கரிமுக னடியை வாழ்த்திக் கைதனில் நாடி பார்க்கில்
பெருவிர லங்குலத்தில் பிடித்துட னடுவே தொட்டா
லொருவிர லோடில் வாத முயர்நடு விரலிற் பித்தந்
திருவிரல் மூன்றி லோடில் சிலேத்தும நாடியாமே.
கணபதியை மனதில் தியானித்துப் பிணியாளனின் வலது கைப் பெருவிரலிற்கு மேல் 1 அங்குல அளவில் மோதிர விரல், பாம்பு விரல், ஆள்காட்டி விரல் இவைகளைக் கூட்டி வைத்து அவனது நாடியைப் பரீக்ஷிக்கவும். மோதிர விரலில் ஓடும் காடி கபமும், மத்திய விரலில் பித்தமும், ஆள்காட்டி விரலில் வாதமும் புலப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக