போதமழிந்து பொய்பேசும் போசனத்தில் மிகவாஞ்சை
யேதப்படவே சுரம்சோம்பு மியலா மயிற்குத் திடலாடல்
பேதமதாக விழிவெளுத்தல் ப்ரதாபத் துடனே தானகைத்தல்
தோதஞ் சந்தில் மிகக்கண்டால் சொல்லும் பூதச்சுரமென்றே.
நினைவு மறந்து பொய்களை உரைப்பான். ஆகாரத்தையதிகம் உட்கொள்வான். ஜ்வரம், சோம்பல், மயிர்க்கூர்சல், விழி வெளுத்தல், காரணமின்றிச் சிரித்தல், மூட்டு வலி முதலியவைகளும் இருந்தால் அது பூதஜ்வரமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக