காசமுஞ் சுவாசந்தா னுங் கதித்தெழு விக்கல்தானும்
மோசமில் மதிமயக்க முயங்குமெய் மிகவுமோய்தல்
மாசமாம் பிராணவாயு பகர்ந்திடு மபானவாயு
மாசற நடுக்கமுண்டாம் மச்சையிற் சரமதாமே.
உறக்கமே மிகவுண்டாகி உற்றதோர் ஞானங்கெட்டு
பிறக்குமோர் வார்த்தை யெல்லாம் பேய்மொழியாகக்கூறில்
சிறக்குமோர் சுக்கிலத்தைச் சேர்ந்திடுஞ் சுரமேயென்க
இறக்குமேயினைப்புத்தானுமில்லையென் றுரைக்கலாமே.
இருமல், பெருமூச்சு, விக்கல், அடிக்கடி மயக்கம், உடம்பு ஓச்சல் ( உடல் தளர்வாக இருத்தல் ), பிராணவாயு, அபானவாயு இவைகளை அதிகரிக்கச் செய்யும். நடுக்கம் ஏற்படும். இக்குறிகள் உண்டானால் மஜ்ஜையைப் பற்றிய ஜ்வரமாகும், சுக்கிலத்தைப் பற்றினால், அதிகமான தூக்கம் ஏற்பட்டு, அறிவு கெடும். இளைப்பு இருக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக