என்புறு நரம்பினாலே இயல்புறப் பிணித்துப் பின்னை
யன்புறு சதையைப்பாவி யதிலுறு தோலைப்போற்றி
நன்புறு நிணமு மூளை நன்னிரத் தமதாகித்
துன்புறு வியாதிதோன்றும் நாடிகள றிந்து சொல்லே,
விரும்பிய உடற்கண் ணெங்கு மேவியே கலந் துநிற்கும்
நரம்பென்னும் நாடிதன்னை நல்லசாஸ்த் திரத்தினாலே
திருந்தவே யோதியோர்ந்தோர் தெளிவுறப் பார்க்க(ட)க் கேட்டு
அறிந்தபாத் திருத்துநாடி யடவுட னுரைக்கலுற்றேன்.
சரீரம் என்றால் உடல் என்று பொருள். சரீரம் எவ்வாறு சிருஷ்டிக்கிறது என்று இப்பாடல் விளக்குகிறது. இச்சரீரத்தில் காணும் எலும்புகளை முதலில் நரம்பினால் பிணைத்து, பின்னர் அதன்மேல் சதையைச் சிருஷ்டித்துக் காத்ரமாகச் செய்து தோலைப் போற்றியிருக்கிறார். பின்னர் நிணம், மூளை, இரத்தம், வியாதிகளைத் தோற்றுவிக்கும் நாடிகள் முதலானவைகள் உண்டாகின்றன. வியாதிகளைத் தோற்றுவிக்கும் நாடிகள் உடல், கண் முதலான உறுப்புகளில் கலந்து நிற்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக