வீழ்ந்திடு பித்ததோஷம் வெதுப்பிநா வரண்டு கொள்ளும்
தாழ்ந்துகண் சுழன்றுகொள்ளு தலையது கிறுகிறென்னுஞ்
குழ்ந்துநாச் சிவந்து புண்போல் தொண்டையும் நொந்துகாணும்
வாந்தியா யுடல்நடக்கு மஞ்சணித் திருக்குமன்றே
- பித்தநாடி அதிகரித்தால் நாவரட்சி அதிகமாகும்.
- கண்கள் சுழலும்.
- தலை கிறுகிறுப்பு ஏற்படும்.
- நாக்குச் சிவப்பாகி வெந்து தொண்டையில் விரணங்களேற்படும்.
- அடிக்கடி வாந்தி உண்டாகும்.
- தேகம் மஞ்சள் நிறத்தையடையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக