- பிறப்பு
- குடும்ப வாழ்க்கை
- பளிங்கரான வரலாறு
- போகரின் சிஷ்யர்
- போகரின் உபதேசம்
- திருமழிசை ஆழ்வார் சந்திப்பு
- கெளதமர் தொடர்பும் நிறைநிலை அடைவும்
- கொக்கை எரித்த கதை
- கர்வம் அகன்றது
- மாயை
- குளிகைகள் எரிந்து சாம்பலாதல்
- சமாதி கூடல்
பிறப்பு
கொங்கு நாட்டில் இவர் பிறந்தமையால் இவரைக் கொங்கணவர் என்றே அழைத்தனர். இவர் கோவைக்கு அருகேயுள்ள பகுதியில் வசித்தார் எனச் சிலரும், கோவை மாவட்டம் தாராபுரத்துக்கு அடுத்து இருக்கும் ஒதிய மலையில் வாழ்ந்தவர் என்று சிலரும் கூறுவர். கொங்கணவர் கொங்கு நாட்டில் சங்கர குலத்தில் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் (தனுசுராசியில்) பிறந்தவர்.
குடும்ப வாழ்க்கை
அகத்தியர் பெருநூல் காவியம் மட்டுமே கொங்கணவரது பிறப்பு வளர்ப்பு பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றது. கொங்கணவரின் பெற்றோர் இரும்பை உருக்கிக் கலங்கள் (பாத்திரங்கள்) செய்து கோயில் வாசலில் வைத்து விற்றுத் தம் பிழைப்பை நடத்தி வந்தார்கள். ஏழ்மையான நிலையில் வாழ்ந்தாலும் யோகியர், சாதுக்கள் போன்றோரைக் கண்டால் அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தும், உபசாரங்கள் பலவற்றைச் செய்தும் ஏவல் கேட்டும் பண்போடு வாழ்ந்து வந்தனர்.
கொங்கணவர் பதினாறு வயதிலேயே இரும்புப் பாத்திரங்கள் செய்வதில் நிபுணராகி விரைவில் பாத்திர வியாபாரத்தில் பெரும் வணிகரானார். கொங்கணவர் தம் பெற்றோர் போலவே இரும்புக் கலங்களைச் செய்து விற்றுப் பிழைத்து வந்தார். பணம் தேடிச் சேர்த்தார். திருமணமும் செய்து கொண்டார். மாடமாளிகைகள் கட்டி வாழ்ந்தார். அதோடு முனிவர்களைப் பெரிதும் உபசரித்து வந்தார். அம்முனிவர்களும் அகமகிழ்ந்து இவருக்கு மெய்ஞ்ஞானத்தை ஊட்டி வந்தனர். அதனால் அவர் குடும்ப வாழ்க்கையைத் துறந்து துறவியானார்.
பொருள் : தம்மை நாடி வந்த ரிஷிகளுக்கு கொங்கணவர் பசும்பாலினை அருந்தக் கொடுத்தார். அவர்கள் கொங்கணருக்கு மெய்ஞ்ஞானம் என்னும் பாலை ஊட்டினர் அதனால் அவருள் இருந்த அஞ்ஞானம் அழிந்து, மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்றார். இல்லற வாழ்க்கையைத் துறந்து துறவியானார்....
பளிங்கரான வரலாறு
அவர் கூடுவிட்டுக் கூடு பாய்தல் முதலான அஷ்ட மாசித்திகளையும் பெற்று மகாசித்தரானார். ஒரு சமயம் அவர் மலைச்சாரல்களிலுள்ள காடுகள் வழியே சென்று கொண்டிருந்த போது மலைவாழ் பளிங்கர் இனத்தைச் சேர்ந்த ஒருவன் இறந்து கிடந்ததைக் கண்டார். அவன் இனத்தவர்கள் கதறி அழுததைக் கண்டு அவர்கள் மீது இரக்கமுற்றுத் தன் சரீரத்தைவிட்டு அந்தப் பளிங்கனின் சரீரத்தில் புகுந்து ஒரு பளிங்கனாகவே மாறிவிட்டார். அவர் மறைத்துவைத்திருந்த அவரது உடலைக்கண்ட பளிங்கர்கள் அதை எரித்து சாம்பலாக்கிவிட்டனர். அது முதல் அவர் ஒரு பளிங்கனாகவே கடைசி வரை வாழ்ந்து வந்தார்.
அதன்பிறகு போகர் அவருக்கு குருவாக அமைந்தார். போகரிடம் ஞானம்பெற்ற பின் அகத்தியரிடமும் சிடராயிருந்து தவ யோகத்தில் ஈடுபட்டு சித்தராக வாழத் தொடங்கினார்.
போகரின் சிஷ்யர்
போகரின் சிஷ்யர்களுள் சற்று வித்தியாசமானவர் கொங்கணர். இவரின் மனைவி அதிக பேராசை மிக்கவள். கோடி, கோடியாய் பொற்காசுகளும், நவரத்தின மணிகளும், தனது வீட்டில் கொட்டி செழிக்க வேண்டும் என்று விரும்பினாள். அப்படி சம்பாதிக்க துப்பு இல்லாதவர்கள், ஆணாக இருந்தாலும் அவர்கள் பேடிகள் தான் என்னும் கூற்றில் வலுவாக இருந்தாள். இது கொங்கணரின், வாழ்வை மிகவும் பாதித்தது. அந்த நிலையில் தான், ஒரு சித்தர் கொங்கணவர் பார்க்க, தங்கக் காசுகளை வரவழைத்தும், கைகளை வருடித்தந்து வாசனையை உருவாக்கியும் அற்புதம் செய்தார். இந்த இடத்தில் தான் கொங்கணரும் விழுந்து போனார். தாமும் இந்த வித்தைகளைக் கற்றுத் தேற வேண்டும், என்ற ஆவல் அவரது மனதில் எழுந்தது.
போகரின் உபதேசம்
ஒரு நாள், போகரின் தரிசனம் கொங்கணருக்கு கிடைத்தது. அவரிடம் கொங்கணர், தான் கைதேர்ந்த சித்தன் ஆகிட மந்திர உபதேசம் அளிக்குமாறு கேட்டார். அதற்கு போகர், உபதேசம் செய்வது எளிது என்றும், அதனைப் பின் பற்றித் தவம் செய்வதில் தான் எல்லாம் உள்ளது என்னும் உண்மையை கொங்கணருக்கு எடுத்து உரைத்தார். மேலும் அவர் கூறும் பொழுது தவம் செய்வது என்பது உயிரை வளர்க்கும் செயல் போன்றது இல்லை, என்றும். அதற்கு நேர் மாறானது என்றும் கூறினார். எனினும், கொங்கணர் விடுவதாக இல்லை, தன்னால், தன்னையே மறந்து தவம் செய்ய முடியும் என்றும். தவம் கலையாமல் அதனைத் தொடர இயலும் என்றும் வாதாடினார். இதற்கு மேல், கொங்கணரின் தலை எழுத்து என்று மந்திர உபதேசம் செய்து விட்டு போகர் அந்த இடத்தை விட்டுச் சென்றார்.
போகரின் உபதேசம், கொங்கணரை கடும்
தவத்தில் மூழ்கடித்தது. போகர் அழுத்தமாக
கூறிய அந்த வார்த்தைகள் யாவும், தவத்திற்கு
இடையூறு வரும் பொழுது எல்லாம்
கொங்கணரை எச்சரிக்கை செய்து, தவத்தை
தொடர வைத்தது. ஆனால் கொங்கணர்
வகையில், அவருடன் மோத இயலாமல்
பஞ்சபூதங்கள் செயல் இழந்தாலும், மாயை
அவரை விட வில்லை. மாயையின் காரணத்தால்
தவத்திற்கு பதில், ஏன் யாகம் செய்து நாம்
சித்தனாகக் கூடாது? என்ற எண்ணம் அவர்
மனதில் மெல்லத் தோன்றியது.
( தவம் என்பது உலகம் நல்வழிப் பட செய்யும்
சுயனலமற்ற தர்மம், ஆனால் யாகம் அல்லது
ஹோமம் என்பது தன்னலம் கருதி ஒருவர்
சுயநலத்துடன் செய்வது )
திருமழிசை ஆழ்வார் சந்திப்பு
அவர் வழிப்பயணத்தில் திருமழிசை ஆழ்வாரை சந்தித்தார். தான் வைத்திருந்த ரசக் குளிகையைக் காண்பித்து, இது காணி கோடியை பேதிக்கும் என்றார்.ஆனால் ஆழ்வாரோ தன் உடம்பின் அழுக்கைத் திரட்டிக் கொடுத்து இது காணிகோடா கோடியைப் பேதிக்கும் என்றார். கொங்கணவர் ஆழ்வாரின் பெருமையை உணர்ந்து அவரை வணங்கி விடைபெற்றுத் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
கெளதமர் தொடர்பும் நிறைநிலை அடைவும்
ஆனால், கொங்கணர் இது வரை செய்த தவப் பயனின் விளைவாக கெளதமர் என்னும் மகரிஷி அவர் முன் தோன்றி. உண்மை நிலையை அவருக்கு விளக்கிக் கூறவே. கொங்கணர், உண்மையை அறிந்து மீண்டும் தவத்தில் மூழ்கிப் பெரிய தவ சீலராக மாறினார். அவர் ஒரு மலை அடிவாரத்தை அடைந்த போது அங்கே தம் உள்ளுணர்வில் இன்பமயமான தெய்வீகத் தோற்றங்கள் பலவற்றைக் கண்டார். அதோடு இனிமையான பல வாத்திய ஒலிகளையும் கேட்டார். அதைத் தொடர்ந்து அங்கே கெளதம ரிஷி ஒரு சமாதியிலிருந்து வெளிப்பட்டார். அவர் உபதேசம் பெற்ற கொங்கணவர் தம் தவவலிமையை மேலும் பெருக்கிக் கொள்ள பனிரண்டு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். மிக்க தவ வலிமையுடன் வெளிப்பட்ட கொங்கணவர் தான் ஒரு சர்வசக்தி வாய்ந்த ரிஷியாக உயரவேண்டும் என்ற ஆசையில் ஒரு யாகம் செய்யத் தொடங்கினார். அப்போது ஒளி உடலுடன் அவர் முன் தோன்றிய கெளதமர், தகுதிக்குமேல் ஆசைப்ட்ட கொங்கணவரை சபித்துவிட்டார். கொங்கணவர் கெளதமரை வணங்கி சாபவிமோசனம் கேட்க, முனிவர் “சாபவிமோசனம் பெற தில்லை வனத்திற்குப் போ என்று கூறிவிட்டு மறைந்தார்.
தில்லைவனம் சென்ற கொங்கணவர் முன் பராசர முனிவர் தோன்றி சாபவிமோசனம் அளித்தார். அதன்பிறகு கெளதமர் அங்கு தோன்றி யாகம் செய்ய வரமளித்தார். இவ்வளவு நல்வரங்கள் பெற்ற நிலையிலும், கொங்கணவர் தம் மனதில் ஏதோ குறை இருந்து வருவதை உணர்ந்து தன் குருநாதரான போகரிடம் சென்று சரணடைந்தார். குருவின் ஆணைப்படி திருமாளிகைத் தேவரிடம் சென்று நிர்வாணத் தீட்சை முதலான பல அரிய தீட்சைகளைப் பெற்று உயர்ந்த சித்தராக ஓரிடத்தில் தங்கி வாழ்ந்தார். அங்கு அவரிடம் 500க்கும் அதிகமான சீடர்கள் சேர்ந்தார்கள். அவர்கள் அனைவரும் ஞானமார்க்கத்திலும், குளிகை மார்க்கத்திலும் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கினார்கள்.
கொங்கணர் யாகம் வளர்த்து, குறுக்கு வழியில் தவ சீலராக மாற முற்படும் பொழுது நடந்த சம்பவம் ஒன்று உள்ளது.
கொக்கை எரித்த கதை
அந்த நாளில், கொங்கணர் தனது யாகத்தின் பயனாக, எதை கோபத்துடன் பார்த்தாலும் (ஒரு மரத்தைப் பார்த்தாலும் கூட) பற்றி எறியும். அப்பொழுது ஒரு நாள், ஒரு கொக்கு, கொங்கணர் நடத்திய வேள்வியின் பொழுது, அவர் மேல், எச்சம் இட்டது. கொங்கணர் விடுவாரா? அவர் தான் தற்பொழுது மாயையின் பிடியில் உள்ளாரே! உடனே, அவர் அந்தக் கொக்கை கோபத்துடன் பார்க்க, அந்தக் கொக்கு பற்றி எரிந்தது. தனது இந்த தபோ பலத்தால் கொங்கணர், பெரும் கர்வத்தில் இருந்தார்.
இவரும், திருக்குறளை எழுதிய
திருவள்ளுவரும் சமகாலத்தவர்களே. இப்படி
இருக்கும் பொழுது தான், கொங்கணர்,
கொக்கை எரித்த கோபத்துடன் அவர் அடுத்து
யாசகம் கேட்டு சென்ற இடம் வள்ளுவரின்
குடிசைக்கு.
பலகாலம் உணவின்றி இருந்ததால் பசி வயிற்றைக் கிள்ள அவர் அருகில் இருந்த திருவள்ளுவர் வீட்டிற்குப் பிச்சைக்குச் சென்றார்.
வள்ளுவரின், மனைவி வாசுகி,
வள்ளுவருக்கு பணிவிடைகள் செய்வதில்
மும்முரமாக இருந்தாள். காரணம், அவள் பெரும்
பதி விரதை. கொங்கணர், யாசகம் கேட்டு, சற்று
தாமதமாகவே வாசுகி அவருக்கு பிச்சை இடும்
படி ஆனது. இந்த காரணத்தை அறியாத
கொங்கணர், உனக்குத் தான் என்ன ஒரு
அலட்சியம் ...
என்று வாசுகியை எரிப்பது
போலப் பார்த்தார். வாசுகிக்கு, அந்தப்
பார்வையின் பொருள் புரிந்தது
கொக்கென்று, நினைத்தாயோ கொங்கணவா? என்று திருப்பிக் கேட்க
கொங்கணர் ஆடிப் போனார்.
இச்சம்பவம் கொங்கணவர் வாத காவியத்தில் இடம் பெற்றுள்ளது.
கர்வம் அகன்றது
இப்பொழுது அவர் மனதில் இரண்டு கேள்விகள். எப்படி வாசுகியால் தன்னை அறிய முடிந்தது? இது முதல் கேள்வி. அடுத்த கேள்வி, எல்லாவற்றையும் எரிக்கும் தன்மை கொண்ட தனது கோபப் பார்வை, எப்படி, வாசுகியை மட்டும் விட்டு வைத்தது? என்பது. அதற்கான விடை பிறகு தான் அவருக்கு புரிந்தது. ஹோமம் வளர்ப்பது, யாகம் புரிவது, தவம் செய்வது அனைத்தையும் விட மேலான செயல், “தான்” என்ற அகந்தை இல்லாமல் பணிவிடை புரிவது, தனக்கென வாழ்வது. அந்த நொடி, கொங்கணருக்கு தனது தவச் செயலால் உருவான கர்வம் பொடிப் பொடி ஆனது. இப்படி கொங்கணவர் தனது அனுபவத்தால் அறிந்தது ஏராளம். இது போல இன்னொரு சம்பவமும், கொங்கணர் வாழ்வில் நடந்தது.
மாயை
இவரது குருவான போகர் அவர்களுக்கு, ஒரு பெண்ணின் மீது மோகம் என்னும் பிரமை ஆட்கொண்டது. ஆனால், அவளோ அவருக்கு வசப்படாமல் போனால், இதனால் போகர், சோகத்தில் மூழ்கினார். இதனை அறிந்த கொங்கணர், குருவின் வருத்தத்தை போக்க, ஒரு கற்சிலையை, உயிருள்ள பெண்ணாக மாற்றி போகரிடம் அளித்து பெருமைப்பட்டார். இதனைப் பார்த்த போகர், கொங்கணரை பார்த்து சிரித்தார். அவ்வாறு போகர், சிரிப்பதன் காரணத்தை கேட்ட கொங்கணரிடம், போகர் சொன்னாராம் "கொங்கணவா, இது போல கல்லுக்கு, உயிர் கொடுக்கும் வித்தை எனக்கு தெரியாது என்று நினைக்கின்றாயா? மாயையில் வந்தது, மாயையில் தான் செல்லும். என் மனதைக் கவர்ந்த அந்தப் பெண்ணிடம், அழகைத் தவிர்த்து பல சிறப்பம்சங்கள் உள்ளது. அதனை, உன்னால் இந்த கற்சிலையில் இருந்து தோன்றிய இந்த பெண்ணுக்கு அளிக்க முடியுமா? என்று வினவினார். அப்போதே கொங்கணர், உண்மை நிலையை அறிந்து கொண்டார்.
இவ்வாறு கொங்கணரை மாயை பல இடங்களில் கொள்ளை கொண்டது, இது போன்று இன்னொரு சம்பவமும் கொங்கணர் வாழ்வில் நடந்தது.
குளிகைகள் எரிந்து சாம்பலாதல்
அது என்னவெனில். சில குளிகைகள் வைக்கப்பட்ட இடத்தில் கல்லோ, மண்ணோ இருந்தால், அதை சாம்பலாக்கி விடும். இப்படிப் பட்ட குளிகைகளில் ஒன்றை சிவலிங்கத்தின் மீது வைத்தார். ஆனால், சிவலிங்கத்தின் மீது பட்ட சில நொடிகளில், அந்தக் குளிகைகளே சாம்பல் ஆனது. சிலர், இதனை இப்படியும் கூறுவர், கொங்கணர் மருத்துவ குணம் கொண்ட குளிகையை மலரிலும் ,மேலாகக் கருதி சிவனின் மீது வைத்தார். ஆனால், சிவனோ பக்தர்கள் அன்போடு அளிக்கும் மலர்கள் அந்த மருத்துவ குணம் கொண்ட குளிகைகளை விட மேல் ஆனது என்பதை காட்டவே, அந்தக் குளிகைகளை எரித்துக் காட்டியதாகவும் சொல்வர்.
சமாதி கூடல்
தமக்கு சமாதி கூடும் காலம் கூடிவந்து விட்டதை உணர்ந்த கொங்கணவர் திருத்தணிகை சென்று வீரட்டகாசமூர்த்தியின் தலைமேல் தம் குளிகையை வைத்தார். லிங்க வடிவில் இருந்த அந்த சிவமூர்த்தி அக்குளிகையை நீராக்கி அழித்து விடாமல் தம்முள் ஈர்த்து மறைத்துக் கொண்டார். தன் தவறை உணர்ந்த சித்தர் சிவபெருமானைப் பணிந்து வழிபட்டு தம் குளிகையைத் திரும்பப்பெற்றார். அதன் பிறகு நேரே திருப்பதி சென்று திருவேங்கட மலைமீது தங்கி தவத்தைத் தொடங்கினார்.அப்போது வனேந்திரன் என்ற சிற்றரசன் அவரிடம் வந்து சடனானான். அவனுக்கு ஏற்ற எளிய முறையில் தவ வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து விட்டு அங்கேயே ஜீவ சமாதி அடைந்தார். இப்போது அவர் திருப்பதி மலைமீது அருள்மிகு வெங்கடேசப் பெருமாளாக இருந்து கோடிக்கணக்கான பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வருவதுடன் நாடி வருபவர்களுக்கெல்லாம் வளமான வாழ்வளித்தும் வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக