விஷகலை தன்னில் நாடி வெறவற ஓடியேதான்
மசகாமல் மீளுமாகில் மரிப்பது மில்லையென்க
வசைநரம் பதனிலுன்னி யஞ்சயின் னவத்தையாகுங்
கசநரம் பதனிலுன்னிக் கத்தினாற் காலந்தானே.
விஷகலையில் நாடி சென்று, பின்னர் வந்த வழியே திரும்பினால் அவர்களுக்குச் சாவு இல்லை என்று சொல்லவும். வசை நரம்பில் நாடி துடித்தால் அவஸ்தையைக் கொடுக்கும். கச நரம்பில் பேசினால் மரணம் என்று அறியவும்.
வெள்ளம்போ லோடியேதான் மீளுமாய் மிமையொன் றில்லை
பள்ளமீன் நஞ்சையுண்டு பறந்துடன் குதித்தாப்போலே
தெள்ளிய வசைநரம்பு தெரிந்ததால் தீதுண்டென்னுங்
கள்ளமார் தாண்டை கீழே கத்தினால் காலந்தானே
8 நாடிகளும் மடைதிறந்த வெள்ளம்போல் ஒரே சீராகச் சென்று திரும்பினாலும் கெடுதல் இல்லை. நஞ்சைத் நின்ற மீன் குதித்துத் துள்ளுவதைப் போல வசை நரம்பில் நாடிகள் குதித்தால் கெடுதல் ஏற்படும். தொண்டைக்குக் கீழே நாடி பேசினாலும் மரணம் ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக