அய்யவுட லிறுகல்மனஞ் சிக்கென்னல்
தோகையர்பா லின் பமெல்லாங் கலந்து நீக்கி
பொய்யினொடு களவொழிதல் புலவர் போற்றல்
பொருந்தவே யிருந்து பெறல் புகழ்பாராட்டல்
மையமருந் தலைமயிரு நீண்டுவருந்
தாதுஉண் டிபெறல் மகிழ்ச்சி கூறல்
செய்யமலற் றிருவே சேர்ந் துவாழ்தல்
சேத்துமத்தின் குணமெனவே செப்புவோம .
- தேகம் புஷ்டியாதல்,
- ஸ்திரீ போகத்தீல் இச்சை,
- பொய், திருட்டு இவைகள் இல்லாமை,
- புலவர்களால் போற்றப்படும் அறிவு வளர்ச்சி,
- பொறுமை,
- புகழ்ச்சி பெறுதல்,
- தலைமயிர் நன்றாக வளர்தல்,
- எப்போதும் சந்தோஷமாயிருத்தல்,
- பண வசதிகளுடன் (லஷ்மி கடாக்ஷம்) இருத்தல் முதலான குறிகளால் சிலேஷ்ம தேகி என்று தெரிந்து கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக