சொல்லியவுதர லாடந் தென்றிமெய் எமந்துகொண்டு
வல்லிய பலமுண்டாக்கி வருபுஷ்டி பண்ணிவாயை
மெல்லிய நயன மூடல் மிகவுமே திறத்தல் பண்ணுங்
கல்லிய கிறுகிறாதி கறுப்புவர் ணமா மென்றே.
- கூர்மனின் நிறம் வெள்ளையாகும்.
- கூர்மன் என்ற வாயு வயிற்றில் வியாபித்து இவ்வுடலை சுமக்கச் செய்கிறது.
- உடம்பிற்கும் பலத்தைக் கொடுக்கிறது.
- கண்களைச் சிமிட்டச் செய்யும்.
- இது கண்களிலிருந்து திறக்கவும், மூடவும் செய்யும்.
- மகிழ்ச்சி(புளகம்), சிரிப்பு, முக லட்சணம் முதலியவற்றை உண்டாக்கும்.
- உள்விழி நீரை சரியான அழுத்தத்தில் வைத்திடவும் விழிகளின் அசைவிற்கு துணை புரிவதும் , மகிழ்ச்சி ,சோகம் மற்றும் விழிக்கு ஒவ்வாத நிலையினை ஏற்படுத்தும் காலங்களில் விழி நீர் என்ற கண்ணீரை வரவழைப்பதும் கூர்மன் என்ற வாயுவின் பணியாகும்.
- விழிநீரில் சோடியம் குளோரைடு என்ற உப்பு நீர், அல்குமீன் , என்ற முட்டைச் சத்து சிறிதளவு சளி போன்ற கிருமி நாசினிகளை வெளியேற்றி விழிகளை பாதுகாப்பதும் கூர்மனின் பணியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக