காரம் புளிதுவர் மதுரமுடன் கசப்புச் சுவாது போசனந்தான்
சேருங் குளிர்த்திக் குளிர்நீர்தான் சிந்தாசோ கங் கிரிசியுடன்
போரார் விழியார் சங்கந்தான் பொருந்தித்தருண சுரந்தன்னில்
தீராதென்ன மாகாதோஷஞ் சேருங்காணும் திண்ணமிதே.
பூவுஞ்சீவுஞ் சந்தனமும் பொருந்தும் பாக்கும் வெத்திலையும்
மேவுங் கொடிசிவ பாடை மெத்தவெல்ல மெள்ளெண்ணெய்
தாவுங் காத்து வரும் வீடு தக்க மனையாள் தனைப்பார்க்கல்
நாவுண் ணுருசி மந்தமுட நறுநெய் சுரத்தோக்கவ பத்தியமே.
ஆகாதவ்வ பத்திய தோஷந்தான் ஆயிழை சங்கந்தன்தோஷ
மீகா விஷதோஷந்தான் விஷசீதத் தோஷந்தான்
வாகாயிரத்தசிங்குவந்தான் வருமே பித்த சீவுகந்தான்
தோகாய் கிட்டிணசங்கு வந்தான் தோஷமேழாங் கண்டீரே.
ஆரம்ப நிலையிலுள்ள ஜ்வரத்தில் காரம், புளிப்பு, தித்திப்பு, குளிர்ந்த தண்ணீர், கவலை, வருத்தம், பெண்களின் சேர்க்கை, துவர்ப்பு முதலியவைகளை நீக்க வேண்டும்.
புஷ்பங்களைத் தரித்தல், சந்தனம் பூசிக்கொள்ளல், பாக்கு வெத்திலை உபயோகித்தல், வெல்லம், நல்லெண்ணெய் இவைகளையும் அதிகமாக உபயோகம் செய்தல், மனைவியைப் பார்த்தல், நெய் உட்கொள்ளுதல் முதலானவைகள் சுரரோகிக்கு அபத்தியங்களாகும்.
ஆகவே அவை அபத்திய தோஷம், ஸ்திரீ சங்கமத் தோஷம், விஷதோஷம், விஷசீதத்தோஷம், இரத்த சீவுக தோஷம், பித்த சீவுக தோஷம், கிருட்டின சீவுக தோஷம் என ஏழு வகைப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக