இனியசீதச் சுரந்தானு மிரசதாது தன்னில் வந்தால்
முனிவதாக நிரந்தரமும் மூன்றேவிடாமல் தான்சொரிக்கும்
தனியேயன்றி யெத்திகந் தானோர்பொழுது சொரித்தேகும்
நனிவாம் பின்னாஞ் சபிகாத நன்றாய் விஷமச் சுரத்துள்ளே.
பத்திலும் நாலினிலும் பனிரெண்டு மூன்றிலுஞ்
சத்தமந் தன்னிலுந் தூன்விட்டு வந்திடி
லுத்தமம் புவியோர்கள் மீதுற ..
மத்துள சுரமென வறிந்து கொள்ளுவீர்.
சீத ஜ்வரம் ரஸ தாதுவையடைந்தால் மூன்று நாட்களுக்கு விடாமல் ஜ்வரமடிக்கும். அல்லது ஒரு நாளைக்கு ஒருமுறை வந்து விட்டுவிடும்.
4 நாட்களுக்கு ஒரு முறை வீதம் 10 நாளும், அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை 12 நாள் வரையிலுமோ அல்லது 7 நாட்களுக்கொரு முறையோ வரக்கூடிய சுரம் விஷம ஜ்வரமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக