Top bar Ad

3/10/18

பிண்ணாக்கீசர்‌

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. முற்பகுதி வாழ்க்கை
  3. ஆத்திமரம்
  4. ஜீவ சமாதி

முன்னுரை


இவர்‌ பாம்பாட்டி சித்தரின்‌ சீடர்‌. இவர்‌ நாக்கு இரண்டாகப்‌ பிளவுபட்டிருந்ததால்‌ பிண்ணாக்கீசர்‌ என்று அழைக்கப்ட்டார்‌. சிவகிரி என்று சிறப்பிக்கப்படும்‌ சென்னிமலை மீது ஒரு குகையில்‌ வாழ்ந்திருக்கிறார்‌. சென்னிமலை மீது நீண்ட காலம்‌ தவமியற்றி அங்கேயே ஜீவ சமாதியும்‌ கூடியிருக்கிறார்‌. அதனால்‌ சென்னிமலை சித்தர்‌ என்ற பெயரையும்‌ கொண்டிருக்கிறார்‌.

முற்பகுதி வாழ்க்கை


இவர்‌ வைகாசி மாதம்‌ சித்திரை நட்சத்திரம்‌ இரண்டாம்‌ பாதத்தில்‌ கன்னி ராசியில்‌ பிறந்தவர்‌. இவர்‌ பிராமண குலத்தவர்‌ என்று கருவூரார்‌, வாதாகாவியத்தில்‌ கூறியுள்ளார்‌. (பாடல்‌ 590)

ஆத்திமரம்


இவர்‌ வாழ்ந்த குகை ஒரு ஆத்திமரப்பொந்து என்றும்‌ கூறப்படுகிறது. அடிக்கடி மலையடிவாரத்தில்‌ உள்ள ஊருக்குள்‌ வந்து நடுத்தெருவில்‌ படுத்துக்கொண்டு பைத்தியக்‌காரனைப் போல்‌ பிதற்றிக் கொண்டிருப்பார்‌. பசி எடுக்கும்போது அவர் வீறிட்டு அழும்‌ சப்தம்‌ ஊர்‌ முழுவதும்‌ கேட்கும்‌. அவர்‌ அழுகை ஒலி கேட்டு யாராவது வந்து உணவு கொடுப்பார்‌. உடனே சித்தர்‌ அழுகையை நிறுத்தி சிரித்துக்‌ கொண்டு உணவு கொடுத்தவரை வாழ்த்துவார்‌. இதனால்‌ சென்னி மலை ஊர் மக்களும்‌ மகிழ்ச்சி அடைந்தனர்‌.

அந்த ஊரில்‌ யாருக்காவது எதாவது நோய்வந்தால்‌ அவர்‌ அந்த ஆத்திமரத்தடிக்கு செல்வார்‌. அவருக்கு பிண்ணாக்கீசர்‌ ஒரு பிடி மண்ணை அள்ளிக் கொடுப்பார்‌. நோயாளிக்கு அந்தந்த மண்‌ சர்க்கரையாகவே இனிக்கும்‌. அதை சாப்பிட்டவுடன்‌ நோயும்‌ குணமாகி விடும்‌. அவர் சமாதி அடைந்த பிறகு அந்த ஊர் மக்கள்‌ அந்த ஆத்தி மரத்தையே சென்னி மலை சித்தராகக்‌ கருதி வழிபட்டு வந்தார்கள்‌. பட்டுப்‌ போயிருந்த அந்த மரம்‌ காலப்போக்கில்‌ மீண்டும்‌ துளிர்த்து செழிப்பாக வளர்ந்து விட்டது.

இப்போதெல்லாம்‌ அந்த ஊர்‌ மக்கள்‌ யாருக்காவது நோய்‌ வந்து விட்டால்‌ அந்த மரத்தடிக்கு வந்து சித்தரை வேண்டி அம்மரத்தின்‌ இலைகளைப்‌ பறித்துக் கொண்டு போய்‌ கஷாயம்‌ வைத்து நோயாளிக்கு கொடுப்பதாகவும் உடனே நோய் நீங்கி விடுவதாகவும் கூறப்படுகிறது.

ஜீவ சமாதி


இந்த சித்தர் சென்னிமலை உச்சியில் சமாதி பூண்டு கோயில் கொண்டுள்ளார். அந்தக் கோவில் வேல்கள் நிறைந்த வேல் கோட்டமாகக் காட்சியளிக்கிறது. அந்த வேல் கோட்டத்தின் அருகே மிகப் பழமையான குகை ஒன்றும்‌ உள்ளது. அதன்‌ அருகில்‌ சரவணமாமுனிவர்‌ என்ற வேறு ஒரு சித்தர்‌ சமாதியும்‌ உள்ளது.

எட்டுக்குடி முருகன்‌ கோவில்‌, வைத்தீஸ்வரன்‌ கோயில்‌, மதுரை மீனாட்சி அம்மன்‌ கோவில் போன்ற பழங்கால சித்தர்களின்‌ சமாதிக்‌ கோவில்களாகவே உள்ளன. அவைகளில்‌ ஒன்றான பிண்ணாக்கீசர்‌ ஜீவசமாதியும்‌ சென்னிமலை முருகன்‌ கோவிலாக வளர்ந்துள்ளது. இந்த முருகன்‌ சன்னதியிலிருந்து தான்‌ பின்னர்‌ தேவராயசுவாமிகள்‌ முருகனின்‌ ஆறுபடை வீடுகளுக்கான கந்தர்‌ ஷஷ்டிக்‌ கவசங்களைப்‌ பாடியருளியுள்ளார்‌.

இந்த முருகன்‌ கோவில்‌ தரை மட்டத்திவிருந்து 1743 அடி உயரத்தில்‌ உள்ளது. இந்த சென்னிமலை திருப்பெருந்‌துறையிலிருந்து 13 கி. மீ. தூரத்திலும்‌ ஈரோட்டிலிருந்து 26 கி. மீ தூரத்திலும்‌ உள்ளது.

3 கருத்துகள்:

  1. ஓம் ஸ்ரீ தன்னாசியப்பர் போற்றி
    ஓம் ஸ்ரீ பிண்ணாக்கீசர் போற்றி
    ஓம் ஸ்ரீ சிரகிரி வேலவன் போற்றி

    தன்னாசியப்பர் என்கிற பிண்ணாக்கீசர் கோவைக்கு அருகிலுள்ள பெரியநாயக்கன்பாளையம் செல்வபுரம் மலையடிவாரத்தில் மிகப்பெரிய ஆலமரம் மற்றும் கராச்சி மரம் கீழ இருந்து அருள்பாலித்து வந்திருக்கிறார் அங்கே ஒரு அருமையான கோயிலும் கட்டப்பட்டிருக்கிறது

    பதிலளிநீக்கு
  2. இல்லை அவர் ஜீவசமாதி நாங்குனாசேரி என்னும் நான்குநேரி யில் அமைந்துள்ளது

    பதிலளிநீக்கு
  3. நண்ணாசேர் என்ற ஊர் என்று
    சொல்கிறார்கள் அந்த ஊர் எங்கு உள்ளது? தெரிந்தவர்கள் பதிவிடலாம்.

    பதிலளிநீக்கு