நாடியால் முன்னோர் சொல்லும் நன்குறிக் குணங்களாலும்
நீடிய விழியினாலும் நின்றெழு வெயிலினாலும்
கூடிய குணபாடந்தான் குறித்துடன் பார்த்துப் பின்னும்
சூடிய குணங்களாலே சுகப்பட அறிந்து சொல்லே
விளக்கம் :
நாடிகளின் குறி குணங்களாலும், விழியைப் பரிஷிப்பதனாலும், வெயிலினாலும் (காலபேதம்), குண பாடங்களை அறிந்து உபயோகப்படுத்தியும் நோயாளியின் தேக சுகத்தை அறிய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக