சோம்புடன் திமிரேயாகிற் சொல்மொழி தவறேயாகில்
தேம்பிடுஞ் சுவாசகாசஞ் சிரத்தொடு சந்துநோதல்
காம்புறு தோழாய் சீதங் காண்பசி யருசியோட
யாம்படி குணங்கள் வாதத் தையுறு சுரமதாமே.
சோம்பல், மதமதப்பு, உளருதல், மேல்மூச்சு, இருமல், மூட்டு, தலை இவ்விடங்களில் வலி, குளிர், அருசி (சுவையின்மை) , முதலான குறிகளுடன் சுரம் இருந்தால் அது வாதகபச் சுரமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக