அன்னமே கோழியோனான் மயிலென நடக்கும் வாதம்
பின்னை சேர்ராமை யட்டைப் பெருத்திடு பித்தமாகும்
சொன்னவாய் மொழியினாளே சுத்திய தவளை பாம்பு
முன்னமே அய்யமென்று மொழிந்தனர் முனிவோர்தாமே.
வாதநாடி கோழி, ஒணான், மயில் இவைகள் நடப்பதைப் போலவும், பித்தநாடி ஆமை, அட்டை இவைகளின் நடப்பைப் போலும், கபநாடி. தவளை, பாம்பு இவைகளின் கதியைப் போலவும் நடக்கும்.
இவைகளைப் பழக்கத்தினால் தெரிந்து கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக