முன்னநின்ற நோயினர்க்கு முகப்பிணி யவைகள் பார்த்துப்
பின்னவருள்ளி லக்கணத்தைப் பேரான வைத்தியந்தான்
தன்னறிவி னாலறிந்து சாத்யமு மசாத்யமு
மின்னதென்ன வெவவரிந்து விதற்குச்சிகத்ஸை
பண்ணிடுவாம்.
நோயாளியின் முகம் முதலான அங்கங்களைச் சோதித்து, அவைகளுக்கு உண்டான குறிகளையும் மனதில் வைத்துக் கொண்டு, அறிவையும் உபயோகித்து இந்த நோய் சாத்யமானது, இது அசாத்யமானது என்று தெரிந்து வைத்தியம் செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக