தடித்துச் சிவந்து முள்போல் நாக்குந் தாகமிலாச் சுரமேறி
யெடுத்தாலிரத்த சீவுகந்தா னினித்தான் பித்த சீவுகங்கேள்
வெடித்தே முள்போல் நீரற்று மீறுநாவே பொன்னிறமாய்
தொடுத்தபிரம்மை மூர்ச்சை சரக் தொண்டை வேதனையுண்டாமே.
நாக்குத் தடித்துச் சிவப்பாகி, முள்போல் சிறுசிறு கொப்புளங்கள் ஏற்படும். தாகமிறாது சுரம் அடிக்கும். இது இரத்த சீவுகம் (ரத்த ஜிஹ்வா) ஆகும்.
நாக்கு முள்போல் ஆகி நாவறட்சி அதிகரித்து மஞ்சள் நிறமாகும். மயக்கம், மூர்ச்சை சுரம், தொண்டைவலி இவைகளும் ஏற்படும். இது பித்த சீவுக தோஷமாகும், (பித்த ஜிஹ்வா)
சீவுகம் - ஜிஹ்வா அதாவது நாக்கு என்று பொருள்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக