அய்யுமுப் பத்துமூன்று வருஷமொன் றதிகநாலு
செய்யதிங் களுமாய்ப் பித்தஞ் செய்தியப் படியே சீராய்
உய்யவே வாதம் வந்த படியுறு வயது நூறாய்
தையலே வாகடத்தின் சாத்திரப் படிகள் தானே.
மனிதரின் ஆயுள் காலம் சராசரி 100 என்று வைத்துக்கொண்டால், முதல் 33 வருஷம் 4 மாதம் கபகாலமாகும். பின்னர் 66 வருஷம் 8 மாதம் பித்தத்தின் காலமாகும். மற்றய 33 வருஷம் 4 மாதம் அதாவது 100 வயது வரை வாதம் அதிகரித்திருக்கும் காலமாகும். இவ்வாறு கபம், வாதம், பித்தம் மனிதனின் ஆயுளில் ஆட்கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக