உரத்தபித்தங் கோபித்தா லுடலேயுழத்திக் கொதிப் பெய்தும்
நிரைத்த மேனி மஞ்சணிக்கும் நெறித்தல்வேர்வு நீீர்ப்பாய்தல்
விரைந்த லோடுபித்தமிது மிகவே மூச்சாய் சக்தியுமாய்
பிரட்டும் வாயும் கைப்பினோடு புளிப்பு மாமென் றோதினரே
- பித்தம் பிரகோபமடைந்தால் உடம்பில் அனத்தலுண்டாகும்.
- தேகமும் மஞ்சள் நிறமடையும்.
- நரம்புவலி,
- வியர்வை,
- மூக்கிலிருந்து நீர்சொரிதல்,
- அதிகமான மேல்மூச்சு,
- விடாத வாந்தி,
- வயிற்றுப் பிரட்டல்,
- வாயில் புளிப்பு, அல்லது கசப்புச் சுவை முதலானவைகள் உண்டாகும்.
மெய்யே நிக்குந் தலைவலிக்கு மேனிலெனிருங் கண் தூங்கு
பொய்யே துயருங் கிருகி ரென்னும் போதாயன மஞ்சணித்துக்
கைகால் கடுத்து நீர்சிவந்து கண்ணு முகமுஞ் சன்னிகட்டி
மையார் மேனி யனல் மீறி வருமே பித்த குணமாமே.
- உடம்பில் நடுக்கம்,
- தலைவலி,
- உடல் வெளுமை நிறமடைதல்,
- தூக்கம்,
- தலைக்கிருகிருப்பு,
- கண்களில் மஞ்சள் நிறம்,
- கைகால் கடுப்பு,
- மூத்திரம் சிவந்து இறங்குதல்,
- கண் முகம் முதலியவை அதைத்துக் காணுதல்,
- காங்கை முதலான குறிகளும் காணும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக