முன்றுவிரலாம் பெருவிரற்கீழ் முனிவர்தான்றி முன் பார்க்கத்
தோன்றும் வாதம் நடுப்பித்தந் துலையாச் சேத்தும மிடத் தென்ப
கான்று மிகவுங் கரமாயக் கடுகிநடக்கு மவைகண்டால்
ஊன்றும் விரலை விட்டுவிட்டு உபசாரமாய் நடப்பாயே.
நோயாளியின் வலது கைக்கட்டை விரலுக்குக் கீழ் வைத்தியர் தன் மூன்று விரலையும் ஊன்றிப் பார்க்க, முதல் விரலில் வாதமும், நடுவிரலில் பித்தமும், கடைசி விரலில் கபமும் ஒடும். பின்னர் இம்மூன்று விரலினாலும் விட்டு விட்டு ஊன்றிப் பார்க்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக