மியல்பிலா நாடி ப்பற்றி யொன்றேகிடி லெழுமியவாதநாடி
துயர்தரு மொன்றிரண்டில் தோன்றிடில் பித்தநாடி
மயல்தரு மொன்றிரண்டில் மாண்டிடு மற்றநாடி
கயல்கள்வேற் கண்ணினாளே கல்லாதாய்
குறையுந்தானே.
தகைகூற்சிலேத்மங்கோபித்தால் தயங்குமனமுமுள்கலங்கு
மிகவேகுளிர்ந்து கொதிப்பெய்தும் வீக்கம் பலவாய் விதராகும்
முகமேகைகால் தான்வெளுத்து மூக்க நீர்ப்பாய்க் காசமுமாய்த்
துகனோய் தானே பாரிக்குந் தூங்கமுறக்கந்
துணுக்கமுமே.
கபம் பிரகோபமடைந்தால் மனவேதனை உண்டாகும். தேகம் திடீரெனக் குளிர்ச்சியடைவதனால் உஷ்ணம் அதிகரிக்கும். வீக்கமும் உண்டாகும். கை கால்கள் வெளுத்துவிடும். மூக்கிலிருந்து நீரொழுகும். சிறு இருமலும் உண்டாகும். தூக்கமும் அதிகரிக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக