்ம கர்மாக்களினாலும்‌, உண்டாகி உடம்பை வற்றச்‌ செய்யும்‌.

பித்த வியாதிகளின்‌ விபரம்

கருத்திடு பித்தந்தன்னில்‌ கலந்திடு மீரேழ்நூறு வருத்திடு மெண்பதென்ன வறியாத துடனே மூன்று சருத்தமுற்‌ றட்டணங்கள்‌ தழற்சியுஞ்‌ சிறிது காட்டு மருந்திய பித்தந்‌ தன்‌னில்‌ மருவுமின்‌ நோயுந்தானே.

பித்த தோஷம்‌ அதிகரித்தலால்‌ உண்டாகும்‌ வியாதிகள்‌ 1489, இந்நோய்களில்‌ தேகத்தில்‌ உஷ்ணமும்‌, அழற்சியும்‌ அதிகரிக்கும்‌.

வாத வியாதிகளின்‌ விபரம்

வரித்திடு வாதபித்த சிலேத்தும வியாதி மூன்றில்‌ வருத்திடுஞ் சிலதோஷத்தால்‌ வண்மை முன்‌ னுரைத்திடு மீரேழ்நூறே தன்‌ னிலெண்பத்திரண்டு கடுத்தினால்‌ வாதக்கூறின்‌ நோயெனக்‌ கருதலாமே.

வாத பித்த, கப தோஷத்தால்‌ ஏற்படும்‌ வியாதிகளுள்‌ வாதத்தினால்‌ மாத்திரமே உண்டாகும்‌ வியாதிகள்‌ 1482 ஆகும்‌.

3/12/18

வியாதிகளின்‌ தொகை

வரம்படைத்‌ திலங்குகீர்த்தி மண்ணுல கேழும்‌ வண்மை உரம்படைத்‌ திலங்குமின்ப வுண்மையா மனிதர்‌ தங்கள்‌ சிரங்கழல்‌ நீராய்ச்‌ செப்பு நோயின்‌ பேரெல்லாம்‌ பரந்தனில்‌ கல்வியோடும்‌ பண்பினாலுரைக்க லுற்றேன்‌.
லுரைக்குமிக்‌ குணத்தின்‌ வன்மை யுண்மைவா கடத்தையெல்லாந்‌ தரைக்குமே லுரைப்பதென்று சாற்றுவ தேதற்கொக்கும்‌ வாக்கிய பிரமன்சொன்ன மாமரை நூலுமன்மே லுரைக்கியல்‌ குழலேசொல்லவுமனார வின்விலொக்கும்‌.
ஊமனார்‌ சொல்லிதென்னவுரைப்பன்றா னுரைத்தவீசன்‌ வாமபா கத்தாள்போற்றி மண்டிலுண்‌ டானநோயி நாமனா லாயிரத்து நானூற்றி நாற்பத்‌ தெட்டென்‌ றாமநோ யின்பேரெல்லா மவணிமே லுரைக்க லுற்றேன்‌.

இம்மண்‌ணுலகிலிருக்கும்‌ மாந்தர்களை வருத்‌தும்‌ நோயின்‌ பெயர்‌களைக்‌ கூறுகிறேன்‌. இருந்தாலும்‌ சாஸ்‌திரத்திலிருக்கும்‌ வியாதிகளை யெல்‌லாம்‌ சொல்வதென்பது இயலாத காரியம்‌. முக்கி்யமான 4448 வியாதி விபரங்களை மாத்திரம்‌ அகத்தியர் இங்கு உரைக்கிறார்‌.

2/12/18

வைத்திய லக்ஷணம்

நயன மிகப்புல நாலுநனு தினமுந் துயர மிகுத்துயிர்‌ தொண்டைமட்‌ டாயினுஞ்‌ செயல்‌ வைத்தியஞ்‌ செய்தது கானுதிர அயன்‌ விதித்‌தறிந்‌ தவறில்லையா (தலா)ல்‌.

மூச்சுள்ளவரையில்‌ நோயாளிக்குச்‌ (உயிர்‌ தொண்டையில்‌ இருக்குமளவு) சிகிச்சையை செய்ய வேண்டும்‌. பின்னர்‌ பிரமன்‌ விதித்த விதிப்படி நடக்‌கட்டும்‌ என்று கூறவும்‌.

நோயுக்குத்கக்க பேரை நுவன்றலு மந்தநோய்க்கு மேவிட்ட மருந்‌ துசெய்து வேதனை நீக்கல்தானு மாவிக்கு மொழியா யின்னம்‌ வைத்தியம்‌ செய்யவன்மை ஆவிக்குத்‌ தக்கரீச னறிவரோ ரொருவரன்றே.

நோய்க்குத்‌ தக்க பேரைத்‌ தெரிந்து கொள்ளுவதும்‌, அந்த நோய்க்குத்‌ தகுந்த மருந்தைக்கொடுத்து வேதனையை நீக்குவறும்தான்‌ வைத்யர்களால்‌ செய்ய முடியுமேயன்றி உயிருக்கு மருந்து கொடுக்க இயலாது.

1/12/18

அஸாத்யக்‌ குறிகள்

பகற்குளிறும்‌ நியழலும்‌ பயித்தியமும்‌ வாதமுடன்‌ முகச்‌சிவப்பும்‌ நாக்கருப்பும்‌ முதிற்கமுத்துந்‌ தலை தூக்கு மிகக்களைநா னடிக்கடியும்‌ வியன்‌ வைத்துஞ்‌ சூலையெனப்‌ பிகத்தவென்‌ற மொழிமட வாய்‌! பிழைக்களிதென்‌ றுரைத்தாரே.

பகலில்‌ குளிரும்‌, இரவில்‌ காய்ச்சலும்‌ அடிக்கடி வந்தாலும்‌, பித்தம்‌ வாதம்‌ இரண்டும்‌ சேர்ந்து ஓடினாலும்‌, முகம்‌ சிவந்து, நாக்கு கறுத்திருந்தாலும்‌, கழுத்து, தலை இவைகளைத்‌ தூக்கமுடியாமல்‌ களைப்புடன்‌ தொங்க விட்டாலும்‌ அந்நோயாளி பிழைப்பது கடினம்‌.

சாத்யக்‌ குறிகள்‌

முன்னநின்‌ற நோயினர்க்கு முகப்பிணி யவைகள்‌ பார்த்துப்‌ பின்னவருள்ளி லக்கணத்தைப்‌ பேரான வைத்தியந்தான்‌ தன்னறிவி னாலறிந்து சாத்யமு மசாத்யமு மின்னதென்ன வெவவரிந்து விதற்குச்சிகத்ஸை பண்ணிடுவாம்‌.

நோயாளியின்‌ முகம்‌ முதலான அங்கங்களைச்‌ சோதித்து, அவைகளுக்கு உண்டான குறிகளையும்‌ மனதில்‌ வைத்துக் கொண்டு, அறிவையும்‌ உபயோகித்து இந்த நோய்‌ சாத்யமானது, இது அசாத்யமானது என்று தெரிந்து வைத்தியம்‌ செய்ய வேண்டும்‌.

30/11/18

நாக்கின்‌ லட்சணம்‌

உள்ள நோயினர்‌ நாவது சொரசொரப்புடனே தெள்ளு பான்னூரில்‌ வாதமாஞ்‌ சிவப்பொடு பசுமை கொள்ளு நாவது பித்தமாங்‌ கூறிடுங்‌ கபந்தான்‌ வெள்ளையாகின்‌ நீர்க்‌ கிறைவாயிடுமிகவே.
உலர்ந்‌ துமுட்‌ படுகறுத்து நாவுறுவது சன்னி கலந்து வன்னமுங்‌ குணங்களுங்‌ காண்பது தொந்த மிலங்கு மிக்குண மூன்‌ றுட நாவறண்டிருந்தா லலங்கலங்‌ குடிலன்ன மெய்‌ சாத்தியமாமே
நாவுறு குறிகள்‌ வாதம்‌ விழுந்துமுட்‌ பரந்துபச்சை தாவுறில்‌ வாதபித்து தருககுப்‌ பிதனால்‌ செம்மை மேவிடு முன்னுமாகு மிகுந்த சேத்‌துமஞ்‌ சிகப்பாம்‌ பாவுமுன்‌ னொடுதிரைஞ்சு பருமையாம்‌ சன்‌னிவாதம்‌.
  • நாக்கில்‌ சொரசொரப்புடன்‌ அரிப்பு ஏற்பட்‌டால்‌ வாததோஷம்‌ அதிகரித்திருக்கிறது என்று அறிந்து கொள்ளவும்‌.
  • நாக்கு சிவந்த நிறமாகவோ, பசுமை நிறமாகவோ காணப்பட்டால்‌ பித்தம்‌ அதிகமாக இருக்கிறதென்று தெரிந்து கொள்ளவும்‌.
  • நாக்கின்‌ நிறம்‌ வெண்மையாடல்‌ கபதோஷம்‌ அதிகப்‌பட்டிருக்கிறது என்று அறியவும்‌.
  • சன்னியால்‌ நாக்கில்‌ வரட்சியுண்டாகி, முட்கள்போல்‌ சதை வளர்ந்து கருமை நிறமாகும்‌.

நேத்திரப்‌ பரிட்சை

பசுமையாகயே பற்பவா னோடுகண்விழி பன்னீர்‌ பொசியு மேலது வாதமாம்‌ பொன்னிற முடைத்தாய்ப்‌ பிசிதமாகியே சிவந்திடும்‌ விழி யுயர்பித்த மசிதமாகியே நிறம்‌ விழிதருவதுமய்யே.

கண்விழிகள்‌ பசுமை நிறமடைந்து வெண்மையாகக்‌ கண்ணீர்‌ சொரிந்தால்‌ அது வாதத்தினாலாகும்‌. கண்ணீர்‌ பொன்‌ நிறத்‌துடன்‌ சொரிந்து, விழியும்‌ சிவந்து காணப்பட்டால்‌ கண்களில்‌ பித்தம்‌ அதிகரித்திருக்கிறதென்று அறியவும்‌.

மின்னிரெத்தமாய்‌ மஞ்சள்போல்‌ விழிதருஞ்சன்னி பொன்னி றத்தொடு பசுங்கழல்‌ போன்றுகா மாலைகள்‌ கன்னிகட்டிய பவளமாங்‌ கக்குவா மிருமல்‌ லுன்னியிப்படி நேத்திரப்‌ பரீட்சையென்‌ றுணரே.

கண்விழி வெண்மையாக இருந்து சிவப்பாகவோ அல்லது மஞ்சள்‌ நிறமாகவோ கண்ணீர்‌ பொழியும்‌. அப்போது சக்தியின்‌ குறியாகும்‌. மேலும்‌ சில சமயங்களில்‌ கண்கள்‌ காமாலையில்‌ காண்பதைப்போல்‌ நல்ல மஞ்சளாகவும்‌ காணப்படும்‌. அதிகச்‌ சிவப்பாகில்‌ கக்குவான்‌ இருமல்‌ என்றும்‌ அறிந்துகொள்ளவும்‌.

கண்குறி வாதரோகங்‌ உறுப்பொடு சிவப்பும்‌ நொந்து தண்புன லாயும்‌ பித்தந்‌ தன்னினி சிகப்புங்‌ காணும்‌ பண்புடன்‌ சேத்‌துமந்தா நாறியும்‌ பூளைசாறும்‌ வெண்சன்னிவாதம்பச்சை மிகுக்கில்கா மாலையாமே.

வாதரோகத்தில்‌ கண்கள்‌ கருப்பு நிறமாகவோ, சிவந்தோ காணும்‌. பித்தம்‌ அதிகரித்தால்‌ கண்களில்‌ எரிச்சலும்‌ சிவப்பும்‌ ஏற்படும்‌. கபம்‌ அதிகமானால்‌ நாற்றத்துடன்‌, பீளை அதிகரிக்கும்‌, பசுமை நிறமடைந்தால்‌ சன்னிபாதம்‌ என்றும்‌ அலை அதிகமானால்‌ காமாலை என்றும்‌ கண்டு கொள்ளவும்‌.

சலப்‌ பரீட்சை

மூத்திரக்‌ குறிகள்‌ கேளாய்‌ மொழிந்திடும்‌ வாதம்‌ வெண்மை காத்திர முத்தபித்தஞ்‌ சிவப்பொடு சிறுகும்‌ நீரும்‌ சேத்தும ரோகந்தானும்‌ நுரைப்பொடு சேர்ந்து வீழுஞ்‌ சாத்திரப்‌ படியே தொந்தம்‌ பலவிதந் தோணுந்தானே

வாதம்‌ அதிகமாகில்‌ சிறுநீர்‌ வெண்மையாக இறங்கும்‌. பித்தம்‌ மீறினால்‌ மூத்திரம்‌ சிவப்பு நிறத்‌துடன்‌ குறைந்த அளவில்‌ வெளியாகும்‌. கபம்‌ அதிகமானால்‌ நுரையுடன்‌ காணப்படும்‌. தொந்தமாகில்‌ எல்லாவித குறிகளுடனும்‌ இருக்கும்‌.

மலப் பரீக்ஷை

மலக்குறி வாதரோக மலமெத்தக் கருக்கும்‌ பித்தங்‌ கலக்கவே பசுக்குமல்லால்ச்‌ சிவப்போடு காணுஞ்‌ சிலேத்மம்‌ பெலக்கவே வெண்மை யாகுமல்‌ லது சீதமபேருந் துலக்கிய தொந்தரோகம்‌ பலவிதந்‌ தோணுமாதே.

வாதம்‌ அதிகரித்தால்‌ மலம்‌ கறுக்கும்‌. பித்தம்‌ பிரகோபித்தால்‌ பச்சை நிறமாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ மலம்‌ வெளியாகும்‌. கபம்‌ அதிகமானால்‌ மலம்‌ வெண்ணிறமாக இருக்கும்‌. பலவித நிறமாக இருந்தால்‌ அந்த தோஷத்தின்‌ குறிகளும்‌ இருக்கும்‌.

நாடி ஒடும்‌ கதிபேதங்கள்‌

குளுந்ததாலன்ன மோனான்‌ குதித்தடி வைத்தபின்னு மெழுந்தபாம்‌ போடியங்கு மியல்பது கண்டதாகில்‌ உளுந்துநெய்‌ முட்டைதன்‌னோடுத்தபால்‌ உடனத்தண்ணீர்‌ குழுந்தமாம்‌ பழமுமுன்னந்‌ தின்னதிற்‌ பின்‌னுண்டானே.

முதலில்‌ அன்னம்‌, ஓணான்‌, இவைகளின்‌ கதிகளில்‌ நடந்து உடனே பாம்பைபோல் நாடி நெளிந்தால்‌ உளுந்து, நெய்‌, முட்டை, பால்‌, தண்ணீர்‌, மாம்பழம்‌, சாதம்‌ இவைகளில் ஏதேனும் ஒன்றைச்‌ சாப்பிட்டிருப்‌பதாகச்‌ சொல்லவும்‌.

பின்னு அட்டைதானே பின்பிரிக் கோடிமேலே புண்ணின மன்னங்கோழி யுதறியே நடந்த பாம்பு தன்னிய தவளைமெற்ற ரிப்பரப்‌ புரளுமாகில்‌ நுன்னிய தானவெப்புத்‌ தன்னின்மே லுணர்வுசொல்வாம்‌.

முதலில்‌ அட்டையின்‌ நடையைப் போல்‌ ஊர்ந்து சென்று, பின்னர்‌ அன்னம்‌, கோழி, அல்லது பாம்பு இவைகளின்‌ நடையைப்‌ பின்பற்றினால்‌ உடம்பில்‌ சூடு அதிகரித்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும்‌.

கபநாடி லக்ஷணமும்‌, ஆஹாரங்களும்‌

சேத்துமத்‌ துற்றநாடி சிறப்பது தயங்கியட்டை யீட்டியே கோழியோனான்‌ யேத்தியே யியல்பிலாகில்‌ மூட்டிய பசியில்வாரி முன்னைநாள்‌ தயிருமிஞ்சி கூட்டியே சார்தலுண்ட குணமிது மடிகுளிர்ந்தே.

சேத்‌துமநாடி அட்டை, கோழி, ஒணான்‌ இவைகளின்‌ நடைகளைப்‌ பெற்றிருந்தால்‌ முந்தின தினத்தில்‌ தயிரும்‌ இஞ்சியும்‌ கூட்டிச்‌ சாப்பிட்டதாகத்‌ தெரிந்து கொள்ள வேண்டும்‌.

நாடியுணர்வு

மூலமேயெழுந்தநாடி முன்பிரிந்திரண்டுந் தோன்றில்‌ காலமே யுண்டாய கைப்பொடு தித்திப்‌பிட்டுக்‌ கோலமா மடநல்லாளே குமரியைக்‌ கோட்டி செய்து ஞாலமே யிரவிகோப நின்‌ றன நாடிதானே.

நாடிகள்‌ இரண்டாகப்‌ பிரிந்து காணப்‌பட்டால்‌ கைப்பு, தித்திப்பு இவைகளைச்‌ சாப்பிட்டதாகத்‌ தெரிந்து கொள்ளவும்‌.

29/11/18

கபதேகக்கூறு

அய்யவுட லிறுகல்மனஞ்‌ சிக்கென்னல்‌ தோகையர்பா லின்‌ பமெல்லாங்‌ கலந்து நீக்கி பொய்யினொடு களவொழிதல்‌ புலவர்‌ போற்றல்‌ பொருந்தவே யிருந்து பெறல்‌ புகழ்பாராட்டல்‌ மையமருந்‌ தலைமயிரு நீண்டுவருந் தாதுஉண்‌ டிபெறல்‌ மகிழ்ச்சி கூறல்‌ செய்யமலற்‌ றிருவே சேர்ந்‌ துவாழ்தல்‌ சேத்‌துமத்தின்‌ குணமெனவே செப்புவோம .
  • தேகம்‌ புஷ்டியாதல்‌,
  • ஸ்திரீ போகத்தீல்‌ இச்சை,
  • பொய்‌, திருட்டு இவைகள்‌ இல்லாமை,
  • புலவர்‌களால்‌ போற்றப்படும்‌ அறிவு வளர்ச்சி,
  • பொறுமை,
  • புகழ்ச்சி பெறுதல்‌,
  • தலைமயிர்‌ நன்றாக வளர்தல்‌,
  • எப்போதும்‌ சந்‌தோஷமாயிருத்தல்‌,
  • பண வசதிகளுடன்‌ (லஷ்மி கடாக்ஷம்‌) இருத்தல்
  • ‌ முதலான குறிகளால்‌ சிலேஷ்ம தேகி என்று தெரிந்து கொள்ளவும்‌.

பித்த தேகக்கூறு (பித்தப்பிரகிருதி)

பித்த தேகக்கூறு
நல்லதோ ரிளமைதனில்‌ தலைநரைத்த உடல்மெலிதல்‌ வேர்வெழுதல்‌ நயனங்‌ கடைசிவப்பச்‌ சொல்லுமுறை மெத்தனவா யிதம்பேசல்‌ துடியிடை மாதர்மே லின்பக்தோன்‌ றல்‌ காட்டல்‌ வில்லமரு நுதல்மடவார் விருப்பஞ்‌ செய்தல்‌ விளங்கியதோர்‌ பொய்யுரைத்தல்‌ வீரம்பேசல்‌ பல்லமரும்‌ பலகலை நூல்‌ பயிற்றல்‌ பாடல்‌ பயித்தியத்தின்‌ குணமிதெனப்‌ பகருவோமே,
  • இளமையில்‌ தலை நரைத்து விடல்‌,
  • உடம்பு மெலிதல்‌,
  • அதிக வியர்வை தோன்றல்‌,
  • கடைக்கண்கள்‌ சிவந்து போதல்‌,
  • இதமான வார்த்தைகளைப்‌ பேசுதல்‌,
  • ஸ்திரீகளின் மேல்‌ அதிகமான மோகம்‌,
  • பொய்‌ பேசுதல்‌,
  • வீரம்‌ பேசுதல்‌,
  • பற்பல கலை நூல்களைத்‌ தெரிந்து கொள்ளுதல்‌,
  • பாடல்களையும்‌ பாடுதல்‌,
  • இவைகள்‌ பித்தப்‌ பிரகிருதிகளின்‌ குறிகள்‌ ஆகும்‌.

வாதசரீரக்கூறு (வாதப்பிர கிருதி)

வாதசரீரக்கூறு
உத்ததொரு காரியத்தை மெத்தெனவும்‌ பேசலுள்ள தெல்லாங்‌ கருத்தாக வுரைப்பதல்லால்‌ மெத்தவரும்‌ பொய்யை மெய்யாய்‌ வியந்‌ அரைத்தல்‌ கனவினால்‌ மெய்‌ வருத்தல்‌ காணல்‌ சத்‌துமனஞ்‌ சலித்திருத்தல்‌ தன்புனலை விரும்பாதே தழலை வேண்டல்‌ மத்‌துமுடல்‌ தூலமாயி ருக்குமாகில்‌ வாதகுண மிதுவெனவே வகுக்கலாமே.
  • ஒரு காரியத்தைச்‌ செய்யுமுன்‌ அதிகமாகப்‌ பேசுதல்‌
  • பொய்யை உண்மை போலச்‌ சோடித்‌துப் பேசுதல்‌,
  • அடிக்கடி சொப்பனம்‌ உண்டாக அதனால்‌ உடம்பு பலவீனமடைதல்‌,
  • மனம்‌ நிலையில்லாமை,
  • உஷ்ணத்தில்‌ பிரியம்‌ உண்டாதல்‌,
  • உடம்பு ஸ்‌தூவித்துப்போதல்‌
  • முதலியவைகள்‌ குறிகளாகும்‌.
குறிப்பு:

ஆயுர்வேதக்‌ கிரந்தங்களில்‌ தேகம்‌ மெலிந்திருக்கும்‌ என்று கூறப்பட்டிருக்கிறது.

பித்த குணம்‌

உரத்தபித்தங்‌ கோபித்தா லுடலேயுழத்திக்‌ கொதிப் பெய்தும்‌ நிரைத்த மேனி மஞ்சணிக்கும்‌ நெறித்தல்வேர்வு நீீர்ப்பாய்தல்‌ விரைந்த லோடுபித்தமிது மிகவே மூச்சாய் சக்தியுமாய் பிரட்டும்‌ வாயும்‌ கைப்பினோடு புளிப்பு மாமென் றோதினரே
  • பித்தம்‌ பிரகோபமடைந்தால்‌ உடம்பில்‌ அனத்தலுண்டாகும்‌.
  • தேகமும்‌ மஞ்சள்‌ நிறமடையும்‌.
  • நரம்புவலி,
  • வியர்வை,
  • மூக்கிலிருந்து நீர்சொரிதல்‌,
  • அதிகமான மேல்மூச்சு,
  • விடாத வாந்தி,
  • வயிற்றுப்‌ பிரட்டல்‌,
  • வாயில்‌ புளிப்பு, அல்லது கசப்புச்‌ சுவை முதலானவைகள் உண்டாகும்‌.
மெய்யே நிக்குந்‌ தலைவலிக்கு மேனிலெனிருங்‌ கண்‌ தூங்கு பொய்யே துயருங்‌ கிருகி ரென்னும்‌ போதாயன மஞ்சணித்துக்‌ கைகால்‌ கடுத்து நீர்சிவந்து கண்ணு முகமுஞ்‌ சன்னிகட்டி மையார்‌ மேனி யனல்‌ மீறி வருமே பித்த குணமாமே.
  • உடம்பில்‌ நடுக்கம்‌,
  • தலைவலி,
  • உடல்‌ வெளுமை நிறமடைதல்‌,
  • தூக்கம்‌,
  • தலைக்கிருகிருப்பு,
  • கண்களில்‌ மஞ்சள்‌ நிறம்‌,
  • கைகால்‌ கடுப்பு,
  • மூத்திரம்‌ சிவந்து இறங்குதல்‌,
  • கண்‌ முகம்‌ முதலியவை அதைத்துக் காணுதல்‌,
  • காங்கை
  • முதலான குறிகளும்‌ காணும்‌.

28/11/18

வாதத்தின்‌ குணங்கள்‌

வாதத்தின்‌ குணமேதென்னில்‌ மயங்குந்தியங்கும்‌ மலர் சிவக்கும்‌ பாதங்‌ குளிர்ந்து சருவாங்கம்‌ பற்றிநடக்கு முகங்கடுக்குஞ் சீதத்‌துடனே வயிறுபுண்ணாஞ்‌ சிரிப்பித்துந்‌ தெறி மூச்சாம்‌ போதத்‌ தண்ணீர்‌ தான்வாங்கும்‌ புகழும்பஞ்ச குணமாமே.
  • மயக்கமுண்டாகும்‌.
  • கண்கள்‌ சிவக்கும்‌.
  • கால்கள்‌ சில்லிட்டுப்‌ பின்னர்‌ உடலும்‌ குளிர்ந்து விடும்‌.
  • முகத்தில்‌ குத்து வலியேற்படும்‌. வயிறு புண்ணாகிச்‌ சீதம்‌ விழும்‌.
  • பெருமூச்சுண்டாகும்‌.
  • தண்ணீர்த் தாகம் ஏற்படும்‌.
வாத்தின்‌ குணத்தைச்‌ கேண்மன்‌ வயிறூதும்‌ பொருமிக்கொள்ளும்‌ தாதுற்றவுடம்புகைகால்‌ சந்துகள்‌ கடுப்புத்‌ தோணும்‌ தீதுற்ற சிறுநீர்தானுஞ்‌ சிவந்துடல்‌ கடுத்து வீழும்‌ போதுற்ற வுப்புசமாய்‌ போதவும்‌ பசித்திடாதே.
  • வயிறு ஊதிப் பொருமலுண்டாகும்‌.
  • கை, கால்‌, உடம்பு, தொடையிடுக்கு முதலான இடங்களில்‌ கடுப்பு (வேதனை) அதிகரிக்கும்‌.
  • சிறுநீர்‌ சிவந்து, கடுப்புடன்‌ வெளியாகும்‌.
  • பசி மந்திக்கும்‌.
கால்கை கடுக்குந் திமிருண்டாங்‌ கண்ணுந் தூங்கிச்‌ சோபிக்கும்‌ கோலஞ்செய்யு மங்கமெல்லாங்‌ குளிர்ந்த சந்துகனங் கொள்ளுஞ் சீலமிருந்து சீர்காணில்‌ சிறுநீர்வற்றி வருமிகவே மாலத்‌ தடங்கண்‌ மானனையாய்‌ மாதே வாத ரோகமிதே
  • கைகால்களில்‌ மதமதப்புடன்‌ வேதனையுண்டாகும்‌.
  • கண்கணைச்‌ சுற்றிலும்‌ வீக்கமுண்டாகும்‌.
  • உடலில்‌ குளிர்ச்சி உண்டாகும்‌.
  • தொடையிடுக்கில்‌ வீக்கம்‌ காணப்படும்‌.
  • சிறுநீர்‌ குறையும்‌.

இவைகள்‌ வாதம்‌ அதிகரித்ததன்‌ குறிகளாகும்‌.

Download a book

27/11/18

வாதரோகங்களின்‌ இருப்பிடம்‌

எண்பது வாதமாகு மிநவகைப்‌ பகுத்துக்காணில்‌ நன்புறு அரைக்குமேலே நாற்பது வாதமாகும்‌ பண்புசே ரரைக்குக்கீழே பத்துநான்‌ காதமென்று வண்டுசேர்‌ குழலினாளே ! வாதத்தின்‌ கூறுதானே.

80 வகை வாதரோகங்களுள்‌ தொப்புளுக்கு மேலே நாற்பது வகைகளும்‌, கீழே 80 வகைகளும்‌ உடலை வறுத்தும்‌.

26/11/18

தேகத்தில்‌ பித்த கபம்‌ அதிகரித்தால் உண்டாகும்‌ குறிகள்‌

தாகமும்‌ வெப்புமுண்டாய்த்‌ தலைவலிதானு முண்டாய்க்‌ கூசியே நளுநளுந்து கொடியதோர்‌ தித்திப்புண்டாய்‌ வேகமும்‌ வெறுப்புமுண்டாய்‌ விழிகளும்‌ சிவந்துகொள்ளும்‌ பாகுசேர்‌ மொழியினாளே! பயித்‌தியச்‌ சிலேத்‌துமமே.

உடம்பில்‌ எரிச்சல்‌, தலைவலி, நளிர்சுரம்‌, வாயில்‌ தித்திப்புச்‌ சுவை, கண்களில்‌ சிவப்பு இவைகள்‌ உண்டானால்‌ பித்தமும்‌ கபமும்‌ பிரகோபித்திருக்கின்‌றதென்று அறிந்துகொள்ளவும்‌.

தேகத்தில்‌ கபம்‌ அதிகரித்தால் உண்டாகும்‌ குறிகள்‌

அன்‌றியேசிலேத்‌ துமத்துக்‌ கடையான முடம்பு வேர்க்கும்‌ நன்றென உமிழ்நீர்‌ நாறும்‌ நாவது வெளுத்திருக்கு மொன்றிய சிறுநீர்‌ தானு முன்மையா யிழைத்துவீழு மன்றினில்‌ தோஷந்தன்னை வாக்கினாலறிந்து சொல்வாம்‌.
  • உடம்பு வியர்க்கும்‌.
  • உமிழ்நீர்‌ நாற்றத்‌துடன் இருக்கும்‌.
  • நாக்கு வெளுத்திருக்கும்‌.
  • சிறுநீர்‌ அதிகரிக்கும்‌.

இவை கபம்‌ அதிகரித்ததன்‌ குறிகளாம்‌.

25/11/18

சிலேத்தும கோப லக்ஷணம்‌

மியல்பிலா நாடி ப்பற்றி யொன்றேகிடி லெழுமியவாதநாடி துயர்தரு மொன்றிரண்டில்‌ தோன்றிடில்‌ பித்தநாடி மயல்தரு மொன்றிரண்டில்‌ மாண்டிடு மற்றநாடி கயல்கள்வேற்‌ கண்ணினாளே கல்லாதாய்‌ குறையுந்தானே.
தகைகூற்சிலேத்மங்கோபித்தால்‌ தயங்குமனமுமுள்கலங்கு மிகவேகுளிர்ந்து கொதிப்பெய்தும்‌ வீக்கம்‌ பலவாய்‌ விதராகும்‌ முகமேகைகால்‌ தான்வெளுத்து மூக்க நீர்ப்பாய்க்‌ காசமுமாய்த்‌ துகனோய்‌ தானே பாரிக்குந்‌ தூங்கமுறக்கந் துணுக்கமுமே.

கபம்‌ பிரகோபமடைந்தால்‌ மனவேதனை உண்டாகும்‌. தேகம்‌ திடீரெனக்‌ குளிர்ச்சியடைவதனால்‌ உஷ்ணம்‌ அதிகரிக்கும்‌. வீக்கமும்‌ உண்டாகும்‌. கை கால்கள்‌ வெளுத்துவிடும்‌. மூக்கிலிருந்து நீரொழுகும்‌. சிறு இருமலும்‌ உண்டாகும்‌. தூக்கமும்‌ அதிகரிக்கும்‌

21/11/18

தேகத்தில்‌ நாடி இருக்கும்‌ விதம்‌

மிகுத்‌.துட நாடிதானு மரத்தினைப்‌ பின்னினாப்‌ போல்‌ துதித்‌துவெள்‌ ளெலும்பைச்சுற்றித்‌ துயருடன்‌ வாங்குமாகில்‌ விதித்ததோர்‌ விதியினாலும்‌ வி....மையென்று கதிக்கவே நாடிபார்த்துக்‌ கற்றவர்‌ கூறினாரே

ஒரு கொடியானது மரத்தைச் சுற்றி பின்னிக் கொண்டிருப்பதைப் போல்‌, தேகத்திலுள்ள எலும்பை நாடிகள்‌ சுற்றி ஏறும்‌.

வாத சிலேத்ம லக்ஷணம்‌

அல்லல்செய்யு மழத்‌துமுடம்பெல்லாம்‌ நல்லதாக நாக்குக்‌ குளறிடும்‌ வில்லைப்போல வளைத்துடல்‌ மேவிடும்‌ வல்லவாத பயித்திய ச்லேத்மமே
  • உடம்பு அனல்போல்‌ கொதிக்கும்‌.
  • நாக்குக்‌ குளரும்‌.
  • உடம்பு வில்லைப்போல்‌ வளையும்‌.

இவை வாத கப நாடி லக்ஷணமாம்‌.

20/11/18

பித்தநாடி லக்ஷணம்‌


.
வீழ்ந்திடு பித்ததோஷம்‌ வெதுப்பிநா வரண்டு கொள்ளும்‌ தாழ்ந்‌துகண்‌ சுழன்‌றுகொள்ளு தலையது கிறுகிறென்னுஞ்‌ குழ்ந்துநாச்‌ சிவந்து புண்போல்‌ தொண்டையும்‌ நொந்துகாணும்‌ வாந்தியா யுடல்நடக்கு மஞ்சணித்‌ திருக்குமன்‌றே
  • பித்தநாடி அதிகரித்தால்‌ நாவரட்சி அதிகமாகும்‌.
  • கண்கள்‌ சுழலும்‌.
  • தலை கிறுகிறுப்பு ஏற்படும்‌.
  • நாக்குச்‌ சிவப்பாகி வெந்து தொண்டையில்‌ விரணங்களேற்‌படும்‌.
  • அடிக்கடி வாந்தி உண்டாகும்‌.
  • தேகம்‌ மஞ்சள்‌ நிறத்தையடையும்‌.

பித்தவாத நாடி லக்ஷணம்‌

பித்தமும்‌ வாதந்‌தானும்‌ பிணங்கி ஓடுமாடல்‌ சத்தமா முடல்குளிர்ந்து சார்ந்திடு மிருமல்வந்து மெத்தென விரும்பிப்‌ பின்னை வொத்திடு முடல்கள்‌ நாவு நெத்தியும்‌ வெளுத்திருக்கும்‌ நேரிது கூறினோமே
  • பித்தமும்‌ வாதமும்‌ சேர்ந்து நின்றால்‌ உடலில்‌ குளிர்ச்சியேற்படும்‌.
  • இருமல்‌ அடிக்கடி உண்டாகும்‌.
  • தேகம்‌, நாக்கு, நெற்றி முதலான இடங்கள்‌ வெண்மையாக இருக்கும்‌.

19/11/18

வாத கப நாடி லக்ஷணம்‌

வாதமு மய்யந்தானும்‌ வலுப்பெற நிற்குமாகில்‌ மோதிய வியா திதீர மூன்றுநாள்‌ செல்லுமென்க ஆதலால்‌ பித்தநாடி யடைந்துற வலுவாய்‌ நிற்‌கி லூனமா யுடலில்‌ நோய்க ஞண்டென மொழிபவற்குத்‌ தானமாம்‌ நாடிதானும்‌ தான்வலுவாக ஓடில்‌ கானமாங்‌ குழலினாளே! காய்ச்சலுண்டெண்ணலாமே

வாதமும்‌ கபமும்‌ அதிகரித்து நின்றால்‌ 8 நாளில்‌ வியாதி தீரும்‌, பித்தம்‌ அதிகரித்தால்‌ காய்ச்சல்‌ உண்டாகும்‌.

வாத பித்தநாடி லக்ஷணம்‌

மயிலென நடக்குமாகில்‌ வாதத்தினோடு பித்த ... விடுகர மாறுநாளை யிலருதி யாகுங்‌ குயிலெனு மொழியினாளே கூடியவிரண்டு மாத மருகிடா நோயுமந்‌ தானதென்றறிந்து கொள்ளே.

வாதமும்‌ பித்தமும்‌ மயில்போல்‌ அசைந்து நடந்தால்‌ ஜ்வரம்‌ 6 நாளையில்‌ தீரும்‌. அப்படித்‌ தீராவிட்‌டால்‌ 2 மாதத்தில்‌ நிற்கும்‌.

நாடி பார்க்கும்‌ விதம்

முன்‌றுவிரலாம்‌ பெருவிரற்கீழ்‌ முனிவர்தான்‌றி முன்‌ பார்க்கத்‌ தோன்றும் வாதம்‌ நடுப்பித்தந்‌ துலையாச்‌ சேத்தும மிடத்‌ தென்ப கான்று மிகவுங்‌ கரமாயக்‌ கடுகிநடக்கு மவைகண்டால்‌ ஊன்றும்‌ விரலை விட்டுவிட்டு உபசாரமாய்‌ நடப்பாயே.

நோயாளியின்‌ வலது கைக்கட்டை விரலுக்குக்‌ கீழ் வைத்தியர்‌ தன்‌ மூன்று விரலையும்‌ ஊன்றிப்‌ பார்க்க, முதல்‌ விரலில்‌ வாதமும்‌, நடுவிரலில்‌ பித்தமும்‌, கடைசி விரலில்‌ கபமும்‌ ஒடும்‌. பின்னர்‌ இம்மூன்று விரலினாலும்‌ விட்டு விட்டு ஊன்‌றிப் பார்க்கவும்‌.

18/11/18

கப நாடிகளின்‌ மரணக்குறி

ஐயமாஞ்‌ சிலேத்‌துமத்துக்‌ காகிய நாடிதானுந் தொய்யவே தவளைபோலத்‌ தொங்கியே குதித்திட்டாலும்‌ பையவே புரண்டிழுத்‌துப்‌ பாம்பென நடைகொண்டாலு மையணி குழலினாளே மரணமென்‌ றுரைக்கலாமே.

கபநாடிக்குண்டான இயல்பின்‌ படி, அது தவளை போல்‌ தத்தித்‌ தத்திக்‌ குதித்தாலும்‌, புரண்டு இழுத்‌துப்‌ பாம்பைப் போல்‌ நெளிந்து சென்றாலும்‌ ரோகி மரணமடைவான்‌ என்று சொல்லவும்‌.

பித்தத்தின்‌ குறி குணம்‌

பித்தகாடி நடக்கும்‌ பொழு தெல்லா மெத்த வேநெறித்‌ தேடிய வத்தல முத்தமாழி யிருக்குஞ்‌ சரக்கெனச்‌ சத்தியாகுஞ்‌ சுடரொனி தாங்குமே .

பித்தம்‌ தேகத்தில்‌ அதிகரித்தால்‌ வாந்தியெடுக்கும்‌.

17/11/18

வாதநாடிக்‌ குறி குணம்‌

ஆனதோர்‌ வாதனாடி யடைந்துற வலுவாய்‌ நிற்கி லூனமா யுடலில்நோய்க ளுண்டென மொழிபவற்குத்‌ தானமாய்‌ நாடிதானும்‌ தான்வலு வாகவோடில்‌ கானமாங்‌ குழலினாளே காய்ச்சலுண்‌ டெண்ணலாமே.

வாதநாடி வலுவாக ஓடினால்‌ உடலில்‌ காய்ச்‌சல்‌ நோய்‌ (ஜ்வரம்‌, காங்கை, முதலியவை) அதிகரிக்கும்‌ என்று தெரிந்து கொள்ளவும்‌.

ருசியும்‌ தோஷமும்‌

சேத்தும மெழும்பிநிற்கில்‌ தித்திப்பு மிகவேயுண்டாம்‌ மேத்திய புளிப்பு மீறி லியல்புடல்‌ வாதமாகு மாத்திய கசப்பு மீறில்‌ வந்திடும்‌ பித்தமென்று யேத்திய முனிவர்தானு மியல்புடன்‌ விளம்பினாரே.

  • கபம்‌ தேகத்தில்‌ அதிகரித்தால்‌ வாயில்‌ இனிப்புச்‌ சுவை உண்டாகும்‌.
  • புளிப்பு வாயில்‌ நின்றால்‌ வாதம்‌ அதிகரித்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும்‌.
  • வாயில்‌ கசப்புச்‌ சுவை ஏற்பட்டால்‌ பித்தம்‌ அதிகம்‌ என உணர்ந்து கொள்ளவும்‌.

16/11/18

சகடநாடி லக்ஷணம்‌

திறல்‌ செய்‌ விரலைப்‌ பற்றிச்‌ செய்ததோர்‌ கருதில்‌ மூன்றாய்‌ பிறியவே சகடநாடி பின்னெழு வாத நாடி அறியவு தரங்கோ பித்‌ தட்சியே பித்தந் தோன்றில்‌ உறுபிணி தணிய வென்று ஒதுங்கியே நிற்குந்தானெ.

விரல்களைப்பற்றி நாடி பார்க்கையில்‌ ஒவ்வொரு நாடிகளையும்‌ மும்மூன்றாய்‌ பிரித்தால்‌ சகட நாடியாகும்‌. வாதம்‌ ஒதுங்கி நின்றால்‌ வயிறு வேதனை என்றும்‌, பித்தம்‌ ஒதுங்கி நின்றால்‌ பிணிகள்‌ தீருவதற்கென்‌றும்‌ தெரிந்து கொள்ளவும்‌.

அசையெனும்‌ நாடிபார்க்‌க லதிகப்பட்டா லக்கனியா மிசையுமுடம்பு சேத்‌துமங்க ளிழைத்‌து நடக்கில் சாவாகும்‌ வசையின்‌ துடியி னிசையாளே! வாத பித்தச்‌ சிலேத்துமங்‌ கசையுந்‌ தன்னில்‌ நேரொத்தால்‌ கருமம்‌ முடியுங்‌
கள்‌ கனங்குழலே!

நாடிகள்‌ அதிகமாகத்‌ தோன்றல்‌ அக்கினியை போலதாகும்‌. உடம்புடன்‌ கபம்‌ இழைந்து நடந்தால்‌ மரணம்‌ என்று கொள்ளவும்‌. வாத, பித்த, கபங்கள்‌ எல்லாம்‌ ஒன்று சேர்ந்தாலும்‌ மெள்ள நடந்தாலும்‌ மரணம்‌ ஆகும்‌.

வாதந்தான்‌ காலிற்தோன் றும்‌ வயிற்றினிற்‌ பித்தஞ்சேரும்‌ சேதமே செய்யுமய்யஞ்‌ சித்திரத்‌ திடக்கண்‌ மாதே! நாதனா ரருளிச்செய்த நாமிது தூசு பாரில்‌ வேதநூல்‌ விதியிதென்று விளம்பினர்‌ பெரியோர்‌ தாமே,

வாதநாடி காலில்‌ இருக்கும்‌, பித்தமோ வயிற்றில்‌ இருக்கும்‌, கப நாடி உடலை நசிக்கச் செய்யும்‌.

15/11/18

காய்சலுக்கான நாடி லக்ஷணம்‌

ஆனதோர்‌ வாதநாடி யடைந்துற வலுவாய்நிற்கு மூனமா யுடலிற்‌ நோய்க ளுண்டென மொழிபவர்க்குத்‌ தானமாய்‌ நாடிதானுந்‌ தான்வலு வாகியோடிற்‌ கானமாங்‌ குழலினானே ! காய்ச்சலுண்‌ டாகுந்தானே.

வாத நாடி வலுப்பெற்றிருந்தால்‌ காய்ச்சல்‌ என்று தெரிந்து கொள்ளவும்‌.

14/11/18

விஷகலை நாடி நிலமை

விஷகலை தன்னில்‌ நாடி வெறவற ஓடியேதான்‌ மசகாமல்‌ மீளுமாகில்‌ மரிப்பது மில்லையென்க வசைநரம்‌ பதனிலுன்னி யஞ்சயின்‌ னவத்தையாகுங்‌ கசநரம்‌ பதனிலுன்னிக்‌ கத்தினாற்‌ காலந்தானே.

விஷகலையில்‌ நாடி சென்று, பின்னர்‌ வந்த வழியே திரும்பினால்‌ அவர்களுக்குச்‌ சாவு இல்லை என்று சொல்லவும்‌. வசை நரம்பில்‌ நாடி துடித்தால்‌ அவஸ்தையைக்‌ கொடுக்கும்‌. கச நரம்பில்‌ பேசினால்‌ மரணம்‌ என்று அறியவும்‌.

வெள்ளம்போ லோடியேதான்‌ மீளுமாய்‌ மிமையொன் றில்லை பள்ளமீன்‌ நஞ்சையுண்டு பறந்‌துடன்‌ குதித்தாப்போலே தெள்ளிய வசைநரம்பு தெரிந்ததால்‌ தீதுண்டென்னுங் கள்ளமார்‌ தாண்டை கீழே கத்தினால்‌ காலந்தானே

8 நாடிகளும்‌ மடைதிறந்த வெள்ளம்போல்‌ ஒரே சீராகச்‌ சென்று திரும்பினாலும்‌ கெடுதல்‌ இல்லை. நஞ்சைத் நின்ற மீன்‌ குதித்துத்‌ துள்ளுவதைப் போல வசை நரம்பில்‌ நாடிகள்‌ குதித்தால்‌ கெடுதல்‌ ஏற்படும்‌. தொண்டைக்குக்‌ கீழே நாடி பேசினாலும்‌ மரணம்‌ ஏற்படும்‌.

13/11/18

நாடிகளின்‌ கதிபேதங்கள்‌

ஏகிய நாடிமூன்று மியம்பிடிற்‌ சந்தியாகு மாகிய வன்னங்கோழி மயிலென நடக்கும்‌ வாத வாகிய வாமையட்டை யவையென நடக்கும்‌ பித்தம்‌ போகிய தவளை பாம்பு போலது மய்யந்தானே.

கை பார்க்கையில்‌ வாதம்‌, பித்தம்‌, கபம்‌ ஆகிய மூன்று நாடிகளும்‌ படபட என்று பேசினால்‌ சந்நி என்று உணரவும்‌.

  • வாத நாடி, அன்னம்‌, கோழி, மயில்‌ இவைகளின்‌ நடையை ஒத்திருக்கும்‌ (அசைந்து அசைந்து செல்லும்)
  • பித்தநாடி, ஆமையின்‌ கதியையும்‌, அட்டையின்‌ கதியையும்‌, (நேராக ஊர்ந்து செல்லுதல்‌) பெற்றிருக்கும்‌.
  • கப நாடியே தவளையின்‌ கதியையோ, பாம்பின்‌ கதியையோ கொண்டிருக்கும்‌. (தத்தி விழுதல்‌, நெளிதல்‌ முதலிய கதி)

12/11/18

வாத, பித்த, கப நாடிகளின்‌ வலிமை

பித்தத்திற்‌ பெரிது வாதம்‌ பெருத்ததிற்‌ சிலேத்‌துமந்தான்‌ சத்தியில்‌ மாந்தரதழ நூறக்கால்‌ வாதமாம்‌ சித்தமாய்‌ மரிக்கும்போது சிலேத்‌தும மிடுக்கதாகு மத்தமா முனிவர்‌ சொன்ன வாகட நூலின்வாறே.

இவ்வித நாடிகளில்‌ பித்தம்‌ மிகக் குறைந்த பலமுள்ளது. அப்பால்‌ வாதமும்‌, கபமும்‌ மிக பலமுள்ளதாக இருக்கிறது. மனிதன்‌ இறக்கும்‌ போது கபம்‌ அதிகரித்திருக்கும்‌.

தினத்தில்‌ நாடியின்‌ நிலமை

உத்தம நாடி தானு மொடுங்கிநிலை பெறிற்‌ பத்திநின்று படிகள்‌ முழங்கிடிற்‌ - சித்தமாங்‌ காலை வாதங்கடும்பகற்‌ பீத்தமா மாலை அய்யம்வறிற்‌ குரிதுப்பாரே.

காலை நேரங்களில்‌ வாதநாடியும்‌, மத்தியானத்‌தில்‌ பித்தநாடி அதிகமாகவும்‌, மாலையில்‌ கபநாடி அதிகரித்‌தும்‌ காணப்படும்‌.

11/11/18

வியாதியின்‌ தன்மை

நாடிகளின்‌ கநிபேதத்‌திலிருந்து வியாதியின்‌ தன்மையை அறிதல்‌
முன்னமே யோடி நாடி மூன்றையும்‌ பிரித்துக்‌ காணில்ப்‌ பின்விசைந்‌ தோடுமாகில்‌ பிணியது பெரிதுண்டென்னும்‌ தன்னிலே நேராயோடில்‌ தாழ்வில்லை யென்று சொல்லும்‌ அன்னமின்னிடையினாளே! ஆக்கையின்‌ கூறுதானே.

நாடிகள்‌ மூன்றும்‌ ஆரம்பத்தில்‌ முன்னால்‌ ஓடிப்‌ பின்னர்‌ கொஞ்சம்‌ பின்னோக்கிச்‌ சென்றால்‌ வியாதி பலத்தது என்‌றறியவும்‌, நாடிகள்‌ முன்னோக்கி்யே சென்‌றால்‌ வியாதி குணமாகும்‌ என்று அறிந்து கொள்ளலாம்.

10/11/18

வாத, பித்த, கப நாடிகளின்‌ ௧தி

அன்னமே கோழியோனான்‌ மயிலென நடக்கும்‌ வாதம்‌ பின்னை சேர்ராமை யட்டைப்‌ பெருத்திடு பித்தமாகும்‌ சொன்‌னவாய்‌ மொழியினாளே சுத்திய தவளை பாம்பு முன்னமே அய்யமென்று மொழிந்தனர்‌ முனிவோர்தாமே.

வாதநாடி கோழி, ஒணான்‌, மயில்‌ இவைகள்‌ நடப்பதைப்‌ போலவும்‌, பித்தநாடி ஆமை, அட்டை இவைகளின்‌ நடப்பைப் போலும்‌, கபநாடி. தவளை, பாம்பு இவைகளின்‌ கதியைப்‌ போலவும்‌ நடக்கும்‌.

இவைகளைப்‌ பழக்‌கத்தினால் தெரிந்து கொள்ளவும்‌.

ஸ்‌திரீ புருஷர்களுக்கு நாடி பார்க்கும்‌ விதம்‌

மருவுமெய்க்‌ குற்‌றநாடி மதித்திடில்‌ வலக்கை மாந்தர்‌ அரிவையர்க்‌ கிடக்கைனாடி யமுக்கியே சுட்டாய்‌ மூட்டி விரைவினில்‌ வெய்யவாத மிகாடு விரலிற் பித்தந் தருமணி விரலிலய்யந்தானென வறிந்து சொல்லே,

புருடர்களுக்கு வலக்கையின்‌ நாடியைப்‌ பிடித்துப்‌ பார்க்கவும்‌. ஸ்திரீகளுக்கோ இடதுகை நாடியைப்‌ பார்க்கவும்‌. அப்படிப்‌ பார்க்கையில்‌ மோதிரவிரலில்‌ கபமும்‌, நடுவிரலில்‌ பித்தமும்‌, ஆள்காட்டி விரலில்‌ வாதமும்‌ பேசும்‌.

9/11/18

நாடி பார்க்கும்‌ விதம்‌

பார்க்கிலோ மணிக்கட்டங்கைப்‌ பற்றியே நெட்டிவாங்‌கி ஏர்க்கமூ விரலால்தொட்டு யெழுந்தான்‌ நாடிதன்னைக்‌ கூர்ப்புரப்‌ பார்த்‌து நேர்மை குறைதலுள்வாங்கல்‌ மூன்றில்‌ சீர்கொள நின்‌றநாடித்‌ திருக்கரச்‌ செப்புமன்றே

நோயாளியின் நாடியைப் ‌ மணிக்கட்டைப்‌ பிடித்துக்‌ கொண்டு நெட்டிவாங்கி்‌ மேற்கூறிய 8 விரல்களினாலும்‌ நாடியைப்‌ பரீக்ஷை செய்து தோஷத்தின்‌ நேர்மை, தோஷத்‌தின்‌ குறைவு, நாடியின்‌ மிகவும்‌ குறைந்த நிலைமை, முதலானவைகளை அறியவும்‌.

7/11/18

கை நாடிகளின்‌ இருப்பிடம்‌

கரிமுக னடியை வாழ்த்திக்‌ கைதனில்‌ நாடி பார்க்கில்‌ பெருவிர லங்குலத்தில்‌ பிடித்‌துட னடுவே தொட்டா லொருவிர லோடில்‌ வாத முயர்நடு விரலிற்‌ பித்தந் திருவிரல்‌ மூன்றி லோடில்‌ சிலேத்தும நாடியாமே.

கணபதியை மனதில்‌ தியானித்துப்‌ பிணியாளனின்‌ வலது கைப்‌ பெருவிரலிற்கு மேல்‌ 1 அங்குல அளவில்‌ மோதிர விரல்‌, பாம்பு விரல்‌, ஆள்காட்டி விரல்‌ இவைகளைக்‌ கூட்டி வைத்து அவனது நாடியைப்‌ பரீக்ஷிக்‌கவும்‌. மோதிர விரலில்‌ ஓடும்‌ காடி கபமும்‌, மத்திய விரலில்‌ பித்தமும்‌, ஆள்காட்டி விரலில்‌ வாதமும்‌ புலப்படும்‌.

6/11/18

நாடி பார்க்கக்கூடாத நிலைமை

எண்ணெயிற்‌ றலையினோடு மாரமாய்‌ நின்றபோது முன்னு நல்‌ லுணர்வினோடு மூண்டவப்‌ பசியினோடு திண்மையாய்‌ நடந்தபோது திரிசங்கை மீண்டபோது பண்ணிய நாடி பார்க்கில்‌ பலித்திடாதென்று சொல்லே,

பினியாளன்‌ எண்ணெய்த் தலையுடன்‌ இருந்‌தாலும்‌, வேலையின்‌றி நின்‌றிருந்தாலும்‌, நல்ல பசியுடன்‌ இருந்தாலும்‌, வேகமாய்‌ நடந்து வந்திருந்தாலும்‌, சந்தேகமுள்ளவனாக இருந்தபோதும்‌ நாடி பார்‌க்கில்‌ அப்போது அது நன்றாக விளங்காது. அதாவது அந்த நேரம் நாடி பார்த்தல் கூடாது.

5/11/18

நாடி பார்த்தல்

நாடி நிதானம்
ஏறியுங்‌ குறைந்து நின்று, மிட்டதோர்‌ குணத்தைக்‌ கூறிற்‌ கூறிய குணம்‌ பிராயம்‌ குறைவில்லாச்‌ சுகம்‌ வறட்சிப்‌ பாறிடு குணங்கள்‌ தன்னில்‌ பற்றிடு சுக்கி்லத்தில்‌ வேறீடு குணங்கள்‌ தன்னை விரித்துட னாய்ந்து சொல்லே,

வாத, பித்த கப நாடிகளின்‌ ஏற்றத்‌ தாழ்வுகள்‌, நோயானியின்‌ குணம்‌, வயது, ஆரோக்கியம், வறட்சி, முதலியவைகளையும்‌ தெரிந்து சொல்ல வேண்டும்‌.

4/11/18

தேக பரீக்ஷை

நாடியால்‌ முன்னோர்‌ சொல்லும்‌ நன்குறிக்‌ குணங்களாலும்‌ நீடிய விழியினாலும்‌ நின்றெழு வெயிலினாலும்‌ கூடிய குணபாடந்தான்‌ குறித்‌துடன்‌ பார்த்துப்‌ பின்னும்‌ சூடிய குணங்களாலே சுகப்பட அறிந்து சொல்லே

விளக்கம் :

நாடிகளின்‌ குறி குணங்களாலும்‌, விழியைப்‌ பரிஷிப்பதனாலும்‌, வெயிலினாலும்‌ (காலபேதம்‌), குண பாடங்களை அறிந்து உபயோகப்படுத்தியும்‌ நோயாளியின்‌ தேக சுகத்தை அறிய வேண்டும்‌.

3/11/18

சரீர அமைப்பு

என்புறு நரம்பினாலே இயல்புறப்‌ பிணித்துப்‌ பின்‌னை யன்புறு சதையைப்பாவி யதிலுறு தோலைப்போற்றி நன்புறு நிணமு மூளை நன்னிரத்‌ தமதாகித்‌ துன்புறு வியாதிதோன்றும்‌ நாடிகள றிந்து சொல்லே,
விரும்பிய உடற்கண்‌ ணெங்கு மேவியே கலந்‌ துநிற்கும்‌ நரம்பென்னும்‌ நாடிதன்னை நல்லசாஸ்த்‌ திரத்தினாலே திருந்தவே யோதியோர்ந்தோர்‌ தெளிவுறப்‌ பார்க்க(ட)க்‌ கேட்டு அறிந்தபாத்‌ திருத்துநாடி யடவுட னுரைக்கலுற்றேன்‌.

சரீரம் என்றால் உடல் என்று பொருள். சரீரம் எவ்வாறு சிருஷ்டிக்கிறது என்று இப்பாடல் விளக்குகிறது. இச்சரீரத்தில்‌ காணும்‌ எலும்புகளை முதலில்‌ நரம்பினால்‌ பிணைத்து, பின்னர்‌ அதன்மேல்‌ சதையைச்‌ சிருஷ்டித்‌துக்‌ காத்ரமாகச் செய்து தோலைப்‌ போற்றியிருக்‌கிறார்‌. பின்னர்‌ நிணம்‌, மூளை, இரத்தம்‌, வியாதிகளைத்‌ தோற்றுவிக்கும்‌ நாடிகள்‌ முதலானவைகள்‌ உண்டாகின்றன. வியாதிகளைத்‌ தோற்றுவிக்கும்‌ நாடிகள்‌ உடல்‌, கண்‌ முதலான உறுப்புகளில்‌ கலந்து நிற்கின்றன.

2/11/18

வாததோஷம்‌

ஆயுர்வேதங்களில் வாததோஷம்‌ அதன்‌ ஸ்தானத்‌தையும்‌ செய்கைகளையும்‌ அனுசரித்து 5 வகையாகப்‌ பிரிக்கப்பட்டிருக்கிறது.

  1. பிராண வாயு
    • மார்பு, கழுத்து முதலான இடங்‌களில்‌ சஞ்சரிக்கும்‌.
    • புத்தி, இருதயம்‌, மனது, இந்திரியங்‌கள்‌ முதலானவைகளுக்கு வன்மை தரும்‌.
    • துப்புதல்‌, தும்‌மல்‌, ஏப்பம்‌, மூச்சு விடுதல்‌ முதலான காரியங்களைச் செய்வதுடன்‌ வாயில்‌ போட்டுக் கொண்ட ஆகாரத்தை வயிற்றுள்‌ செலுத்தும்‌.
  2. உதான வாயு
    • இருப்பிடம்‌ மார்பு.
    • மூக்கு முதல்‌ தொப்புள் வரை சஞ்சரிக்கும்‌.
    • பேச்சு, முயற்சி, காந்தி, பலம்‌, வர்ணம்‌ (தேகநிறம்‌] ஞாபக சக்தி இவைகளையளிக்கவல்லது.
  3. வியான வாயு
    • இருப்பிடம்‌, இ்ருதயம்‌,
    • சரீரமெங்கும்‌ சஞ்சாரம்‌ செய்யும்‌,
    • நடத்தல்‌, நீட்டல்‌, சுருக்கல்‌, கண்களைச்‌ சிமிட்டுதல்‌, முதலானவைகளைச்‌ செய்வதுடன்‌, சரீரத்தில்‌ ஏற்படும்‌ எந்த அசைவுக்கும்‌ காரணமாகும்‌,
  4. சமான வாயு
    • இருப்பிடம்‌ ஐடராக்னிக்குச்‌ சமீபம்‌.
    • குடலில்‌ எப்போதும்‌ சஞ்சரிக்கும்‌.
    • சாப்பிடும்‌ ஆகாரத்தை ஏற்று, பக்குவம் செய்து, ஒவ்வொரு தாதுக்களுக்கும்‌ செலுத்‌துகிறது.
    • மற்றதை வெளித் தள்ளுகிறது.
  5. அபான வாயு
    • இருப்பிடம்‌-குதஸ்தானம்‌.
    • பின்‌புறம்‌, மூத்திரப்பை, துடை, குறிகள்‌ இவைகளில்‌ சஞ்சரிக்கும்‌.
    • சுக்கிலம்‌, ஆதத்தவம்‌, மலம்‌, மூத்திரம்‌, கர்ப்பம்‌ முதலானவைகளை வெளியே தள்ளும்‌.

1/11/18

தனஞ்சயன்‌ வாயு

தந்திர மாகக்கன்னர்‌ தன்னிலே சமுத்திரம்‌ போலச்‌ சுந்திர கோஷமாகித்‌ துலங்குநாள்‌ மரணகால மந்திரநிர்‌ கோஷந்தான்‌ மறையவர்‌ முனிவோர்‌ சொன்ன இந்திரத்‌ தசசேர்வாயு வென்னலா மறிந்துபாரே,
  • தனஞ்சயன்‌ என்ற வாயுவின்‌ நிறம்‌ நீலம்‌.
தனஞ்சயன் என்னும் வீங்கல் காற்று மனித வாழ்வில் இரண்டு முக்கிய பணிகளைப் புரிகிறது.
  1. கருப்பையிலிருந்து குழந்தையை வெளியே தள்ளும்.
  2. மனித உடல் இறந்து வீழ்ந்த பின் ஏனைய ஒன்பது வாயுக்களின் பணிகள் முற்றிலும் நின்று விடும். அத்துடன் அவை யாவும் உடலை விட்டு வெளியேறி விடும்.
  • ஆனால் தனஞ்சயன்‌ பிராணன்‌ உடலைவிட்டு நீங்கிய பின்‌னரும்‌ தான்‌ பிரியாமல்‌ எட்டு நாட்கள்‌ வரை உடலில்‌ நின்று இயங்கிக் கொண்டு இருந்த ஒவ்வொரு செல்களையும் (நுண் திசுக்கள்) இறக்கச் செய்து விடுகிறது.
  • அவ்வமயம் தனஞ்செயன் நுண் கிருமிகளைத் தூண்டிவிட்டு வெளியே இருந்து வெளிக்காற்று, ஒளி உட்புக முடியாமல் உடல் தோல் மற்றும் தசைகளை விறைக்கச் செய்வதும் உடலை வீங்க வைத்தும், அழுகச் செய்தும்‌ (நாற்றமெடுக்கும்படி), (DEGENERATION) முதலானவைகளைச்‌ செய்து மேனியைக் குலைக்கிறது.
  • பின்னர் உடலில் இருந்து வெளியேறி விடுகிறது.
  • இதனை வீங்கற்காற்று என அழைப்பர்.
  • காதில்‌ சமுத்திர கோஷம்‌ போன்ற சத்தத்தை உண்டாக்கினால்‌ மரணம்‌ சமீபித்திகிறது என்று அறியவும்‌, மந்திர கோஷம்‌ போலவும்‌ காதில்‌ சப்தம்‌ உண்டாகும்‌.

31/10/18

தேவதத்தன் வாயு

படுத்ததை யெழுப்பிவித்தம்‌ பசியுட னிற்கப்‌ பண்ணி யெடுத்தசோம்‌ பதனை போக்‌கி யியல்புட நாரபாரக்‌ தொடுத்தபேச்‌ சுண்டாய்மெத்தத்‌ தோன்றிய விடுத்ததோர்‌ ரீலவர்ணம்‌ வீறுமாந் தாத்திலாமே.
  • தேவதத்தனின்‌ நிறம்‌ ஸ்படிக நிறமாகும்‌.
  • குய்யம்‌ முதல்‌ தொடை வரை சஞ்சரிக்கும்‌.
  • உடம்பை எழுப்புவிக்‌கும்‌.
  • பசியைத்‌ தூண்டும்‌.
  • சோம்பலைப்‌ போக்கும்‌.
  • விழித்திருக்கையில்‌ ஓடுதல்‌, உலாவுதல்‌, யுத்தம்‌ செய்தல்‌, சிரித்தல்‌, மனமுடைதல்‌ முதலானவைகனைச்‌ செய்யும்‌.
  • இது கொட்டாவியையும், விக்கலையும் உண்டாக்கும்.
  • விழி உலராயிருக்கவும் , விழியை பாதுகாக்கவும் ,இமைகளை இமைத்தல் (நிமி) என்ற பணியை மேற்கொள்வது தேவதத்தன் ஆகும்.
  • மேலும் நாம் உறங்கும் சமயம் தவிர்த்து விழித்திருக்கும் முழுதும் இடைவிடாது செயாலற்றும் வாயுவை தேவதத்தன் என்பர்.

கிருகரன்‌ வாயு

பண்ணிய நாசிநாவில்‌ பசியாத்தித்‌ தன்மஞ்சொல்லி நண்ணியே யிருத்தல்‌ போதல்‌ நயம்பெரு தேவதத்த னென்னிய படிகவர்ண மியல்குய்யத்‌ தானஞ்‌ சேர்ந்த கன்னியே கடிதானத்தில்‌ கலந்துதான்‌ படிப்பித்தாங்கே,
  • கிருகரன்‌ என்ற வாயுவின்‌ நிறம்‌ உறுப்பு.
  • மூக்கு, நாக்கு முதலிய உறுப்புக்களில்‌ நின்று பசியைத்‌ தெரிவிக்‌கவும்‌, தன்மநெறிகளைப்‌ போதிக்கவும்‌ வல்லது.
  • நடமாடும்‌ சக்தியையும்‌ அளிக்கிறது.
  • புருவ மத்தியைப் பற்றி நீட்டல்‌, முடக்கல்‌, கோபித்தல்‌, அழுகையை உண்டு பண்ணல்‌ முதலானதைச்‌ செய்ய வல்லது.
கொட்டாவி :
  • மூளை ஒய்வு பெறும் போது மூச்சின் வேகம், மூச்சின் எண்ணிக்கை இரண்டையும் குறைக்க முயலும்.
  • அந்நேரம் உறக்கம் வருவதற்கு கொட்டாவி என்ற செயலை ஏற்படுத்துவது கிருகரன் ஆகும்.
  • அவ்வேளை நுரையீரல் உள்ளே உட்புகும் வெளியேறும் பிராண வாயு குறைவினால் உடலின் அனைத்து பாகங்களிலும் பிராண வாயு ஏற்றம் திடீரெனக் குறைவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் நுரையீரலை வேகமாகச் சுருங்கி விரியும் தன்மையினை ஏற்படுத்தி நுரையீரல் பிராண வாயு பற்றாக் குறையினைச் சரிப்படுத்தும் நோக்கமும், ஆக இவ்விரு பணிகளையும் செய்து முடிப்பதும் கிருகரன் என்ற வாயுவின் பணி ஆகும்.

30/10/18

கூர்மன்‌ வாயு

சொல்லியவுதர லாடந்‌ தென்றிமெய்‌ எமந்துகொண்டு வல்லிய பலமுண்டாக்கி வருபுஷ்டி பண்ணிவாயை மெல்லிய நயன மூடல்‌ மிகவுமே திறத்தல்‌ பண்ணுங்‌ கல்லிய கிறுகிறாதி கறுப்புவர்‌ ணமா மென்றே.
  • கூர்மனின்‌ நிறம்‌ வெள்ளையாகும்‌.
  • கூர்மன்‌ என்ற வாயு வயிற்றில்‌ வியாபித்து இவ்வுடலை சுமக்கச்‌ செய்கிறது.
  • உடம்பிற்கும்‌ பலத்தைக்‌ கொடுக்கிறது.
இமைக் காற்று
  • கண்களைச்‌ சிமிட்டச்‌ செய்யும்‌.
  • இது கண்களிலிருந்து திறக்கவும், மூடவும் செய்யும்.
  • மகிழ்ச்சி(புளகம்), சிரிப்பு, முக லட்சணம் முதலியவற்றை உண்டாக்கும்.
  • உள்விழி நீரை சரியான அழுத்தத்தில் வைத்திடவும் விழிகளின் அசைவிற்கு துணை புரிவதும் , மகிழ்ச்சி ,சோகம் மற்றும் விழிக்கு ஒவ்வாத நிலையினை ஏற்படுத்தும் காலங்களில் விழி நீர் என்ற கண்ணீரை வரவழைப்பதும் கூர்மன் என்ற வாயுவின் பணியாகும்.
  • விழிநீரில் சோடியம் குளோரைடு என்ற உப்பு நீர், அல்குமீன் , என்ற முட்டைச் சத்து சிறிதளவு சளி போன்ற கிருமி நாசினிகளை வெளியேற்றி விழிகளை பாதுகாப்பதும் கூர்மனின் பணியாகும்.

29/10/18

நாகன் வாயு

  • நாகன்‌ என்ற வாயுவின்‌ நிறம்‌ தங்க நிறமாகும்‌.
  • ரோமக்‌ கால்கள்‌ தோறும்‌ தங்கி அசைவையளிக்கும்‌.
  • நாகன் கொட்டாவி, விக்கல்‌, கக்கல், சோம்பல்‌ முதலியவைகளையுண்டாக்கும்‌.
  • விழிக்காற்று என்றழைக்கப்படும் நாகன் கழுத்தில் இருந்து வாந்தியை உண்டாக்கும்.
  • கண்களினால் பார்க்கச் செய்யும்.

தும்மல் காற்று

பிராணனின் தலைமை வாயிலான மூக்கு மற்றும் கேந்திர பாகமான நுரையீரலின் அனைத்துப் பகுதிகளிலும் நோய்த் தொற்று ஏற்படுத்தும் கிருமிகள் தூசு, மாசுக்காற்று , ஆகியவைகள் உட்புகாமல் வெளியேற்றும் வகையில் மூளையின் அதிவேக கட்டளையின்படி சாதரண மூச்சின் அழுத்தம் மற்றும் வேகத்தை விட பல நூறு மடங்கு வேகமும் அழுத்தமும் கொண்ட தும்மல் என்ற நிகழ்வினை ஏற்படுத்தும் வாயு நாகன் ஆகும்.

இதனை தும்மற் காற்று எனக் கூறுவர்.

மேலும் கபாலத்தின் கீழ்ப்பகுதி ,கண்களின் நேர்பின் பகுதி , மூக்கின் வலது மற்றும் இடது உள் பள்ளப்பகுதி (CAVITY) ஆகியவற்றின் சவ்வுகளின் ஒவ்வாமை (அலர்ஜி) காரணமாக இறந்த செல்களை வெளியேற்றவும் , தும்மல் மூலம் வெளியேற்றுதலுக்கு நாகன் வாயு உதவி புரிகிறது.

28/10/18

சமான வாயு

கொண்டமுன்‌ னன்னந்தன்னில்‌ கொள்ரச முரோமஞ்‌ சேர்க்குங்‌ கண்டமுன்‌ னாகவாயுக்‌ காரண வண்ணம்‌ பொன்னா மண்டரோ மங்களாகி யசைவிலாப்‌ பாடிவிக்கும்‌ விண்டகூர்‌ மந்தான்வண்ண வெள்ளாையாய்ச்‌ சொல்லுமென்றே,
  • சமான வாயு நீல நிறத்தையுடையது.
  • இதற்கு வயிறே இருப்பிடமாகும்‌.
  • உடலின் அனைத்துப் பகுதிகளில் உள்ள திசுக்கள் மற்றும் மிக நுண்ணிய உடலணுக்களை வளர்க்கவும் பராமரிக்கவும் காரணியாய் உள்ளது
  • இச்சமானன் வாயு, உதான வாயு அனுப்பும் உணவின் சாரத்தை உடலில் உள்ள நாடி நரம்புகளுக்கு சமமாகப் பங்கிட்டு உடலை வளர்க்கும்.
  • பல்வேறு வகை புரதம் மற்றும் இதர தாதுக்களை உணவில் இருந்து பிரித்தல் , உணவை செரித்தல் , அவ்விதம் செரித்தல் மூலம் கிட்டிய சத்துக்களை உடல் முழுதும் பரவச்செய்தல் போன்ற பணிகளைச் செய்யும் வாயுவே சமானன் ஆகும்.
  • சமான வாயு, சாப்பிட்ட ஆஹாரத்திலிருந்து ஏற்படும்‌ ரஸ தாதுவை மயிர்க்‌ கால்கள்‌ தோறும்‌ சேர்க்கும்‌ தன்மையைப்‌ பெற்றது.
  • இதனை நிரவுக்காற்று (பரப்புதல், சேர்ப்பித்தல்) எனப் பெயர் பெறுகிறது.

27/10/18

உதான வாயு‌

என்னநின்‌ றெழும்புவித்‌து யெடுப்பித்தும்‌ நித்திவித்து மன்னசா ரங்களெல்லா மந்தந்தத்‌ தானஞ்‌ சேர்க்கும்‌ சொன்னதோர்‌ சமானவாயு தோன்‌றிய நீலவன்னம்‌ பன்னிய நாபிசேர்ந்து பாத்தங்கஞ்‌ சமன்கொண்டாமே,
  • உதான வாயுவின்‌ நிறம்‌ மண்ணின்‌ நிறத்தை யொத்‌தது.
  • இருதயத்தை இருப்பிடமாகக் கொண்டது.
  • தும்மல்‌, ஏப்பம், இருமல்‌, கனவு முதலியவைகளுக்குக்‌ காரணமானது.
  • இதையன்றி, மேலெழும்பச்‌ செய்தல்‌, தூக்குவிக்கும்‌ வன்மை, நிற்றல்‌, அன்னரஸத்தை அந்தந்த தாது ஸ்தானங்களுக்குச்‌ சேர்த்தல்‌ முதலியவைகளையும்‌ உதான வாயு செய்யக்‌ கூடியது.
  • இந்த வாயு, செரிமானத்திற்கு உதவி புரிய, வயிற்றில் உள்ள வெப்ப சக்தியை எழுப்புவதுடன், உணவின் சாரத்தை உடலின் பாகங்களுக்கு அனுப்பும்.

ஒலிக்காற்று


உதானன் ஓசையோடு கலந்து குரல் ஒலியை எழுப்பும்.

மூச்சு மண்டலத்தின் மேல் பகுதியில் உள்ள முன் தொண்டை, மூக்கு ,குரல் வளை, மூச்சுக்குழல் , மூச்சின் இதர கிளை குழல்கள் ஆகிய கருவிகளின் உதவியினாலும் நாபி எனும் பகுதியில் இருந்து பிராண உந்துதலால் குரல் (சப்தம்) எழும்புவதற்கு அடிப்படை உதானன் ஆகும்.

மேலும் குரல் வளையினுள் உட்பக்கத்திற்குள் இரண்டு பக்கத்திலும் பக்கத்திற்கு இரண்டு திசுக்களான மடிப்புகள் இடைவெளியுடன் அமையப் பெற்றுள்ளன. இம்மடிப்புகள் குரல் நாண்கள் எனப்படுவதாகும். இதனுள்ளே உதானன் செல்கிறபோது குரல் நாண்கள் அதிர்ந்து ஒலியினை எழுப்புகின்றன.
ஆகையால் உதானன் ஒலிக்காற்று என்றழைக்கப்படும்.

26/10/18

வியான வாயு

சர்வசந்‌ ததனில்‌ நின்று தானீட்டல்‌ முடக்கல்‌ பண்ணிப்‌ பெறுமன்ன பானந்தன்னைப்‌ பலப்பட ரேபித்தங்கே முறுதரு முதானவாயு வுயர்மன்னின்‌ வன்னங்கண்டத்‌ திருதய மிருந்து தும்மல்‌ யிருமலுங்‌ கினாவு மன்றே,
  • வியான வாயு பசுவின்‌ பால்‌ நிறமுள்ளது.
  • உடலில்‌ இருக்கும்‌ எல்லா துவாரங்களிலும்‌ (மூட்டுக்களிலும்‌) இருந்து கொண்டு உடலை நீட்டுதல்‌, முடக்கிக் கொள்‌ளல்‌ முதலான செய்கைகளையும்‌ அன்ன ஆகாராதிகளை உட்செலுத்தவும்‌ கூடியது.
  • வியானன்‌ தோலில்‌ நின்று பரிசங்களை அறிவிக்கும்‌.
  • உணர்வு நரம்புகள் (கட்டளை நரம்புகள்) மற்றும் உணர்வுகளை ஏற்றி செல்லுதல் ,செயல்படுத்துதல் நரம்புகளை இயங்க வைக்கிறது.
  • இரு நரம்புகளுக்கு இடையே வியாபகம் பெற்ற நரம்பணுக்களை கட்டுப்படுத்துவதாகவும் நரம்புகளின் கேந்திரமான மூளையையும் செயல்படுத்தும் (இயங்கும்) வகையில் தொழில் புரிய வைப்பதும் வியானன் என்ற வாயு ஆகும் .
  • உடலின் அனைத்துப் பகுதியிலும் சஞ்சரிக்கும் இந்த வாயுவானது, உண்ட உணவைத் திப்பி வேறாகவும், சாறு வேறாகவும் செய்து கொண்டிருக்கும்.
  • இது தொழில் காற்று என்று அழைக்கப்படும்.

25/10/18

அபான வாயு

பரிபெரு மபானவாயு பச்சைவர்‌ ணமதாய்க்‌ குய்யம்‌ புரிபெறு மத்தானம்‌ சேர்ந்து புகழ்மல சலத்தை நீக்கி வரிபெறா சனஞ்சுறுக்கி வருமன்ன பாசத்தைச்‌ சேர்க்கும்‌ தரிபெறு வியானவாயுத்‌ தான்வர்ணம்‌ பசுவின்‌ பாலே.

அபான வாயுவின்‌ நிறம்‌ பச்சையாகும்‌.
குய்‌யத்தை இருப்பிடமாகக்‌ கொண்டது. மலம்‌, சிறுநீர்‌ முதலியவைகளை வெளிப்படுத்தும்‌,
ஆசனத்தைச்‌ சுருக்கவல்லது.
அதாவது அபானன்‌ கீழ்நோக்கிக்‌ குதத்தையும்‌ குய்யத்தையும்‌ பற்றி நின்று மலஜலங்களைக்‌ கழிக்கும்‌.

24/10/18

பிராண வாயு

பேசுநம்‌ பிராணவாயு பெருகிய நீலவர்ணந் தேகநெஞ்‌ சதனில்நின்று சேருமங்குட்டந்தன்‌னில்‌ தூசுகே சாதியாக சொல்லுமூச்‌ சுவாசமாகி மாசுநிச்‌ சவாசம்பண்ணி வளரன்னஞ்‌ செரிக்குமங்கே,

பிராண வாயு நீல வர்ணமாயிருக்கும்‌.
நெஞ்‌சிலிருந்து கட்டைவிரல்‌ முடிவரை சஞ்சாரம்‌ செய்யும்‌, மயிர்க்கால்கள் தோறும்‌ சஞ்சரிப்பதுடன்‌ உள்‌ மூச்சுக்கும்‌ வெளி மூச்சுக்கும்‌ ஆதாரமானது.
அன்னத்தைச்‌ செரிப்‌பிக்கும்‌.
பிராணன்‌ இனமொன்றுக்கு 27600 சுவாசங்கள்‌ வீதம்‌ தேகத்தில்‌ சென்று வியாபிக்கின்‌றது. பிராண வாயுக்கு தூய தமிழில் உயிர்க்காற்று என்று பெயர்.

23/10/18

தச வாயுக்கள்

வந்தநற்‌ பிராணனபானன்‌ வளருமா வியானனோடு தந்தமின்‌ னுதானன்‌ மிக்கச்‌ சமானனும்‌ நாகன்‌ கூர்மன்‌ சிந்தைசெய்‌ கிருகராதி தேவதத்‌ தனுமல்லாம லிந்தமா தனஞ்செயன்சொல்‌ லிதுதச வாயுவென்றே.

பிராணன்‌, அபானன்‌, வியானன்‌, உதானன்‌, சமானன்‌, நாகன்‌, கூர்மன்‌, கிருகரன்‌, தேவதத்தன்‌, தனஞ்ஜயன்‌ என்பவை தசவாயுக்களாம்‌. தசம் என்றால் பத்து என்று பொருள்படும். மனித உடம்பின் இயக்கத்திற்கும், உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் உறுதுணையாய் இருப்பது இந்த தச வாயுக்களே ஆகும்.

சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவன் எனப்படுவான்.
செல்வம் நிறைந்த மனிதனாக வாழ்வதை விட ஆரோக்கியம் நிறைந்த மனிதனாக வாழ்வதே சிறந்தது. செல்வம் எண்ணற்ற அளவில் இருந்தாலும் மனம் நிறைவாக (மன நிறைவு) இருக்காது. ஆரோக்கியம் நிறைந்த மனிதனால் மட்டுமே அனைத்து செல்வங்களையும் சுகங்களையும் அனுபவிக்க முடியும். அவ்வாறு இவ்வுடல் ஆரோக்கியமாக இருக்க இந்த தச வாயுக்கள் உறுதுணைகின்றன.

மூச்சுக் காற்று இல்லாமல் போனால் இவ்வுடல் இயங்காது ?
ஏன் என்றால் சுவாசம் தேவை . சுவாசித்தால் தான் இருதயம் பணிபுரியும். இருதயம் பணிபுரிந்தால் தான் இரத்த ஓட்டம் நடைபெறும். இரத்த ஓட்டம் சீராக நடந்தால் தான் இவ்வுடலை இயக்க முடியும்.

இவ்வாறு நாம் படித்து இருக்கிறோம். ஆனால் சித்தர்கள் கூற்றுப்படி இதயத்திற்கு மட்டும் வாயு செல்லவில்லை. இரத்த ஓட்டம் நடைபெற, பசியைத் தெரிவிக்க , கண் இமை மூட , சிரிக்க, கொட்டாவி விட ,மல ஜலம் கழிக்க , தும்மல், விக்கல் என அனைத்திலும் இந்த தச (பத்து) வாயுக்களின் பங்கு உள்ளது.

குறிப்பு :

தசவாயுக்கள் நம் உடலில் பல்வேறு செயல்களை தன்னிச்சையாக செய்கிறது. உயிர்க் காற்று (பிராண வாயு) இன்றி ஏனைய ஒன்பது வாயுக்களும் செயல்பட முடியாது.

22/10/18

பஞ்சகக்கருவி

சீர்பிரி திவியப்புத்‌ தேயு வாயுவுந்தானாம்‌ பார்பெரு மாகாசத்தோ டைந்துபூ தங்களாகும்‌ நேர்பிரி திவியின்‌ கூறு நெடுமயி செலும்புந்‌ தோலும்‌ பார்பெரு நரம்போ டெல்லாம்பகர் தசை தன்னோடைந்தே,
அப்புவின்‌ கூறுதானு மாடநீீ ருதிரம்‌ வெள்ளை செப்புமுன்‌ மூளைமஜ்ஜை தேயுவின்‌ கூறேதென்னி லொப்புமா ௫ 'மலுச வுயர்பயம்‌ போகஞ்சோம்பு இப்புவி வாயுவின்‌ கூறதென்னி லியம்புவாயே.
ஓடது மிருத்தல் தானு முயர்பெற கடத்தல்‌ நிற்றல்‌ வாடலுங்‌ கிடந்த லஞ்சம்‌ வளருமா காசமென்னில்‌ காடமுன்‌ காமங்குரோத நலம்பெரு மோகம்‌ லோபம்‌ தேடமுன்‌ மதமோ டைந்துந்‌ தெளிந்துநீர்‌ தேர்ந்துபாரே.

பிரிதிவி (நிலம்), அப்பு (நீர்), தேயு (நெருப்பு), வாயு (காற்று), ஆகாசம்‌ (ஆகாயம்) என்பது பஞ்ச பூதங்களாகும்‌.

தேகத்தில்‌ பிரிதிவியின்‌ அம்சமாவது

மயிர்‌, எலும்பு, தோல்‌, நரம்பு, தசை, இவைகளாகும்‌,

தேகத்தில்‌ அப்புவின்‌ அம்சமாவது

நீர்‌, உதிரம்‌, வெள்ளை பாகங்கள்‌, மூளை, மஜ்ஜை.

தேகத்தில்‌ தேயுவின்‌ அம்சங்கள்‌

ஆகாரம்‌, பயம்‌, போகம்‌, சோம்பல்‌, தூக்கம்‌.

தேகத்தில்‌ வாயுவின்‌ அம்சங்களாவன

ஓடுதல்‌, இருத்தல்‌, நடத்தல்‌, நிற்றல்‌, கிடத்தல்‌.

தேகத்தில்‌ ஆகாசத்தின்‌ அம்சங்கள்‌

காமம்‌, க்ரோதம்‌, மோகம்‌, லோபம்‌, மதம்‌ இவைகளாகும்‌.

21/10/18

பஞ்ச பூதங்கள்‌ உடலை ஆளும்‌ காலங்கள்‌

ஒரு குழந்தை பிறக்கிறது.அதற்கு உடல் உறுப்புகள் உருவாகின்றது. அவ்வுடலுக்கு தேவையான சத்து தாதுக்கள் உருவாகின்றன. இது அனைவரும் அறிந்ததே. ஆனால் சித்தர்கள் கூற்றுப்படி உடலை மேலும் பஞ்ச பூதங்கள் ஆட்கொள்கின்றன.

மண்ணின்‌கூ றிருபதாண்டு வளரப்புத்‌ தேயு வாயு விண்ணின்‌கூ றுடனே நூறு வயதென விளம்புமப்பால்‌ எண்ணில்மூ வேழுகோடி ரோகமு மிதமதாகப்‌ பெண்ணின்‌ மிக்‌ காயமானே ! பிரித்‌துநான்‌ மொழிகின்றேனே.

விளக்கம்

முதல்‌ 20 ஆண்டுகள்‌ பிருதிவியும் (நிலம்) ‌, 40 ஆண்டுகள்‌ வரை அப்பும (நீர்)‌, 60 வயது வரை‌ தேயுவும்‌ (நெருப்பு) , 80 வயது வரை வாயுவும் ‌, 100 வயது‌ வரை ஆகாயமும்‌ இவ்‌வுடலை ஆளுகின்றன. மேலும் 21 கோடி ரோக வகைகளும் உள்ளன. அதைப்பற்றி பின்வரும் பகுதிகளில் காணலாம்.

20/10/18

மனித ஆயுள் மற்றும் தோஷங்களின்‌ காலநிலை

அய்யுமுப்‌ பத்துமூன்‌று வருஷமொன்‌ றதிகநாலு செய்யதிங்‌ களுமாய்ப்‌ பித்தஞ்‌ செய்தியப்‌ படியே சீராய்‌ உய்யவே வாதம்‌ வந்த படியுறு வயது நூறாய்‌ தையலே வாகடத்தின்‌ சாத்திரப்‌ படிகள்‌ தானே.

மனிதரின்‌ ஆயுள்‌ காலம் சராசரி 100 என்று வைத்‌துக்கொண்டால்‌, முதல்‌ 33 வருஷம்‌ 4 மாதம்‌ கபகாலமாகும்‌. பின்னர்‌ 66 வருஷம்‌ 8 மாதம்‌ பித்தத்தின்‌ காலமாகும்‌. மற்றய 33 வருஷம்‌ 4 மாதம்‌ அதாவது 100 வயது வரை வாதம்‌ அதிகரித்திருக்கும்‌ காலமாகும்‌. இவ்வாறு கபம், வாதம், பித்தம் மனிதனின் ஆயுளில் ஆட்கொள்கிறது.

சத்து தாதுக்கள் உருவாதல்

வருரச மிரத்தமாங்கஷம்‌ வளர்கன்‌ ற மேதையத்திக்‌ கருமிகு மஜற்ஜையோடு கலர்ந்தசக்‌ கலந்தா னேழாய்‌ யுருவெனுஞ்‌ சரீரமாக யுயர்‌ சட்டை ரசமுஞ்‌ சேர்ந்து பருவரை முலையினாளே ! பலபல சோகந்தானே.

விளக்கம்

இரஸம்‌, இரத்தம்‌, மாமிசம் (தசை) ‌, மேதசு (கொழுப்பு)‌, அத்தி (எலும்பு) (அஸ்தி), மற்றை, சுக்லெம்‌ ஆக இவைகள்‌ சத்து தாதுக்களாகும்‌.

கற்ப உற்பத்தி

கற்ப உற்பத்தி

மனிதனுக்கு நோய் எப்படி உருவாகிறது என்பதை அறிந்து கொள்ளும் முன் மனிதன் (குழந்தை) எப்படி உருவாகி(ன்)றான்(றது) என்பது பற்றியும் எவ்வாறு வளர்கிறது என்பது பற்றியும் அறிந்து கொண்டு பின்னர் நோய்கள் எப்பொழுது எக்காலத்தில் உருவாகின்றன என்பது பற்றி அறியலாம்.

ஆகனாள்‌ விந்துவுண்டா யஞ்சானாள்‌ கருப்போலாகிப்‌ போகமூ வஞ்சுநாழி(ளி)ல்‌ பொருந்திய முட்டைபோல மேகமாய்த்‌ தீர்க்கமாக யிரண்டினில்‌ மார்மட்டாகிப்‌ பாகமா மூன்றாந்‌ திங்கள்‌ பகருந்தி மட்டுமாமே.
மட்டுட ஞாலாந்திங்கள்‌ வளர்ந்திட்டுப்‌ பாதமெங்குங்‌ கட்டுட னஞ்சாமா தங்‌ கருதுபூ ரணமா மாறில்‌ கட்டுட னெலும்புசவன்‌ தலைமயிர்‌ ஈரம்புமேழில்‌ எட்டுட னறிவாமொன்ப இயல்தச பிறவியாமே,

விளக்கம்

சேர்க்கைக்குப்‌ பின்னர்‌ 5வது தினத்தன்று கருவாகி (நெகிழுந்தன்‌மையுள்ள பிண்டம்‌)றது.
15வது நாளில் முட்டையின்‌ அளவையடைகிறது. நாட்கள்‌ செல்லச்‌ செல்ல இது நீண்ட வடிவத்தையடைந்து பிண்டத்திற்கு மார்பு உண்டாகிறது.
3வது மாதம்‌ வயிறு ஏற்படும்‌.
4வது மாதம்‌ பிண்டத்திற்குக்‌ கால்‌ கைகள்‌ உண்டாகின்றன.
5வது மாதத்திலும்‌ மேற்கூறிய உறுப்புக்கள்‌ நன்றாக வளர்கின்‌றன.
6வது மாதத்தில்‌ எலும்பு, தலை, மயிர்‌, நரம்பு முதலியவைகளுடன்‌
7ம்‌ மாதம்‌ சீவனும்‌ உண்டாகிறது.
8வது மாதம்‌ அறிவு உணர்ச்சி முதலியவை ஏற்படுகிறது.
9வது மாதம்‌ முதல்‌ பிரசவ காலமாகும்‌.

16/10/18

முன்னுரை - தொடர்ச்சி

வித்யாரண்யன்‌

சரியான வரிசையில்‌ நூல்களின்‌ பகுதிகள்‌ அமைக்கப்படவில்லை என்ற குற்றம்‌. ஆனால்‌, அவரவர்களுக்கு அகப்பட்ட பாடல்களை 1000, 2000 முதலிய முழுத் தொகையாக்குவதற்காகத்‌ தங்கள்‌ கைச்சரக்கைக் கொண்டு தங்கள்‌ பாடல்களை சேர்த்திருக்கிறார்கள். இவ்விதம்‌ சேர்க்கப்பட்ட பாடல்களை மருத்‌துவத்தில்‌ அற்ப பழக்கம்‌ உள்ளவர்களும்‌ எளிதில்‌ கண்டு கொள்ளலாம்‌, ஆனால்‌, எமது நாட்டில்‌ நூல்களைக்‌ குறை கூறுவதா, அல்லது அவைகளில்‌ பிற்காலத்திய சேர்க்கை இருப்பதாக எண்ணுவதோ, ஓர்‌ பெரிய பாவம்‌ என்ற எண்ணம்‌ வெகு நாளாக இருந்து வருகிறது. பெரும்பாலும்‌ இந்த எண்ணம்‌ நமக்கு நன்மையையே பயந்திருக்கிறது, ஆனால்‌, சில சமயங்களில்‌ கெடுதலும்‌ ஏற்பட்டிருக்கிறது இப்பொழுது, இந்த நூல்களையெல்லாம்‌ நன்றாக அலசிப்‌ பார்த்து, அவைகளில்‌ நிச்சயமாக மூல ஆசிரியரால்‌ ஏற்‌பட்டதென்‌று சந்தேகமில்லாமல்‌ தோன்‌றக்கூடிய பகுதியை மட்டும் சேர்த்து, புதிய நூல்களை வெளியிட வேண்டிய காலம்‌ வந்துவிட்டது. ஏனெனில்‌ நம்‌ நாட்டுக் குழப்பத்தில்‌ சமஸ்கிருத நூல்களும்‌ அழிந்தன. என்பது உண்மை.

இருந்த போதிலும் நம்‌ நாட்டின்‌ அதிருஷ்டவசத்தால்‌ உதித்த வித்யாரண்யரென்‌ற மஹான்‌, விஜயநகர ராஜ்யத்தைத்‌ தோற்றுவித்ததோடு நில்லாமல்‌, அவருக்கு வாய்த்த லெக்ஷ்மீகடாக்ஷத்தால்‌' வடநாட்டில்‌ பல இடங்‌களுக்கும்‌ மனுஷ்யசர்களை அனுப்பி இந்த நாட்டில்‌ அற்றுப்‌ போன நூல்களையும்‌, அந்நூல்களில்‌ பயிற்சி உடையவர்களையும்‌ வரவழைத்து, நமது கலைகள்‌ விஞ்ஞானம்‌ இவைகளுக்கு புத்துயிர்‌ அளித்தனர்‌. நான்கு வேதங்களுக்கும்‌ புதிதாக பாஷ்யம்‌ எழுதி வைத்தனர்‌. தர்மசாஸ்‌திரத்திற்கென்று ஒரு பெரிய தர்மசாஸ்திரமான பராசரமத்வியத்தை இயற்றியுள்ளார்‌. அதே விதமாக, சங்‌கீதத்துக்காக சங்கீத சாரம்‌ என்ற நூலையும்‌, இன்னும்‌ மற்ற சாஸ்‌திரங்களுக்காகத்‌ தனி நூல்களையும்‌ இயற்றியுள்ளார்‌. நமது இதிஹாஸ புராணங்களில்‌ சிவபரமான பகுதிகளைப்‌ பலவகையாகத்‌ திரட்டி சுமார்‌ 40000 சுலோகங்கள்‌ கொண்ட சங்கர விலாஸம்‌ என்ற நூலையும்‌ தொகுத்திருக்கின்றனர்‌. இவ்விதமாகப்‌ பலநூல்களைத் தாமே தொகுத்தும்‌, பலவிடங்களிலிருந்து சேசரித்தும்‌, சமஸ்கிருதத்திலுள்ள நமது கலை, விஞ்ஞானம்‌ முதலானவைகளைக்‌ காப்பாற்றியுள்ளார்‌. ஆகையால்‌, நமது தமிழ்‌நாட்டில்‌ நமக்குக்‌ கிடைத்திருக்கும்‌. தமிழ்‌ கலை பொக்கிஷங்களை சரியாகப்‌ புரிந்து கொண்டு அதைக்‌ கையாளுவதற்கு, அதே கலை சம்பந்தமான ஸம்ஸ்‌கருத நூல்கள்‌ அவசியம்‌.

தஞ்சையில் இருக்கும் சரஸ்வதி மஹாலில்‌ தமிழிலும்‌, சமஸ்கிருதத்‌திலும்‌, பல கலைகளிலும்‌, சாஸ்‌திரங்களிலும்‌ வல்லவரான பெரியோர்கள்‌, நூல்களைப்‌ பரிசோதித்துச்‌ சேர்த்தும்‌, பல புது நூல்களெழுதியும்‌ சுமார்‌ கிபி. 1400 முதல்‌ 1855 வரை இப்பெரிய பணியை இயற்றியுள்ளார்கள்‌; அவர்கள்‌ பார்த்‌து சேகரித்து வைத்திருக்கும்‌ நூல்களில்‌ ஓர்‌ தனிப் பெருமையுள்ளது. அகத்தியர்‌ பெயரால்‌ அச்‌சானவை சுமார்‌ 50 நூல்களும்‌, இதுவரை அச்சுக்கு வராத நூல்கள்‌ 100ம்‌ கிடைக்கின்றன,

இதில்‌, நாடிபார்த்தல்‌ முதற்கொண்டு நோய்களின்‌ குணாகுணங்கள்‌, அவற்றின்‌ சி்கிச்சைகள்‌ எல்லாம்‌ வரிசைக்‌கிரமமாகக்‌ கொடுக்கப்பட்டிருக்கின்ற, முறைகளெல்‌லாம்‌ மிகவும்‌ அருமையாக அமைந்திருக்கின்‌றன.

சித்த மருத்துவம் - முன்னுரை

பண்டைக்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் பல அரிய மருத்துவ முறைகளை தமது அனுபவத்தின் மூலம் தெரிந்து ஓலைச் சுவடிகளில் பொறித்து வழங்கியுள்ளனர். அத்தகைய நூலில் பற்ப வகைகள், செந்தூர வகைகள், லேகிய வகைகள், சூரண வகைகள், எண்ணெய் வகைகளும் அவற்றின் செய்முறைகளும் கூறப்பட்டுள்ளன. இந்த வெளியீட்டில்‌, நமது புராதன வைத்திய நூல்‌கள், அகத்தியர்‌ முதலிய மஹரிஷிகளாலும்‌, போகர்‌, கொங்கணர்‌ முதலிய பல சித்தர்களாலும்‌, தமிழில்‌ ஏராளமான வைத்திய நூல்கள்‌ எழுதப்பட்டு, தற்காலத்தில்‌ பலராலும்‌ வாசித்துக்‌ கையாளப்பட்டு வருகின்‌றன, ஆனால்‌ நம்‌ தமிழ்‌நாட்டில்‌, சுமார்‌ 600, 700 வருடங்களுக்கு முன்‌ ஏற்பட்ட கலவரத்தில்‌, நமது தமிழ்‌ நூல்களும்‌ சமஸ்கிருத நூல்களும்‌ அழிந்‌துபோயின. அவைகளில்‌ எஞ்சியவைகளே, பிற்காலத்தில்‌ நம்‌ நாட்டில்‌ மூலைமுடுக்குகளிலிருந்து சேகரிக்கப்பட்டு, நூல் வடிவமாக்குப்பட்டு பிரசாரத்தில்‌ இருந்து வருகின்றன. நூல்கள்‌ பல சிதைந்து போய்‌, பலரிடங்களிலிருந்து சேர்க்கப்பட்ட காரணத்தினால்‌, எந்த நூலும்‌ கோர்வையாக முதல்‌ இடை கடை அதனதன்‌ இடத்தில்‌ அகப்படவுமில்லை சேர்க்கப்படவுமில்லை. இந்தக்‌ காரணத்‌தைக் கொண்டே அகப்பட்ட பாடல்களைச்‌ சேர்த்து, அதற்குத்‌ தகுதியான பெயர்‌ வைக்க முடியாமல்‌, நூலாசிரியரின்‌ பெயரையும்‌, பாடல்களின்‌ எண்ணிக்கையையும்‌ சேர்த்து அகத்தியர்‌ 10000, அகத்தியர் ‌4000, அகத்தியர் ‌1500, கொங்கணர்‌ முதல்காண்டம்‌ 1000, நடுக்காண்டம்‌ 1000, கடைக்‌காண்டம்‌ 1000, போகர்‌ 700 என்ற பெயரால்‌ இத்தொகுதிகளுக்கு நாமகரணம்‌ செய்தனர்‌. இந்தத்‌ தொகுதி நூல்களில் தொடர்ந்தாற் போல்‌ எந்த விஷயமும்‌ சொல்லப்படவில்லை. ஓரிடத்தில்‌ மருந்து முறையும்‌, அடுத்தாற் போல்‌ ஓர்‌ யோக முறையும்‌, அதற்கடுத்தபடி ஓர்‌ வியாதியின்‌ குணா குணங்களும்‌, அதன் பிறகு வச்யம் முதலிய மந்திரங்களும்‌ சேர்க்கப்பட்டிருக்கன்‌றன,

சித்த மருத்துவம்

உலகில் பல்வேறு பகுதியில் பற்பல மருத்துவ முறைகளைக் கொண்டு நோய்களைக் குணமாக்குகின்றனர். அம்முறைகளில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, அலோபதி எனும் ஆங்கில மருத்துவம் ஆகியன அடங்கும். இது தவிர வேறு முறைகளிலும் நோய்களை குணமக்குகின்றனர். முதல் மூன்று முறைகளும் இயற்கைலிருந்து கிடைக்கும். வேர், செடி, இலை, கிழங்கு, விதை மற்றும் பல பொருள்கள் கொண்டு மருந்து தயாரிக்கப்பட்டு மக்கள் நோயின்றி வாழ வழி வகுக்கின்றன. இதில் மிகவும் தொன்மை வாய்ந்த மருத்துவம், சித்த மருத்துவமேயாகும். இதனைத் தமிழ் மருத்துவம் என்று அழைப்பர்.

13/10/18

திருமாளிகைத்‌ தேவர்‌

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. கருவூர்த்‌ தேவரும் திருமாளிகைத் தேவரும்
  3. ஐதீகக்‌ கதை

முன்னுரை


இவர்‌ வேதியர்‌ குலத்தில்‌ பிறந்தவர்‌. போகரின்‌ மாணாக்கர்‌. திருவிசைப்பாவாகிய ஒன்பதாம்‌ திருமுறை ஓதிய ஒன்பது நாயன்மார்களில்‌ ஒருவராக விளங்கியவர்‌.

கருவூர்த்‌ தேவரும் திருமாளிகைத் தேவரும்


சைவம்‌ மற்றும்‌ வைணவம்‌ ஆகிய இரு சமயத்தை சார்ந்தவர்களும்‌ போகரிடம்‌ மாணாக்கர்களாக இருந்தனர்‌. இரு சமயத்‌தவர்களில்‌, சைவத்தில்‌ திருமாளிகைத்‌ தேவரும்‌, வைணவத்தில்‌ கருவூர்த்‌ தேவரும்‌ போகரின்‌ சீடர்களுள்‌ முதன்மையானவர்களாக விளங்கினார்கள்‌. ஒருநாள்‌ சிவ பூஜை நிவேதனத்தை திருமாளிகைத்‌ தேவர்‌ கருவூராருக்குக்‌ கொடுக்க, அவர்‌ அதை வாங்கிப்‌ புசித்தார்‌. மற்றொரு நாள்‌, கருவூர்த்‌ தேவர்‌ தமது வைணவ பூஜை நிவேதனத்தை திருமாளிகைத்‌ தேவருக்குக்‌ கொடுக்க, அவர்‌ அதை வாங்க மறுத்தார்‌ அதனால்‌, கோபம்‌ கொண்ட கருவூரார்‌, போகரிடம்‌ விஷயத்தைக்‌ கொண்டு சென்றார்‌. போகரோ, "சைவமே சிறந்த சமயம்‌. ஆச்சாரமான பூஜை சிவ பூஜையே. அதனால்‌ நீசிவ பூஜை நிவேதனம்‌ பெற்றது விசேஷம்‌. வைணவராகிய உனது நிவேதனத்தை நீ அவருக்குக்‌ (திருமாளிகைத்‌ தேவருக்குக்‌) கொடுத்தது தவறு!" என்று பதில்‌ அளித்தார்‌ போகர்‌. இதனால்‌ கருவூர்த்‌ தேவருக்கு போகர்‌ மீது அதிக வருத்தம்‌ இருந்தது. என்றாலும்‌, பின்னர்‌ தனது தவறை உணர்ந்து திருமாளிகைத்‌ தேவருடன்‌ இணைந்து திருவாடு துறையில்‌ இறைப்பணி புரிந்தார்‌. திருவாடுதுறை <>புராண சரிதம்‌" என்ற நூலிலும்‌ திருமாளிகைத்‌ தேவரும்‌, கருவூர்த்‌ தேவரும்‌ அங்கு இறைப்பணி செய்ததாகக்‌ குறிப்புகள்‌ காணப்படுகிறது.

ஐதீகக்‌ கதை


திருவாடுதுறையில்‌ திருமாளிகைத்‌ தேவர்‌ பற்றிய ஒரு ஐதீகக்‌ கதையும்‌ உண்டு. திருமாளிகைத்‌ தேவர்‌ மன்மதனை வென்ற திவ்ய ஸ்வருபம்‌ கொண்டவர்‌. திருவாடுதுறையின்‌ காவிரிக்‌ கரையிலும்‌ நந்தவனத்திலும்‌ மாசிலாமணிப்‌ பெருமான்‌ சந்நிதியிலும்‌ அவர்‌ (திருமாளிகைத்‌ தேவர்‌) தியானம்‌ செய்வதற்காக சஞ்சரிப்பதுண்டு.

வேதியர்கள்

பார்க்கும்‌ பெண்களை எல்லாம்‌ வசீகரிக்கும்‌ அழகிய திருமேனி கொண்டவர்‌ என்பதால்‌, அங்குள்ள வேதியர்‌ குலப்‌ பெண்கள்‌ பலர்‌, அவரை மணக்க விருப்பம்‌ கொண்டு இருந்தனர்‌. அவர்கள்‌ வேறு ஆண்களை மணந்தாலும்‌, அவர்களுக்கு பிறந்த குழந்தை எல்லாம்‌ திருமாளிகைத்‌ தேவரின்‌ சாயலில்‌ தான்‌ இருந்தன.

நரசிங்க நரபதி

இதைக்‌ கண்டு திடுக்கிட்ட வேதியர்கள்‌, கொதிப்படைந்து அந்த நாட்டை ஆண்ட மன்னன்‌ நரசிங்க நரபதியிடம்‌ சென்று தங்கள்‌ மனைவிகளை எல்லாம்‌ ஒரு காமலோலன்‌, தாங்கள்‌ வீட்டில்‌ இல்லாத சமயத்தில்‌ மயக்கம்‌ உண்டாக்கி கற்பழித்து விட்டான்‌ என்று திருமாளிகைத்‌ தேவரைப்‌ பற்றி (அரசினடம்‌) புகார்‌ தெரிவித்தனர்‌. சினம்‌ கொண்ட அரசன்‌ அங்கிருந்த காவலர்களிடம்‌ "அந்தக்‌ கொடுங்கோலனை கயிற்றால்‌ கட்டி இழுத்து வருக!" என்று ஆணையிட்டான்‌. திருமாளிகைத்‌ தேவரிடம்‌ சென்று, காவலர்கள்‌ அரசனின்‌ ஆணையைத்‌ தெரிவிக்க, "கயிற்றால்‌ கட்டிக்‌ கொண்டு போங்கள்‌ !" என அவர்‌ சொல்ல, அவர்கள்‌ கொண்டு வந்திருந்த கயிறு, அவர்களையே கட்டி இழுத்துக்‌ கொண்டு அரசனின்‌ முன்‌ கொண்டு சென்றது. காவலர்களின்‌ செயலுக்குப்‌ பொருள்‌ விளங்காத அரசன்‌ கோபம்‌ தலைக்கு ஏறிய நிலையில்‌, "அவனை வெட்டிக்‌ கொண்டு வருக!" என்று வேறு சில போர்‌ வீரர்களுக்கு ஆணையிட்டான்‌. திருமாளிகைத்‌ தேவரிடம்‌ சென்று காவலர்கள்‌ அரசனின்‌ ஆணையைத்‌ தெரிவிக்க, "தாரளமாக, வெட்டிக்‌ கொண்டு போகலாம்‌!" என்று அவர்‌ சொல்ல, அவர்கள்‌ ஒருவரை ஒருவர்‌ வெட்டிக்‌ கொண்டு சாய்ந்தனர்‌.

அரசனின் மன்னிப்பு

இதனைக்‌ கேள்விப்‌ பட்ட அரசனின்‌ ஆணை எல்லைத்‌ தாண்டிப்‌ போனது. சதுரங்க சேனையோடு மந்திரி, தளபதி, வீரர்கள்‌ புடை சூழ, திருமாளிகைத்‌ தேவரின்‌ இருப்பிடத்தைக்‌ நோக்கிப்‌ புறப்பட்டான்‌ மன்னன்‌. ஞான திருஷ்டியால்‌ இதனை அறிந்த திருமாளிகைத்‌ தேவர்‌, ஒப்பிலா முலையம்மை சந்நிதிக்குச்‌ சென்று முறை இட்டார்‌. அம்மையோ கோயில்‌ திருமதிலின்‌ மேல்‌ வீற்று இருக்கும்‌ விடைக் கன்றுகளை எல்லாம்‌ அழைத்து, தரும நந்தியின்‌ தேகத்தில்‌ அவைகளை ஐக்கியமாக்கி," நீ எதிர்‌ சென்று பகைவென்று வருக!" எனக்‌ கட்டளை இடுகிறார்‌. அம்மைத்‌ தம்மிடம்‌ அளித்த விடைக்‌ கன்றுகளின்‌ சேனையுடன்‌ நந்தி தேவர்‌, அரசனின்‌ சேனையை எதிர்த்துப்‌ போரிட்டு அழிக்கிறார்‌. மன்னனையும்‌ மந்திரிகளையும்‌ உயிருடன்‌ பிடித்து வந்து, தன்‌ சந்நிதியில்‌ சிறை வைக்கிறார்‌. திருமாளிகைத்‌ தேவரின்‌ மகிமையை உணரும்‌ அரசன்‌, பணிந்து அவரிடம்‌ மன்னிப்பும்‌ கேட்கின்றான்‌.

சிவஞான நிஷ்டையில்‌ எழுந்தருளும்‌ திருமாளிகைத்‌ தேவர்‌, அவர்களை மன்னித்து விடுவிக்கச்‌ செய்கிறார்‌. இதனால்‌ திருமாளிகைத்‌ தேவர்‌ உத்தமர்‌ என்பதை வேதியர்களும்‌ அறிந்து கொண்டனர்‌. இவ்வாறு அவரது புகழ்‌ அந்த நாடு முழுவதும்‌ பேசப்பட்டு வெகுவாகப்‌ பரவியது.