சர்வசந் ததனில் நின்று தானீட்டல் முடக்கல் பண்ணிப்
பெறுமன்ன பானந்தன்னைப் பலப்பட ரேபித்தங்கே
முறுதரு முதானவாயு வுயர்மன்னின் வன்னங்கண்டத்
திருதய மிருந்து தும்மல் யிருமலுங் கினாவு மன்றே,
- வியான வாயு பசுவின் பால் நிறமுள்ளது.
- உடலில் இருக்கும் எல்லா துவாரங்களிலும் (மூட்டுக்களிலும்) இருந்து கொண்டு உடலை நீட்டுதல், முடக்கிக் கொள்ளல் முதலான செய்கைகளையும் அன்ன ஆகாராதிகளை உட்செலுத்தவும் கூடியது.
- வியானன் தோலில் நின்று பரிசங்களை அறிவிக்கும்.
- உணர்வு நரம்புகள் (கட்டளை நரம்புகள்) மற்றும் உணர்வுகளை ஏற்றி செல்லுதல் ,செயல்படுத்துதல் நரம்புகளை இயங்க வைக்கிறது.
- இரு நரம்புகளுக்கு இடையே வியாபகம் பெற்ற நரம்பணுக்களை கட்டுப்படுத்துவதாகவும் நரம்புகளின் கேந்திரமான மூளையையும் செயல்படுத்தும் (இயங்கும்) வகையில் தொழில் புரிய வைப்பதும் வியானன் என்ற வாயு ஆகும் .
- உடலின் அனைத்துப் பகுதியிலும் சஞ்சரிக்கும் இந்த வாயுவானது, உண்ட உணவைத் திப்பி வேறாகவும், சாறு வேறாகவும் செய்து கொண்டிருக்கும்.
- இது தொழில் காற்று என்று அழைக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக