உள்ள நோயினர் நாவது சொரசொரப்புடனே
தெள்ளு பான்னூரில் வாதமாஞ் சிவப்பொடு பசுமை
கொள்ளு நாவது பித்தமாங் கூறிடுங் கபந்தான்
வெள்ளையாகின் நீர்க் கிறைவாயிடுமிகவே.
உலர்ந் துமுட் படுகறுத்து நாவுறுவது சன்னி
கலந்து வன்னமுங் குணங்களுங் காண்பது தொந்த
மிலங்கு மிக்குண மூன் றுட நாவறண்டிருந்தா
லலங்கலங் குடிலன்ன மெய் சாத்தியமாமே
நாவுறு குறிகள் வாதம் விழுந்துமுட் பரந்துபச்சை
தாவுறில் வாதபித்து தருககுப் பிதனால் செம்மை
மேவிடு முன்னுமாகு மிகுந்த சேத்துமஞ் சிகப்பாம்
பாவுமுன் னொடுதிரைஞ்சு பருமையாம் சன்னிவாதம்.
- நாக்கில் சொரசொரப்புடன் அரிப்பு ஏற்பட்டால் வாததோஷம் அதிகரித்திருக்கிறது என்று அறிந்து கொள்ளவும்.
- நாக்கு சிவந்த நிறமாகவோ, பசுமை நிறமாகவோ காணப்பட்டால் பித்தம் அதிகமாக இருக்கிறதென்று தெரிந்து கொள்ளவும்.
- நாக்கின் நிறம் வெண்மையாடல் கபதோஷம் அதிகப்பட்டிருக்கிறது என்று அறியவும்.
- சன்னியால் நாக்கில் வரட்சியுண்டாகி, முட்கள்போல் சதை வளர்ந்து கருமை நிறமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக