குளுந்ததாலன்ன மோனான் குதித்தடி வைத்தபின்னு
மெழுந்தபாம் போடியங்கு மியல்பது கண்டதாகில்
உளுந்துநெய் முட்டைதன்னோடுத்தபால் உடனத்தண்ணீர்
குழுந்தமாம் பழமுமுன்னந் தின்னதிற் பின்னுண்டானே.
முதலில் அன்னம், ஓணான், இவைகளின் கதிகளில் நடந்து உடனே பாம்பைபோல் நாடி நெளிந்தால் உளுந்து, நெய், முட்டை, பால், தண்ணீர், மாம்பழம், சாதம் இவைகளில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிட்டிருப்பதாகச் சொல்லவும்.
பின்னு அட்டைதானே பின்பிரிக் கோடிமேலே
புண்ணின மன்னங்கோழி யுதறியே நடந்த பாம்பு
தன்னிய தவளைமெற்ற ரிப்பரப் புரளுமாகில்
நுன்னிய தானவெப்புத் தன்னின்மே லுணர்வுசொல்வாம்.
முதலில் அட்டையின் நடையைப் போல் ஊர்ந்து சென்று, பின்னர் அன்னம், கோழி, அல்லது பாம்பு இவைகளின் நடையைப் பின்பற்றினால் உடம்பில் சூடு அதிகரித்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக