தந்திர மாகக்கன்னர் தன்னிலே சமுத்திரம் போலச்
சுந்திர கோஷமாகித் துலங்குநாள் மரணகால
மந்திரநிர் கோஷந்தான் மறையவர் முனிவோர் சொன்ன
இந்திரத் தசசேர்வாயு வென்னலா மறிந்துபாரே,
- தனஞ்சயன் என்ற வாயுவின் நிறம் நீலம்.
- கருப்பையிலிருந்து குழந்தையை வெளியே தள்ளும்.
- மனித உடல் இறந்து வீழ்ந்த பின் ஏனைய ஒன்பது வாயுக்களின் பணிகள் முற்றிலும் நின்று விடும். அத்துடன் அவை யாவும் உடலை விட்டு வெளியேறி விடும்.
- ஆனால் தனஞ்சயன் பிராணன் உடலைவிட்டு நீங்கிய பின்னரும் தான் பிரியாமல் எட்டு நாட்கள் வரை உடலில் நின்று இயங்கிக் கொண்டு இருந்த ஒவ்வொரு செல்களையும் (நுண் திசுக்கள்) இறக்கச் செய்து விடுகிறது.
- அவ்வமயம் தனஞ்செயன் நுண் கிருமிகளைத் தூண்டிவிட்டு வெளியே இருந்து வெளிக்காற்று, ஒளி உட்புக முடியாமல் உடல் தோல் மற்றும் தசைகளை விறைக்கச் செய்வதும் உடலை வீங்க வைத்தும், அழுகச் செய்தும் (நாற்றமெடுக்கும்படி), (DEGENERATION) முதலானவைகளைச் செய்து மேனியைக் குலைக்கிறது.
- பின்னர் உடலில் இருந்து வெளியேறி விடுகிறது.
- இதனை வீங்கற்காற்று என அழைப்பர்.
- காதில் சமுத்திர கோஷம் போன்ற சத்தத்தை உண்டாக்கினால் மரணம் சமீபித்திகிறது என்று அறியவும், மந்திர கோஷம் போலவும் காதில் சப்தம் உண்டாகும்.
தனஞ்சயன் வாயு
பதிலளிநீக்குஇப்பாடல் ஓர் அறுசீர் விருத்தம் ஆகும்
(விளம் மா தேமா அரையடிக்கு)
தந்திர மாகக் கன்னர் தன்னிலே சமுத்திரம் போலச்
சுந்திர கோஷ மாகித் துலங்குநாள் மரண கால
மந்திர நிர்,கோ ஷந்தான் மறையவர் முனிவோர் சொன்ன
இந்திரத் தசசேர் வாயு வென்னலாம் அறிந்து பாரே,
ஐயா மூன்றாவது, அதாவது மோக்ஷம் அடைய போகும் மனிதருக்கும் இந்த வாயு வேலை செய்து முக்தி பெற வைக்கும்.
பதிலளிநீக்கு