வாதநரமே குளிர்கம்பம் வானீர் தகைப்பு மயிர்குத்து
போதமூறித் தாபமுடன் புகல்வாய்க்குறடு தானொடுங்கல்
பேதமாகத் தலைக்கடிகைப் பிளந்தாப் போல கன்னந்தோல்
காதுங்கருகிச் சுவாசமுடன் காசமிகவாங் கண்டீரே.
குளிர், நடுக்கம், வாயில் நீரூரல், பயம், மயிர்க்கூச்சல், உடம்பில் எரிச்சல், வாயைத் திறக்க முடியாமை, தலையைப் பிளக்கும்படியான வலி, கன்னம், தோல், காது முதலான இடங்களில் கருமை நிறம், சுவாசம், இருமல் முதலான குறிகளுடன் ஜ்வரம் இருந்தால் அது வாத ஜ்வரமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக