ஆயுர்வேதங்களில் வாததோஷம் அதன் ஸ்தானத்தையும் செய்கைகளையும் அனுசரித்து 5 வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
- பிராண வாயு
- மார்பு, கழுத்து முதலான இடங்களில் சஞ்சரிக்கும்.
- புத்தி, இருதயம், மனது, இந்திரியங்கள் முதலானவைகளுக்கு வன்மை தரும்.
- துப்புதல், தும்மல், ஏப்பம், மூச்சு விடுதல் முதலான காரியங்களைச் செய்வதுடன் வாயில் போட்டுக் கொண்ட ஆகாரத்தை வயிற்றுள் செலுத்தும்.
- உதான வாயு
- இருப்பிடம் மார்பு.
- மூக்கு முதல் தொப்புள் வரை சஞ்சரிக்கும்.
- பேச்சு, முயற்சி, காந்தி, பலம், வர்ணம் (தேகநிறம்] ஞாபக சக்தி இவைகளையளிக்கவல்லது.
- வியான வாயு
- இருப்பிடம், இ்ருதயம்,
- சரீரமெங்கும் சஞ்சாரம் செய்யும்,
- நடத்தல், நீட்டல், சுருக்கல், கண்களைச் சிமிட்டுதல், முதலானவைகளைச் செய்வதுடன், சரீரத்தில் ஏற்படும் எந்த அசைவுக்கும் காரணமாகும்,
- சமான வாயு
- இருப்பிடம் ஐடராக்னிக்குச் சமீபம்.
- குடலில் எப்போதும் சஞ்சரிக்கும்.
- சாப்பிடும் ஆகாரத்தை ஏற்று, பக்குவம் செய்து, ஒவ்வொரு தாதுக்களுக்கும் செலுத்துகிறது.
- மற்றதை வெளித் தள்ளுகிறது.
- அபான வாயு
- இருப்பிடம்-குதஸ்தானம்.
- பின்புறம், மூத்திரப்பை, துடை, குறிகள் இவைகளில் சஞ்சரிக்கும்.
- சுக்கிலம், ஆதத்தவம், மலம், மூத்திரம், கர்ப்பம் முதலானவைகளை வெளியே தள்ளும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக