கற்ப உற்பத்தி
மனிதனுக்கு நோய் எப்படி உருவாகிறது என்பதை அறிந்து கொள்ளும் முன் மனிதன் (குழந்தை) எப்படி உருவாகி(ன்)றான்(றது) என்பது பற்றியும் எவ்வாறு வளர்கிறது என்பது பற்றியும் அறிந்து கொண்டு பின்னர் நோய்கள் எப்பொழுது எக்காலத்தில் உருவாகின்றன என்பது பற்றி அறியலாம்.
விளக்கம்
சேர்க்கைக்குப் பின்னர் 5வது தினத்தன்று கருவாகி (நெகிழுந்தன்மையுள்ள பிண்டம்)றது.
15வது நாளில் முட்டையின் அளவையடைகிறது. நாட்கள் செல்லச் செல்ல இது நீண்ட வடிவத்தையடைந்து பிண்டத்திற்கு மார்பு உண்டாகிறது.
3வது மாதம் வயிறு ஏற்படும்.
4வது மாதம் பிண்டத்திற்குக் கால் கைகள் உண்டாகின்றன.
5வது மாதத்திலும் மேற்கூறிய உறுப்புக்கள் நன்றாக வளர்கின்றன.
6வது மாதத்தில் எலும்பு, தலை, மயிர், நரம்பு முதலியவைகளுடன்
7ம் மாதம் சீவனும் உண்டாகிறது.
8வது மாதம் அறிவு உணர்ச்சி முதலியவை ஏற்படுகிறது.
9வது மாதம் முதல் பிரசவ காலமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக