ஏகிய நாடிமூன்று மியம்பிடிற் சந்தியாகு
மாகிய வன்னங்கோழி மயிலென நடக்கும் வாத
வாகிய வாமையட்டை யவையென நடக்கும் பித்தம்
போகிய தவளை பாம்பு போலது மய்யந்தானே.
கை பார்க்கையில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளும் படபட என்று பேசினால் சந்நி என்று உணரவும்.
- வாத நாடி, அன்னம், கோழி, மயில் இவைகளின் நடையை ஒத்திருக்கும் (அசைந்து அசைந்து செல்லும்)
- பித்தநாடி, ஆமையின் கதியையும், அட்டையின் கதியையும், (நேராக ஊர்ந்து செல்லுதல்) பெற்றிருக்கும்.
- கப நாடியே தவளையின் கதியையோ, பாம்பின் கதியையோ கொண்டிருக்கும். (தத்தி விழுதல், நெளிதல் முதலிய கதி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக