உலகில் பல்வேறு பகுதியில் பற்பல மருத்துவ முறைகளைக் கொண்டு நோய்களைக் குணமாக்குகின்றனர்.
அம்முறைகளில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, அலோபதி எனும் ஆங்கில மருத்துவம் ஆகியன அடங்கும்.
இது தவிர வேறு முறைகளிலும் நோய்களை குணமக்குகின்றனர்.
முதல் மூன்று முறைகளும் இயற்கைலிருந்து கிடைக்கும்.
வேர், செடி, இலை, கிழங்கு, விதை மற்றும் பல பொருள்கள் கொண்டு மருந்து தயாரிக்கப்பட்டு மக்கள் நோயின்றி வாழ வழி வகுக்கின்றன.
இதில் மிகவும் தொன்மை வாய்ந்த மருத்துவம், சித்த மருத்துவமேயாகும்.
இதனைத் தமிழ் மருத்துவம் என்று அழைப்பர்.