மூதுறு தாதுவொன்றில் மும்மூன்று நாளே நின்று
தாதுவைத் தானேபற்றித் தான்வரு மிகவேயென்க
கா துருவிழியின் மாதே! காசினி நிலனார் தங்கள்
மீதுரு சுரமேதென்க விளம்பினர் மேலோர்தாமே.
முகமது மிகமினுங்கி முள்ளென மயிற்குச்சிட்டால்
தகமையாஞ் சுரமிரசத் தா துவில் வந்ததென்க
துகமிரு மிரத்ததாது சுகமிரு நெறியிற் றோற்ற
நகமிரு கைகால்சந்து நடுக்கியே பிளந்த நோவாம்.
இரஸாதி தாதுக்களில் ஒவ்வொன்றிலும் சுரம் 3 நாட்கள் நிற்கும். முகத்தில் மினுமினுப்பு உண்டாகி, முட்களைப்போல் மயிர்க்கூச்சல் ஏற்பட்டாலும் சுரம் ரஸதாதுவைப் பற்றியது என்று தெரிந்துகொள்ளவும். நகக்கண்கள், கைகால், தொடையிடுக்கு முதலான இடங்களில் நடுக்கத்துடன் அதிக வலியுண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக