திறல் செய் விரலைப் பற்றிச் செய்ததோர் கருதில் மூன்றாய்
பிறியவே சகடநாடி பின்னெழு வாத நாடி
அறியவு தரங்கோ பித் தட்சியே பித்தந் தோன்றில்
உறுபிணி தணிய வென்று ஒதுங்கியே நிற்குந்தானெ.
விரல்களைப்பற்றி நாடி பார்க்கையில் ஒவ்வொரு நாடிகளையும் மும்மூன்றாய் பிரித்தால் சகட நாடியாகும். வாதம் ஒதுங்கி நின்றால் வயிறு வேதனை என்றும், பித்தம் ஒதுங்கி நின்றால் பிணிகள் தீருவதற்கென்றும் தெரிந்து கொள்ளவும்.
அசையெனும் நாடிபார்க்க லதிகப்பட்டா லக்கனியா
மிசையுமுடம்பு சேத்துமங்க ளிழைத்து நடக்கில் சாவாகும்
வசையின் துடியி னிசையாளே! வாத பித்தச் சிலேத்துமங்
கசையுந் தன்னில் நேரொத்தால் கருமம் முடியுங்
கள் கனங்குழலே!
நாடிகள் அதிகமாகத் தோன்றல் அக்கினியை போலதாகும். உடம்புடன் கபம் இழைந்து நடந்தால் மரணம் என்று கொள்ளவும். வாத, பித்த, கபங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தாலும் மெள்ள நடந்தாலும் மரணம் ஆகும்.
வாதந்தான் காலிற்தோன் றும் வயிற்றினிற் பித்தஞ்சேரும்
சேதமே செய்யுமய்யஞ் சித்திரத் திடக்கண் மாதே!
நாதனா ரருளிச்செய்த நாமிது தூசு பாரில்
வேதநூல் விதியிதென்று விளம்பினர் பெரியோர் தாமே,
வாதநாடி காலில் இருக்கும், பித்தமோ வயிற்றில் இருக்கும், கப நாடி உடலை நசிக்கச் செய்யும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக