- முன்னுரை
- தவ வாழ்க்கை
- இல்லறத் துறவி
- அவர் வாழ்க்கை பற்றிய கர்ண பரம்பரைக் கதை குருதரிசனம்
- இல்லற வாழ்க்கை
- பற்றற்ற நிலை
- கொங்கணவர் நட்பு
- துறவு வாழ்க்கை
- சமாதி கூடல்
முன்னுரை
சிவ வாக்கியர் சங்கர குலத்தில் தை மாதம் மகம் நட்சத்திரத்தில் (சிம்ம ராசியில்) பிறந்தார். பிறக்கும் போதே சிவசிவ என்று சொல்லிக் கொண்டே பிறந்தவர் என்பதால் சிவ வாக்கியர் என்று அழைக்கப் பெற்றார் என்று அபிதான சிந்தாமணி கூறுகிறது. இவர் தனது பாடல் தொகுப்பிற்கு சிவவாக்கியம் என்று பெயர் சூட்டியுள்ளார். அந்த நூலின் காப்புச் செய்யுளாகிய
தவ வாழ்க்கை
சிவ வாக்கியரின் தந்தை தெய்வச் சிலைகள் செய்து விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தவர். தாயோ அருந்ததிக்கு ஒப்பான கற்புடைய மங்கை. இந்தத் தம்பதியர் சித்தர்களை அடுத்து வாழ்ந்து வந்தனர். தங்கள் மகன் பெரிய தவயோகியாக வர வேண்டும் என்பதற்காக தக்க குரு ஒருவரைத் தேடிக் கண்டுபிடித்து அவனுக்கு ஞானக்கல்வி புகட்டுமாறு வேண்டிக் கொண்டார்கள். சிவ வாக்கியரும் பதினெண் சித்தர்களில் பலரை நாடி அவர்களிடம் ஆர்வமுடன் வேதாந்தம் கற்று யோக நெறியில் சென்று சகல சித்திகளும் அடையப் பெற்றார். (இச்செய்திகள் அகத்தியர் 12000 நூலில் 434 முதல் 441 வரை உள்ள பாடல்களில் இடம்பெற்றுள்ளன.
இல்லறத் துறவி
துறவியாக வாழ்ந்து வந்த இவருக்கு திடீரென்று திருமணம் செய்து கொள்ளும் ஆசை எழுந்தது. பெற்றோரும் தகுதி வாய்ந்த ஒரு பெண்ணைப் பார்த்து அவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள் (போகர்7000 சப்தகாண்டம் பாடல்கள் 5759, 5760). மேலும் இவர் திருமூலர் மரபில் வந்த பெண்ணின் மகன் என்றும் இவரது குடும்ப வாழ்க்கையில் இவருக்கு சிவானந்தர் என்ற சித்தபுருஷர் மகனாகப் பிறந்தார் என்றும் போகர் கூறுகிறார். ஏழாண்டு குடும்ப வாழ்விற்குப் பிறகு மீண்டும் துறவு மேற்கொண்டு பல ஊர்களும் சுற்றிப் பல சீடர்களுக்கு தவ யோகம் பயிற்றுவித்து விட்டு கடைசியாக கும்பகோணத்தில் சமாதி பூண்டார். இதுதான் சிவவாக்கியரின் நம்பத்தகுந்த உண்மை வரலாறு.
அவர் வாழ்க்கை பற்றிய கர்ண பரம்பரைக் கதை குருதரிசனம்
சிவ வாக்கியரின் திருமண வாழ்க்கையைப் பற்றி செவி வழிச் செய்தியாக ஒரு கதை உள்ளது. அக்கதையைத் திருநெல்வேலி முருகதாச சுவாமிகள் (1840-1899) பாடியுள்ள புலவர் புராணம் உறுதி செய்கிறது. அக்கதை வருமாறு:
சிவ வாக்கியர் சித்தன் போக்கு சிவன் போக்கு என்ற பழமொழிக்கிணங்க தமிழகத்திலிருந்து கால்நடையாகவே
காசிக்குச் சென்றார். காசியில் ஒரு தெரு ஓரத்தில் ஒரு சக்கிலியன் செருப்பு தைத்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் காணப்பட்ட பிரம்மதேஜஸ் சிவவாக்கியரை அவன் பால் ஈர்த்தது. அவர் அவனை அடைந்த மாத்திரத்தில் அந்த சக்கிலியன் தன் பையிலிருந்த ஒரு நாணயத்தையும் ஒரு பேய்ச் சுரைக்காயையும் கொடுத்து இந்த
நாணயத்தை கங்கையிடம் கொடுத்துவிட்டு இந்த பேய்ச் சுரைக்காயைக் கழுவிக்கொண்டு வா
என்று கூறினான்.
ஏன் என்று கேட்காமல் கங்கைக் கரையை அடைந்த சிவவாக்கியர் அந்த நாணயத்தை கங்கையில் வீசி எறிந்தார். உடனே வளையல் அணிந்த ஒரு கை கங்கையிலிருந்து வெளிப்பட்டு அந்தக் காசைப் பெற்றுக்கொண்டது. பிறகு அவர் சுரைக்காயைக் கழுவி எடுத்துக் கொண்டு சக்கிலியனிடம் வந்தார்.
சக்கிலியன், நீ கங்கையில் போட்ட காசை இங்கே வாங்கிக் கொள் என்று தன் தோல் பையைத் திறந்தான்.அதில் கங்கை
நீர் நிறைந்திருந்தது. அத்தண்ணீரிலிருந்து கங்கா தேவியின் வலக்கை வெளிப்பட்டு அந்தக் காசை சிவவாக்கியரிடம் கொடுத்தது
. பிறகு சக்கிலியன் கொஞ்சம் மணலையும் அந்தப் பேய்ச் சுரைக்காயையும் அவரிடமே கொடுத்து இதை எந்தப் பெண் சமைத்துக் கொடுக்கிறாளோ அவளை மணந்துகொள். உன் வாழ்க்கை நன்றாக அமையும், என்று வாழ்த்தி அனுப்பினான்.
தான் எண்ணி வந்த நோக்கம் இந்த சக்கிலியனுக்கு எப்படித் தெரியும்? என்ற ஆச்சர்யத்துடன் அவனையே குருவாகக் கொண்டு
அவன் காலைத் தொட்டு வணங்கி விட்டு அந்த மணலையும் பேய்ச் சுரைக்காயையும் எடுத்துக்கொண்டு விரைந்து தமிழகம் வந்து சேர்ந்தார்.
இல்லற வாழ்க்கை
சிவவாக்கியர் தமிழ் மண்ணை மிதித்ததும் பிராமணர் முதலான நால்வகை வருணங்களையும் சேர்நத கன்னிப் பெண்களை அணுகி இந்த மண்ணையும் பேய்ச் சுரைக்காயையும் சேர்த்து சமைத்துக் கொடுக்க முடியுமா ?
என்று கேட்டார்.
அப்பெண்கள் அனைவரும் இவரைப் பைத்தியக்காரன் என்று கூறி சிரித்து ஏளனம் செய்தனர். கடைசியாக மூங்கில் வெட்டிக் கூடை முறம் தயாரித்து விற்றுப் பிழைக்கும் ஒரு குறவர் சேரிக்குச் சென்றார். அங்கு ஒரு சிறு குடிசை வாயிலில் நின்று கொண்டிருந்த
கள்ளம்கபடமற்ற ஒரு கன்னிப்பெண் இவர் கவனத்தைக் கவர்ந்தாள். அவளைப் பார்த்து, உன் பெற்றோர் வீட்டில் இல்லையா? என்று கேட்டார். அப்பெண், அவர்கள் வீட்டில் இல்லை; எங்கு
சென்றார்களோ, தெரியவில்லை என்றாள்.
சிவ வாக்கியர் தான் கொண்டு வந்த மண்ணையும் பேய்ச் சுரைக்காயையும் அவளிடம் கொடுத்து “நான் அதிகப் பசியோடு நீண்ட தூரம் நடந்து வந்திருக்கிறேன். நீ இவற்றைச் சமைத்துக் கொடுப்பாயா? என்று கேட்டார். அந்தக் குறப்பெண் அந்த மண்ணை அரிசியாகவே எண்ணி அந்த மண்ணையும் பேய்ச்சுரைக்காயையும் சுவைபட சமைத்து அவருக்கு உணவு படைத்தாள். அவரும் அந்த உணவை அமுதமென சுவைத்து சாப்பிட்டுவிட்டு அந்த வீட்டின் புறத்திலேயே சிறிது நேரம் தங்கியிருந்தார்.
அவளுடைய பெற்றோர் வந்தவுடன் அவர்களிடம், நான் உங்கள் பெண்ணை மணம் செய்துகொள்ள வேண்டும் என்பது என் குரு நாதரின் கட்டளை. உங்களுக்கு சம்மதமா? என்று கேட்டார். அவர்கள் 'திருமணத்திற்குப்பின் நீங்கள் எங்கள் சேரியிலேயே வாழவேண்டும். சரியென்றால் எங்கள் பெண்ணைக் கொடுக்கிறோம் என்றனர். அவரும் அதற்கு சம்மதித்து அக்குறப் பெண்ணை மணந்து கொண்டு குறவர் தொழிலையே செய்து வாழ்க்கை நடத்தி வந்தார். (இச்செய்தி அபிதான சிந்தாமணியிலும் இடம் பெற்றுள்ளது?
பற்றற்ற நிலை
ஒரு நாள் காட்டில் அவர் ஒரு மூங்கில் மரத்தை வெட்டிய போது அதிலிருந்து ஏராளமான தங்கத் துகள்கள் கொட்டின. அவைகளைப் பார்த்து அவர் ஆட்கொல்லி,
ஆட்கொல்லி
என்று கத்திக்கொண்டு அஞ்சி ஓடினார். அதைக் கண்ட நான்கு பேர் வழிமறித்து, ஏன் இப்படி ஓடுகிறாய்?
என்று கேட்க அவர் மூங்கிலிலிருந்து ஆட்கொல்லி வெளிப்பட்டது
! என்று பதிலளித்தார். அந்த நால்வரும் சிவவாக்கியரை அழைத்துக் கொண்டு போய் அந்த மூங்கில் மரத்தைப்
பார்த்தபோது அதிலிருந்து ஏராளமாகத் தங்கத் துகள்கள் கொட்டியிருக்கக் கண்டனர்.
அவர்கள் இதைத்தான் ஆட்கொல்லி என்கிறாயா? என்று கேட்டு அவரை அனுப்பி விட்டு அந்தப் பொன் துகள்கைளை ஒரு மூட்டையாகக் கட்டினர். சூரியன் மறைந்தவுடன் அந்தப் பொன் மூட்டையைத் தூக்கிச் செல்ல முடிவு செய்தனர். அந்த மூட்டையைக் காக்கும் பணியில் இருவர் இருக்க மற்ற இருவரும் நால்வருக்கும் உணவு வாங்கி வரச் சென்றனர். காவல் இருந்தவர்கள் உணவு வாங்கி வரச் சென்றவர்களைக் கிணற்றில் தள்ளிக் கொன்று விடவும், உணவு வாங்கச் சென்றவர்கள், காவல் இருந்தவர்களுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துக் கொன்று விடவும் திட்டமிட்டுச் செயல்பட்டனர். அவர்களின் திட்டப்படி விஷ உணவுடன் வந்தவர்களை காவல் இருந்த இருவரும் கிணற்றில் தள்ளி அவர்கள் மீது பெருங்கல்லைப் போட்டுக் கொன்று விட்டு கடும் பசி மயக்கத்தில் வேக வேகமாக விஷ உணவை உண்டு அழிந்தனர்.
கொங்கணவர் நட்பு
ஒரு நாள் சிவவாக்கியர் கீரை பறித்துக் கொண்டிருந்த போது அவரது தவ ஒளியால் ஈர்க்கப்பட்டு வான்வழியே சென்ற கொங்கணவர் அவரிடம் வந்து அளவளாவிச் சென்றார். பின் ஒரு நாள் கொங்கணவர் அவர் வீட்டிற்கு வந்த போது சிவ வாக்கியர் வீட்டில் இல்லை. தனித்திருந்த அவர் மனைவியிடம் வீட்டில் கிடந்த பழைய இரும்புத் துண்டுகளைக் கொண்டு வரச் சொன்னார். அவைகளையெல்லாம் தங்கமாக்கிக் கொடுத்து விட்டுச் சென்றார். வீட்டுக்கு வந்த சிவவாக்கியர் தன் மனைவியிடம் ஆட்கொல்லியான அந்தத் தங்கத் துண்டுகளை யெல்லாம் கிணற்றில் எறிந்து விடச் சொன்னார். அப்புனிதவதியும் எவ்வித மனச் சலனமுமின்றி அவைகளைக் கொண்டு போய் ஊர்ப் புறத்திலுள்ள பாழுங்கிணற்றில் போட்டு விட்டாள். அதன் பின் சிவவாக்கியர் ஒரு பாறையின் மேல் சிறுநீர் கழித்து விட்டு வந்து மனைவியிடம், இப்பாறை மேல் தண்ணீர் ஊற்று என்றார், அவள் தண்ணீர் ஊற்றியவுடன் பாறை தங்கமாக மாறியது. இத் தங்கத்தையெல்லாம் எடுத்துக் கொள் என்று அவர் கூற அவர் மனைவி <>தங்களுக்கு வேண்டாதது எனக்கு எதற்கு? என்று கூறி மறுத்து விட்டாள். அக்குற மகளுடன் ஏழு ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு. இல்லறத்தை துறந்து பற்றற்ற துறவியாக வாழத் தொடங்கினார்.
துறவு வாழ்க்கை
சிவ வாக்கியர் ஊர் ஊராய்ச் சுற்றி மக்கள் குறைகளைத் தீர்த்து வந்தார். தங்கம் தயாரிக்கும் முறையைக் கற்றுக்கொள்ளும் ஆசையில் பலரும் அவரிடம் சீடராக வந்தனர். அப்போது இந்த உலகியல் இன்பங்கள் எல்லாம் அற்பமானவை என்று உணர்வாய். முக்தி என்னும் உண்மையான ஆன்ம விடுதலை வேண்டுமா? தொடர்ந்து வரும் பிறவித் துன்பங்களுக்குக் காரணமான சரீர சுகம் வேண்டுமா? என்று கேட்டார். அந்த சீடனும் <>எனக்கு ரசவாதமும் வேண்டாம்; தங்கமும் வேண்டாம், சமாதி கூடி சித்தி பெற அருள் புரியுங்கள்' என்று வேண்டி முக்தி தரும் சித்தர் வழியில் செல்லத் தொடங்கினான். பின்னர் பல சீடர்களும் வந்து அவரிடம் தீட்சை பெற்று சித்தி அடைந்தார்கள்.
சமாதி கூடல்
இவ்வாறு பல ஊர்களுக்கும் தவ யாத்திரையாக சென்றார். ஒவ்வொரு ஊரிலும் தவக் குடில்கள் அமைத்துக் கொண்டு தவயோகம் பயின்று வந்தார். அவ்வாறு அவர் தங்கி வாழ்ந்த ஊர்களில் சிவன் மலையும் ஒன்று. இத்தலத்தில் அவர் முன் முருகப் பெருமான் தோன்றி அருளாசி வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதற்கு அடையாளமாக இந்த சிவன் மலையில் சிவவாக்கியர் குகை ஒன்றும் உள்ளது. இம்மலை உச்சியில் முருகன் கோவிலும் மலை அடிவாரத்தில் ஒரு சிவன் கோவிலும் (நஞ்சண்டேஸ்வரர் திருக்கோவில்) உள்ளன. இவ்வாறு பல ஊர்களுக்கும் சென்று தவ வாழ்க்கையும் சிவ வழிபாடும் செய்து வந்தார். ஒவ்வொரு ஊரிலும் மக்களுக்குப் பிணி நீக்கல் முதலான பல தொண்டுகளும் செய்து வந்தார். கடைசியில் குடந்தை மாநகரை அடைந்து அங்கேயே சமாதி பூண்டார். இன்றும் ஒவ்வொரு மாத பெளர்ணமி தினத்தன்றும் குடந்தையில் உள்ள அவரது சமாதி பீடத்திற்கு பூசைகள் நடைபெற்று வருகின்றன.
சிவவாக்கியர் சமாதி உள்ள இடத்துக்கு செல்லும் வழியை பகிரவும்
பதிலளிநீக்குசாதி பேதமில்லாமல் அன்பில் சிரந்த குரத்தியை மணம் செய்து உலகுக்கு ஓர் அறிவின் உதாரணமாகவும் முக்தியின் வழிகாட்டியாகவும் வாழ்ந்துள்ளார்.
பதிலளிநீக்குsivavakiyar ipodhu yen udambil pilli sooniyam yevalaga yen karmavai direction panni kondirukar
பதிலளிநீக்கு