- நாகன் என்ற வாயுவின் நிறம் தங்க நிறமாகும்.
- ரோமக் கால்கள் தோறும் தங்கி அசைவையளிக்கும்.
- நாகன் கொட்டாவி, விக்கல், கக்கல், சோம்பல் முதலியவைகளையுண்டாக்கும்.
- விழிக்காற்று என்றழைக்கப்படும் நாகன் கழுத்தில் இருந்து வாந்தியை உண்டாக்கும்.
- கண்களினால் பார்க்கச் செய்யும்.
தும்மல் காற்று
பிராணனின் தலைமை வாயிலான மூக்கு மற்றும் கேந்திர பாகமான நுரையீரலின் அனைத்துப் பகுதிகளிலும் நோய்த் தொற்று ஏற்படுத்தும் கிருமிகள் தூசு, மாசுக்காற்று , ஆகியவைகள் உட்புகாமல் வெளியேற்றும் வகையில் மூளையின் அதிவேக கட்டளையின்படி சாதரண மூச்சின் அழுத்தம் மற்றும் வேகத்தை விட பல நூறு மடங்கு வேகமும் அழுத்தமும் கொண்ட தும்மல் என்ற நிகழ்வினை ஏற்படுத்தும் வாயு நாகன் ஆகும்.
இதனை தும்மற் காற்று எனக் கூறுவர்.
மேலும் கபாலத்தின் கீழ்ப்பகுதி ,கண்களின் நேர்பின் பகுதி , மூக்கின் வலது மற்றும் இடது உள் பள்ளப்பகுதி (CAVITY) ஆகியவற்றின் சவ்வுகளின் ஒவ்வாமை (அலர்ஜி) காரணமாக இறந்த செல்களை வெளியேற்றவும் , தும்மல் மூலம் வெளியேற்றுதலுக்கு நாகன் வாயு உதவி புரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக