உத்ததொரு காரியத்தை மெத்தெனவும் பேசலுள்ள
தெல்லாங் கருத்தாக வுரைப்பதல்லால்
மெத்தவரும் பொய்யை மெய்யாய் வியந் அரைத்தல்
கனவினால் மெய் வருத்தல் காணல்
சத்துமனஞ் சலித்திருத்தல் தன்புனலை
விரும்பாதே தழலை வேண்டல்
மத்துமுடல் தூலமாயி ருக்குமாகில்
வாதகுண மிதுவெனவே வகுக்கலாமே.
- ஒரு காரியத்தைச் செய்யுமுன் அதிகமாகப் பேசுதல்
- பொய்யை உண்மை போலச் சோடித்துப் பேசுதல்,
- அடிக்கடி சொப்பனம் உண்டாக அதனால் உடம்பு பலவீனமடைதல்,
- மனம் நிலையில்லாமை,
- உஷ்ணத்தில் பிரியம் உண்டாதல்,
- உடம்பு ஸ்தூவித்துப்போதல் முதலியவைகள் குறிகளாகும்.
ஆயுர்வேதக் கிரந்தங்களில் தேகம் மெலிந்திருக்கும்
என்று கூறப்பட்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக