Top bar Ad

21/2/20

ஓம் நம சிவாய சித்தர் பாடல் மருந்தீஸ்வரர் ஆலயம்


ஓம் நம சிவாய

சித்தர் பாடல்!
மருந்தீஸ்வரர் கோவிலில் பாடப்படும் “ஓம் நம சிவாய” சித்தர் பாடல்!
திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் ஆலயத்தில் சித்தரால் சிவன் சன்னதி முன் அமர்ந்து தினமும் இரவு பாடப்பட்ட பாடலை இன்றும் சிவ பக்தர்கள் கடைபிடித்து பாடி வருகிறார்கள்! அனைவரின் குரலும் சற்றும் பிறழாது பக்தியுடன் ஓங்கி ஒலிப்பது கேட்கும் நமக்கும் அவர்களுடன் சேர்ந்து பாட வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது!

பாடல் வரிகள் :

ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்காள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துக் கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றை யான் கானவல்லரோ என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம் ஈனதேது ராம ராம ராம ராம வென்ற நாமமே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
அஞ்சேழுத்திலே பிறந்து அஞ்சேழுத்திலே வளர்ந்து அஞ்சேழுத்தை ஓதுகின்ற பஞ்ச பூத பாவிகாள் அஞ்சேழுத்திலோர் எழுத்து அறிந்து கூற வல்லீறேல் அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூலமானமுழு எடுத்த பாதம் நீள் முடி எண்திசைக்கும் அப்புறம் உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல அரியதாகி நின்ற நேர்மை யாவர்காண வல்லரோ
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
மண்கலங் கவிழ்ந்த போது வைத்து அடுக்குவார் வெண்கலங் கவிழ்ந்த போது வேணுமென்று பேணுவார் நண்கலங் கவிழ்ந்த போது நாறுமென்று போடுவார் எண்கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும் ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய

மருந்தீஸ்வரர் ஆலயம்

மருந்தீஸ்வரர் ஆலயம் திருவான்மியூர்

சென்னைப் பெருநகரின் தென் கடைசிப் பகுதி. திருவான்மியூர்ப் பேருந்து நிலையத்தில் அருகில் இக்கோயில் உள்ளது. சென்னை திருவான்மியூரில் அழகுற அமைந்துள்ள புராதனமான ஆலயம் மருந்தீஸ்வரர் திருத்தலம். புராணப் பெருமை கொண்ட பூமி இது.

சோழர் கால கல்வெட்டுகள் 16 உள்ளது. இதில் ஏழு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த மேதையாக விளங்கிய அப்பைய தீக்ஷதிர் சென்னைக்கு அருகில் உள்ள வேளச்சேரியில் வாழ்ந்து வந்தபோது நாடொறும் வான்மியூர் வந்து பெருமானை வழிபட்டு வந்தார். ஒருமுறை இறைவனருளால் இப்பகுதி முழுவதும் நீர்ப்பிரளயமாக மாற அப்பைய் பிரார்த்தித்தார். அவர் பிரார்த்தனையை ஏற்று அவருக்காக இறைவன் மேற்கு நோக்கித் திரும்பிக் காட்சியளித்தார். இச்சிறப்பினால் சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியுள்ளது. அகத்தியருக்கு, (வைத்திய) மூலிகைகளைப் பற்றி இறைவன் உபதேசித்தருளிய சிறப்புத் தலம். இதனால் இறைவனுக்கு ஓளஷதீஸ்வரர் - மருந்தீசர் என்று பெயர். பசு (காமதேனு) பால் சொரிந்து வழிபட்டமை தொடர்பாகச் சிவலிங்கத் திருமேனியில் சிரசிலும், மார்பிலும் பசுவின்குளம்பு வடு தெரிகின்றது. இதனால் இறைவனுக்கு பால் வண்ணநாதர் என்று பெயர். வேதங்கள் வழிபட்ட தலம். தேவர்களும், சூரியனும் பிருங்கி முதலியோரும் வழிபட்டு இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர்.
  • இறைவன் - ஒளஷதீஸ்வரர், மருந்தீசர், பால்வண்ணநாதர், வேதபுரீஸ்வரர்.
  • இறைவி - திரிபுரசுந்தரி, சொக்கநாயகி, சுந்தரநாயகி.
  • தீர்த்தம் - பஞ்ச தீர்த்தங்கள்

  • கோயிலுக்கு எதிரில் இடப்பால் ஒரு தீர்த்தக்குளம் உள்ளது. அண்மையில் வலப்பால் உள்ள குளம் பயனற்றுள்ளது.
  • தலமரம் - வன்னி.
சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் பெற்றது.
கரையுலாங் கடலிற் பொலிசங்கம் வெள்ளிப்பிவன் திரையுலாங்கழி மீனுகளுந் திருவான்மியூர் உரையுலாம் பொருளாயுலகாளுடையீர் சொலீர் வரையுலா மடமாது உடனாகிய மாண்பதே".
(சம்பந்தர்)
விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர் அண்ட நாயகன் தன்னடி சூழ்மின்கள் பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும் வண்டு சேர்பொழில் வான்மியூர் ஈசனே."
(அப்பர்)
கார்த்திரண்டு வாவுகின்ற சோலைவளர் வான்மியூர்த் தலத்தின் மேவுகின்ற ஞான விதரணமே.'
(அருட்பா)

கிழக்குக் கோபுரமே பிரதான வாயில். கிழக்கு, மேற்குக் கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டுப் பொலிவுடன் விளங்குகின்றன. அழகிய சுற்றுமதில். வான்மீகி முனிவருக்கு இறைவன் நடனக் காட்சியருளிய தலம். காமதேனு பால் சொரிந்து வழிபட்ட சிறப்புடையது. கோயிலில் வான்மீகி முனிவர் திருமேனி உள்ளது. மேலைக்கோபுர வாயிலுள்ள சாலை வழியே சிறிது தூரம் சென்றால் வான்மீகிநாதர் கோயில் உள்ளது.

கிழக்குக் கோபுரம் ராஜகோபுரம். ஐந்து நிலைகளையுடையது. வெளியில் பதினாறு கால் மண்டபம் உள்ளது. இக்கோபுரம் புதுப்பிக்கப்பட்டு 12-2-1984-ல் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சம்பந்தரின் சிவிகையை அப்பா தாங்குவது, ஊர்த்துவ தாண்டவம், தில்லைக்காளி, கஜசம்ஹாரமூர்த்தி முதலியவை குறிப்பிடத் தக்கவை.
கோபுரவாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. முகப்பில் கமல விநாயகர் தரிசனம். பக்கத்தில் அழகிய விஜயகணபதி ஆலயம் உள்ளது. இக்கோயிலின் மேற்புற வரிசையில் சோடச கணபதி உருவங்கள் காட்சியளிக்கின்றன. இக்கோயில் கும்பாபிஷேகம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால் 17-3-1985-ல் நிகழ்த்தப்பெற்றது.

தற்போது இந்த ஆண்டு 05-02-2020 ஆம் நாள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வடக்கில் அம்பாள் சந்நிதி உள்ளது - தெற்கு நோக்கியது. இக்கோயிலில்

  1. பிரதோஷ உற்சவம்
  2. முருகனுக்கு விழா
  3. துவஜாரோகண விழா
  4. வன்மீக நடன உற்சவம்
ஆகியவைகளை நடத்துவதற்காக எழுதி வைத்துள்ள கல்வெட்டுக்கள் உள்ளன.

அம்பாள் நின்ற திருக்கோலம். உள்ளே வலம் வரலாம். பள்ளியறை உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களில்லை. சுக்கிரவார அம்மன் திருமேனி தனியே உள்ளது. கருவறையில் வெளிப் பகுதியில் நிரம்பக் கல்வெட்டுக்கள் உள்ளன. பிராகாரக் கல் தூண்களில் நர்த்தன விநாயகர், ரிஷபாரூடர் சிற்பங்கள் உள்ளன.

வெளிப் பிராகாரத்தில் வலமாக வரும்போது, நான்குகால் மண்டபம் உள்ளது. அடுத்து, சற்து நால்வர், கஜலட்சுமி, முத்துக்குமாரசாமி சந்நிதிகள் உள்ளன. முத்துக்குமாரசுவாமி சந்நிதியில் அருணகிரிநாதரும் உள்ளார். மூலவர் - மேற்கு நோக்கிய சந்நிதி, கோமுகம் மாறியுள்ளது. சுயம்பு, பால்போன்று வெண்மையாக உள்ளது. சுவாமிக்கு மேலே விதானம் உள்ளது. முகப்பில் துவார பாலகர்கள் உள்ளனர் - சுவாமிக்கு பால் அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது. பஞ்சாமிர்தம் முதலான பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன. உள் பிராகாரத்தில் ஏராளமன சிவலிங்கங்கள், வைக்கப்பட்டுள்ளன. காலபைரவர் பஞ்சலிங்கங்கள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக, தட்சிணாமூர்த்தி, விநாயகர், மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. விநாயகர் சந்நிதி மூன்று மூலத் திருமேனிகளுடன் காட்சி தருகிறது. வலப்பால் தியாகராஜா சபா மண்டபம் உள்ளது. மண்டபம் பெரியது. தியாகராஜா சந்நிதி கிழக்கு நோக்கியது. அழகான திருமேனி. தரிசித்துத் தெற்குப்பக்க வாயில் வழியாக உள் சென்றால் நேரே அம்பலவாணர் தரிசனம், மாணிக்கவாசகர் சிவகாமி உருவத் திருமேனிகள் உள்ளன. அம்பலவாணர் உருவம் அழகானது. வன்மீகநாதர் கோயிலுக்குரிய சிறிய நடராஜ உருவம் பாதுகாப்புக்காக இச்சந்நிதியில் வைக்கப் பட்டுள்ளது. வலமாக வரும்போது அறுபத்து மூவர் சந்நிதிகள், அடுத்து விநாயகர் சந்நிதிகள் உள்ளன. இச்சந்நிதியில் இருபுறங்களிலும் நாகலிங்கப் பிரதிஷ்டையுள்ளது. 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும், இக்கோயிலுள் வில்வ மரங்கள் அதிகம் உள்ளன. பங்குனி உத்திரத்தில் பெருவிழா நடைபெறுகிறது. சூரியன் இத்தலத்தில் பெருமானை அர்த்தசாமத்தில் வழிபட்டதாக வரலாறு உள்ளதால் பெருவிழாவில் கொடியேற்றம் அர்த்தசாமத்தில்தான் நடைபெறுகிறது. (கிருத்திகை, பௌர்ணமி முதலிய விசேஷங்களும் இராக்கொண்டு வருவதே இக்கோயிலில் கடைப்பிடிக்கப்படுகின்றது. பங்குனி பௌர்ணமியில்தான் வான்மீகி முனிவர் வழிபட்டு முத்தி பெற்றதாகச் சொல்லப்படுகிறது) . விழாக்காலங்களில் சுவாமி புறப்பாடு காலை மாலைகளில் சந்திரசேகரும் பஞ்சமூர்த்திகளும் மட்டுமே, 'தியாகராஜா' புறப்பாடு பகலில் கிடையாது. இரவில் மட்டுமே நிகழ்கிறது. ஆடி தை மாதங்களில் திருவிளக்கு வழிபாடு சிறப்பாக நடைபெறுகின்றது. பங்குனிப் பெருவிழாவில் மூன்றாம், நான்காம் நாள் உற்சவம் - பவனி உற்சவம் சிறப்பாகச் சொல்ல சொல்லப்படுகிறது. ஓன்பதாம் நாள் விழாவில் வன்னி மரச் சேவை விசேஷம். பத்தாம் நாளில்தான் வான்மீகி முனிவருக்குத் தியாகராஜா, திருக்கல்யாண நடனத்தைக் காட்டியருளம் ஐதீகம் விசேஷமாக நடைபெறுகிறது. பதினோராம் நாளில் நடைபெறும் வெள்ளியங்கிரி விமான சேவை காணத்தக்கது.

சென்னையில் திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயில் நிறைய பேருக்குத் தெரியும். ஆனால் அங்கே மருந்தீஸ்வரர் கோயிலுக்கு அருகில், சாலைக்கு நடுவில் சிறியதாகக் கோயில் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

பலர் இதை பிள்ளையார் கோயில் என்றே எண்ணியிருப்பார்கள். வான்மீகி முனிவருக்குத் தனிக்கோவில் உள்ளது. வால்மீகி

ஆதி காலத்தில், வன்னி மரமும் வில்வ மரமும் சூழ்ந்து, வனமாக இருந்த இந்த இடத்தில் பிறகு கோயில் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். அப்படி வனமாக இருந்த போது, இங்கே வந்த வால்மீகி முனிவர், சிவபெருமானை நினைத்து இங்கு பல காலம் தவமிருந்தார். அந்தத் தவத்தில் மகிழ்ந்த ஈசன், பார்வதிதேவியுடன் ரிஷபாரூடராகக் காட்சி தந்து அருளினார்.

ஆகவே, மருந்தீஸ்வரர் கோயிலுக்கு எதிரில், சாலைக்கு நடுவே, அப்போது அவர் தவம் இருந்த இடத்தில், சந்நிதி கொண்டிருக்கிறார் வால்மீகி முனிவர். தினமும் காலையும் மாலையும் இவருக்கு பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுகின்றன. வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அவருக்கு வெண்மை நிற மலர்கள் அணிவித்து பிரார்த்தித்தால் கல்வி கேள்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்!

கோயில் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது. திருவான்மியூரில்தான் பாம்பன் சுவாமிகளின் சமாதி உள்ளது.

ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்காள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
ஓம் நமசிவாய

12/7/19

சித்த மருந்தியலின் பிரிவுகள்

சித்தமருந்தியலின் பிரிவுகள்
பொருளடக்கம்
  1. குண பாடம்
  2. மருந்தியக்கம்
  3. மருந்தடையும் மாற்றம்
  4. சாரக மருந்தியல்
  5. மருந்துச் சிகிச்சை
  6. நஞ்சியல்
  7. மருந்களவையியல்
  8. அவுடக பாகவியல் மருந்காக்கவியல்
  9. காய கல்பம்
  10. அதிகாரபூர்வ மருந்துக் குறிப்பேடு

குண பாடம்


இது மருந்து மூலப் பொருட்களின் இருக்கை மற்றும் விவரணம் தயாரிப்பு என்பவற்றுடன் தொடர்புடையது. ஆரம்பத்தில் குணபாடமே மருந்தியலின் மூலாதரமாக விளங்கியது. இதிலிருந்தே நவீன மருந்தியல் 1950 களில் விருத்தியடைந்தது எனலாம். சித்த மருந்தியல் அதன் தோற்ற நிலையில் தான் தற்போதும் உள்ளது என்று கருத வேண்டியுள்ளது.

மருந்தியக்கம்


அதாவது மருந்து உடலில் என்ன செய்கிறது என்பது பற்றிய விபரங்களை அறிவதாகும். அதாவது, மருந்தானது உடலிலுள்ள வாத, பித்த, கபம் மற்றும் சப்த தாதுக்கள் முதலியவற்றில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுடன் தொடர்பானது. இன்னொரு விதத்தில் சொல்வதானால் உயிரி, ரசாயன, உடற்றொழிலியல் விளைவுகள், மருந்தின் செய்கை என்பவற்றுடன் தொடர்புடையதாகக் கருதலாம்.

மருந்தடையும் மாற்றம்


அதாவது உடலானது மருந்துக்கு என்ன விளைவுகளைக் காட்டும் என்பதுடன் தொடர்பானது. அதாவது, உடலிலுள்ள வாத, பித்த, கபம் முதலியன மருந்தில் என்ன மாற்றத்தை அல்லது விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுடன் தொடர்புடையது. இன்னொரு விதத்தில் சொல்வதானால் மருந்தானது சுவை, குணம், வீரியம், விபாகம், பிரபாவம் என்பவற்றுக்கு அமைய உடலில் எவ்வித மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்பதுடன் தொடர்புடையது.

சாரக மருந்தியல்


இது நோயாளிகளிலும், சாதாரண மக்களிலும் மருந்து என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றிய அறிவியல் கற்கை முறையாகும்.

மருந்துச் சிகிச்சை


இது மருந்தானது நோய் நீக்குவதிலும், குறி குணங்களை நீக்குவதிலும் எவ்விதம் பயன்படுகிறது என்பதுடன் தொடர்பானது.

நஞ்சியல்


இது மருந்துகளினால் ஏற்படும் நச்சு விளைவுகள், நச்சு விளைவுகளைக் கண்டறிதல், அவற்றிற்கான சிகிச்சை என்பவற்றுடன் சம்பந்தப்பட்டது.

குறிப்பு
சிலர் சித்த மருந்துகளில் பக்க விளைவுகளோ, நச்சு விளைவுகளோ இல்லை என்று கூறுவர். இது முற்றிலும் தவறான கருத்தாகும். சித்த மருந்துகள் சரி வரச் சுத்தம் செய்யப்படாமலோ அல்லது அளவிற்கு அதிகமாகவோ அல்லது நீண்ட காலத்திற்கோ பயன்படுத்தப்படும் போது நச்சு விளைவுகளை ஏற்படுத்தவே செய்யும். இது பற்றி சித்தமருத்துவ நூல்களில் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

மருந்களவையியல்


இது மருந்துகளின் பிரமாணம் அல்லது அளவு (dosage)டன் சம்பந்தப்பட்ட பிரிவாகும்.

அவுடக பாகவியல் மருந்காக்கவியல்


இது மருந்துகளின் தயாரிப்பு முறையுடன் சம்பந்தப்பட்ட துறையாகும்.

காய கல்பம்


நோயின்றி நீடித்த ஆயுளுடன் வாழ்வதற்குரிய மருந்துகள் பற்றிய பிரிவாகும்.

அதிகாரபூர்வ மருந்துக் குறிப்பேடு


இது பொதுவாக யாவரும் பயன்படுத்துவதற்கென்று அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளின் தயாரிப்பு, சுத்தத்தன்மை, செயல் முதலியனவற்றைக் கொண்ட குறிப்பேடு ஆகும்.

9/4/19

நோயின்றி வாழ !!

இந்த உலகில் வாழும் உயிரினங்களுக்கு உணவே பிரதானம். உணவு இல்லாமல் எந்த உயிரினங்களாலும் வாழ இயலாது. எல்லா உயிரினங்களும் உணவைப் பெற்று உயிரை வளர்க்கின்றன. ஆனால் மனிதன் மட்டுமே செல்வத்தை தேடி செல்கிறான். பிறகு நோயுற்று செல்வத்தை இழக்கிறான். சில மனிதர்கள் உடலை வலுப்படுத்த எண்ணுகின்றனர். அவ்வாறு வலுப்படுத்த எண்ணியும் செல்வத்தை இழக்கின்றனர். உணவை சரியான நேரத்தில் சரியான முறையில் எடுத்துக் கொண்டாலே உடலுக்கு நோய் என்பது ஏற்படாது. அதனால் நோய் என்பது அனைத்து மக்களுக்கும் பிரச்சினையை தரக்கூடியதாக உள்ளது.

அப்படியானால் எவ்வாறு நோயில்லாமல் வாழ்வது என்று கேள்வி எழுகிறது. அக்கேள்விக்கு பல தீர்வுகள் சித்தர்கள் வழங்கியுள்ளனர். அதில் தேரையர் கூறியுள்ள நோயணுகா விதிகள் பற்றி இப்பதிவில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறு நோயில்லாமல் வாழ்வது என்பது பற்றி இப்பதிவில் கூறப்பட்டுள்ளது. மேலும் தேரையர் சித்தர் அருளியுள்ள நோயணுகா விதிகள் பற்றிய கருத்துக்கள் பதார்த்த குண சிந்தாமணி ய சில கூறப்பட்டு உள்ளது. இவ்வாறு இவ்விதிகளைப் பின்பற்றினால் எமனே அருகில் வர அஞ்சுவான். எமனே அஞ்சுவான் என்றால் விதிகள் எவ்வாறு இருக்கும் என்று எண்ணுகிறீர்களா …..




நம் தலைமுறைக்கு முன்னர் பயன்படுத்திய சாதாரண வாழ்க்கை முறை தான். அதனால் தான் என்னவோ நம் தாத்தா , கொள்ளு தாத்தா , பரம்பரை எல்லாம் நீண்ட நாள் வாழ்ந்தார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

19/2/19

சித்த மருந்‌தியல்‌

சித்த மருந்துகளைப்‌ பற்றி அதாவது அவற்றின்‌ வரலாறு, குணம், செய்கை, அகத்துறிஞ்சல், விநியோகம், அனுசேபம், வெளியேற்றப்படல் (கழிவகற்றல்) என்பது பற்றிய முழுமையான அறிவு சித்த மருந்தியல் ஆகும்.

மறுப்பதுடல் நோய் மருந்தெனலாகும் மறுப்பதுள நோய் மருந்தெனச்சாலும் மறுப்பதினி நோய் வராதிருக்க மறுப்பது சாவை மருந்தெனலாமே
திருமூலர்‌ எண்ணாயிரம்‌.

அதாவது உடல்‌, உள நோய்களை நீக்குவதும்‌, நோய் வராது இருக்க உதவுவதும்‌, உரிய வயதுக்கு முன்னர்‌ மரணத்தைத்‌ தவிர்ப்பதும்‌ (காய கல்பம்‌) ஆன பொருள்‌ எதுவோ அதுவே மருந்து எனப்படும்‌.

தற்கால மருந்தியலின் படி மருந்து என்பது நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவுவதும்‌, அல்லது நோய் வராமல்‌ தடுக்க உதவுவதும்‌. அல்லது நோயைக்‌ கண்டறிய உதவுவதுமான பொருள்‌ எதுவோ அதுவே மருந்து என்று கூறப்பட்டுள்ளது.

15/2/19

கடுவெளி சித்தர்‌

முன்னுரை


திருத்துறைப்பூண்டி வட்டத்துள் இருக்கும் கடுவெளியில் தோன்றிய இவரோ,“சித்தர் என்பவர் நம் சிந்தனையைத் தெளிவாக்கி இறைவனது அருளாற்றலைத் தந்து உண்மையான ஆத்மானந்தத்தைத் தருபவர்” என்று சொன்னார். வெட்டவெளியில் அமர்ந்து நமசிவாய மந்திரத்தை ஜெபித்தபோது பரமானந்தத்தைக் காட்டியமையால் இத்தலத்தின் சிவபெருமானைப் பரமானந்தர் என்று அழைத்தனர். சித்த புருஷர்கள் யாவரும் சிவனோடு உறைகின்ற தேவியை சக்தி கொடுப்பதற்காக வணங்கி வந்தனர். ஆனால் கடுவெளிச் சித்தர் அம்பிகையை வாலைக்குமரியாகவே வணங்கினார். இதனால் பரமானந்த ஈஸ்வரன் உறையும் தேவிக்கும் வாலாம்பிகை என்ற திருநாமம் ஏற்பட்டது.

கடுவெளி சித்தர்‌ பற்றிய வாழ்க்கைக்‌ குறிப்புகள்‌ ஏதும்‌ கிடைக்கவில்லை. எனினும்கூட இந்தப்‌ பெயரின்‌ சிறப்பால்‌ இவர்‌ தனித்தன்மை பெறுகிறார்‌. மேலும் வலைப்பதிவுகளில் இருந்து தேடி பல தகவல்கள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்பட்டு உள்ளது.

வெட்டவெளி


தமிழ்நாட்டு சித்தர்களின்‌ இறைநெறி என்பது, சூன்யம்‌ என்னும்‌ வெட்டவெளியையே சுற்றிச்‌ சுற்றி வருவதை சித்தர்‌ பாடல்கள்‌ மூலம்‌ அறியலாம்‌. சூன்யம்‌, வெட்டவெளி, சும்மா என்ற சொற்கள்‌ சித்தர்களின்‌ பல பாடல்களிலும்‌ மீண்டும்‌ மீண்டும்‌ இடம்‌ பெறுகிறது.

இறைத்‌ தன்மையானது, ஒன்றுமில்லாமல்‌ இருக்கும்‌ ஒன்று ! என்பது இந்திய ஆன்மிக மரபில்‌, பல மெய்யுணவாளர்களால்‌ வலியுறுத்தப்படுகிறது. இந்த ஒன்றுமற்ற ஒன்று ! என்ற மெய்யியல்‌ கருத்துருவையே தமிழ்‌ சித்தர்கள்‌ சூன்யம்‌, வெட்டவெளி, சும்மா என்ற வார்த்தைகள்‌ முலம்‌ வெளிப்படுத்துகின்றனர்‌.

காலம்‌ உறைந்த தோற்றம்‌ தரும்‌ வெட்டவெளியில்‌ பெயர்கள்‌, பொருட்கள்‌, உயிர்கள்‌ எல்லாமே அர்த்தமற்றவையாக ஆகி விடுகின்றன. விரிந்துப்‌ பரந்த இந்த வெட்டவெளியில்‌ தவழும்‌ பேரின்பத்தையே பரவெளி என்று அழைப்பார்கள்‌.
எனது, உனது, நமது என்ற இருப்பு நிலைகளைக்‌ கடந்த நிலையே பாழ்‌ என்று அழைக்கப்படும்‌ வெட்டவெளி என்று, பல சித்தர்‌ பாடல்கள்‌ குறிப்பிடுகின்றன. சித்தர்களின்‌ கோட்பாட்டுப்‌ பெயரான வெளி என்பதையே பெயராகக்‌ கொண்டு அழைக்கப்பட்டவர்‌ கடுவெளி சித்தர்‌.

போதை எதிர்ப்புப்‌ பாடல்


மேலும்‌, குடிக்கும்‌, போதைக்கும்‌ எதிராக இவர்‌ பாடல்‌ புனைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கஞ்சாப்‌ புகைபிடியாதே! - வெறி காட்டி மயங்கிய கட்குடியாதே! அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே
என்ற இவரது போதை எதிர்ப்புப்‌ பாடல் பாடியுள்ளார்.

நந்தவனத்திலோர்‌ ஆண்டி


போதை எதிர்ப்புப் பாடலை விட பாமரர்களிடம்‌ பிரபலமானது, இவரது நந்தவனத்தில்‌ ஓர்‌ ஆண்டி பாடல் தான்‌. நாட்டுப்புறத்தில் இது பாடப்படுவதால் இதனை நாட்டுப்புற பாடல்கள் என தமிழ் மக்கள் நினைக்கின்றனர். நந்தவனத்தில் ஓர் ஆண்டி பாடலைத் தமிழகத்தில் பெரும்பாலானோருக்குத் தெரியும். ஆனால் இதைப் பாடியவர் பெயர் அதிகம் பெயருக்குத் தெரியாது. அவர் தான் கடுவெளிச் சித்தர். உலக வாழ்வின் நிலையாமையை அருமையான பாடலாகச் சொன்னவர் அவர். மனிதன் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய தர்மங்களைச் சிலேடை நயத்தில் பாடல்களாகப் பாடி ஒரு புது வழியைக் காட்டியவர்.

நந்தவனத்திலோர்‌ ஆண்டி - அவன்‌ நாலாறு மாதமாய்க்‌ குயவனை வேண்டி கொண்டு வந்தான்‌ ஒரு தோண்டி - மெத்தக்‌ கூத்தாடிக்‌ கூத்தாடிப்‌ போட்டுடைத்தாண்டி! நல்ல வழிதனை நாடு- எந்த நாளும் பரமனை நத்தியே தேடு வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு
கடுவெளி சித்தர்‌

விளக்கம் :


இப்பாடலைப் படித்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போலத் தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார்.
மனித உயிர்(சீவன்) ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப்பட்டு இருக்கிறது. இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்படுகிறது. சீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று நாலாறு (பத்து [4+6=10]) மாதமாய் வேண்டிக் கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான். சீவன் இறைவனிடம் வேண்டிப் பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன் (இறைவன்) செய்து கொடுத்தான். தோண்டி (உடல்) கிடைத்தவுடன் ஆண்டி கண், மண் தெரியாமல் கூத்தாடினான். தோண்டியை போட்டு உடைத்தான். ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. தோண்டியை (உடல்) தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான். ஆண்டி (மனிதன்) மேலும் நல்ல வழியை தேட வேண்டும் என்றும், எந்நாளும் கடவுளின் அருளை தேட வேண்டும் என்றும், வல்லவர் (பக்தர்) கூட்டத்தோடு சேர்ந்து அவர்களை நெஞ்சினில் வைத்து வாழ்த்திக் கொண்டாட வேண்டும் என்கிறார்.


கருத்து

சீவாத்மா இறைவனிடம் வேண்டித்தான் இந்த உடலைப் பெற்று இருக்கிறது. அப்படிப் பெற்ற உடலை தவறான வழிகளில் பயன்படுத்தி விடுகிறார்களே என்ற கவலையினை நகைச்சுவைப் பாடலைப் போல வெளிப்படுத்துகிறார் கடுவெளிச் சித்தர்.


பயனுள்ள தத்துவங்கள்


கலியுகத்தில் வாழ நேரும் எந்த ஜீவனும் துன்புறக் கூடாது என்பதற்காக அழகான தமிழில் ஆத்திசூடியைப் போல பயனுள்ள தத்துவங்களைக் கூறி உள்ளார். இவ்வரிகளைப் படித்தால் நமது மனமும் வாக்கும் உடலும் சில மாற்றங்களை அடையும்.

தூடணமாகச் சொல்லாதே! ஏடனை மூன்றும் பொல்லாதே! நல்லவர் தம்மைத் தள்ளாதே! பொல்லாங்கு சொல்லாதே!
என்று அறிவுரைகளைச் சொல்லிக் கொண்டே போகிறார்.

பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும் தோன்றன மறையும் மறைந்தன் தோன்றும் பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும் உணர்ந்தன் மறக்கும், மறந்தன் உணரும் புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்.

மனதை ஆரோக்கியமாக வைத்திருந்தால் நூறாண்டுகள் முழுமையாக வாழலாம். என்கிறார்கள் சித்தர்கள். மனதிற் கெட்ட எண்ணத்தினால் உயிர் அணுக்கள் பாதிக்கப்படுகிறது என்கிறார் கடுவெளி சித்தர். அந்த மனதை நல்ல சிந்தனையோடு வைத்திருந்தால் முழு ஆயுளோடு வாழ வழி சொல்கிறார் கடுவெளியார்.

  • யாரிடமும் எதையும் யாசித்துப் பெறாதீர்கள்.
  • மனதில் எந்த இச்சைகளுக்கும் அடிமையாகாதீர்கள்.
  • பெண்களின் மீது ஆசை வைத்து மோகத்தை வளர்க்காதீர்கள்.
  • உயிரினங்களுக்கு துன்பம் செய்யாதீர்கள்.
  • உங்களுக்கு கெடுதல் செய்பவர்களையும் நீங்கள் பாவச் சொல்லில் திட்டாதீர்கள்.
  • எந்த கஷ்டம் வந்தாலும் பொய் பேசாதீர்கள்.
  • மனைவியை பழிக்காதீரகள்.
  • தான் என்கிற அகம்பாவத்துடன் நடக்காதீர்கள்.
  • அடுத்தவரை கெடுக்க நினைக்காதீர்கள்.
  • நூறு பேரின் நடுவே தன்னைப் போற்ற வேண்டும் என புகழ் விரும்பி அலையாதீர்கள்.
இந்த செயல்களைத் தவிர்த்தாலே மனிதன் சந்தோஷமாகவும், ஆரோக்யமாகவும் வாழலாம் என்கிறார்.

கல் பிளந்த அதிசயம்


சிவபெருமானை மனதில் எண்ணிய படியே பொது மக்களை நல்வழிப்படுத்த போதனைகளில் ஈடுபட்டிருந்த கடுவெளியார், வாரம் ஒரு முறை வேதாரண்யம் தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று சன்னதி முன் அமர்ந்து சிவன் மீது மனமுருகிப் பாடுவார். அவரது பாடல் வரிகளால் மகிழ்ச்சி அடைந்த ஈஸ்வரன், தாம் கடுவெளிச் சித்தர் மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்ட பரமானந்தர் ஆலயக் கருவறையில் உள்ள லிங்க ஆவுடையாரை இரண்டாகப் பிளந்து ஓர் அடையாளத்தைக் காட்டினார். அவை இன்றும் கடுவெளி ஆலய வாசலில் உள்ளதென நம்பிக்கை.

ஜீவ சமாதி


கடுவெளிச் சித்தருடைய ஜீவ சமாதி பரமானந்தர் ஆலயத்திற்குள் அமைந்திருப்பதால் அவரது ஜீவசக்தியும், சிவன் சக்தியும் சேர்ந்திருக்க, இந்தச் சித்தர் பூமியை நாடி வருபவர்கள் வாழ்க்கையில் குறைகள் அனைத்தும் தீர்கின்றன. கடுவெளியில் அவதரித்து அருகில் உள்ள ஆலத்தூரில் அடக்கமானதால் இரண்டு ஊர்களுக்குமே பொதுவான புனைபெயராக சித்தராலத்தூர் என்ற பெயரும் வழக்கத்தில் உள்ளது. திருத்துறைப்பூண்டியிலிருந்து பட்டுக்கோட்டை போகும் வழியில் எடையூர் சங்கந்தி கடைத்தெரு இறங்கி மன்னார்குடி சாலையில் மூன்று கிலோமீட்டர் சென்றால் கடுவெளியை அடையலாம்.

கடுவெளியாரைத் தரிசித்தல்


ஸ்ரீபரமானந்தர் வாலாம்பிகை ஆலயத்துள் அமர்ந்திருக்கும் சித்தரை வழிபட்டால் பித்ரு தோஷங்கள் அகலும். மோட்ச தீபத்தை இந்த ஆலயத்தைச் சுற்றி ஏற்ற பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபடுவதால் வாழ்வில் சோதனைகளும் துயரங்களும் நீங்கப் பெறலாம். கடுவெளிச் சித்தரின் ஜீவ சமாதி இங்கே அமைந்துள்ளதால் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மனதில் எண்ணிய கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. பவுர்ணமி தோறும் இத்தலத்தில் ஆண்களும் பெண்களும் விசேசமான சித்தர் போற்றி யாகம் மற்றும் அபிசேகம் ஆகியவற்றைச் செய்து அன்னப்படையலும் இட்டு தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதான சேவையும் செய்கின்றனர்.

மூலம்


12/2/19

வியாதிகளின் சாத்யாசாத்யம்

குணங்குறி மிகுந்து தோன்றிக்‌ குற்றமேகுறைந்து காணி லிணங்குமந்‌ திரமருந்து யிவைகளால்‌ மீள்வதுண்மை குணங்கொளாக்‌ குற்றமேறிக்‌ குறிகுணங்‌ குறைந்து நின்றால்‌ பிணங்கிடா வகன்று சீவன்‌ பிரித்தலால்‌ பேசலாமே.

நோயின்‌ குறிகள்‌ மிகுந்து தோஷங்கள்‌ பிரகோபிக்காமல்‌ இருந்தால்‌ மந்திரம்‌, மருந்து முதலியவைகளினால்‌ நோய்கள்‌ தீரும்‌.
திரிதோஷங்கள்‌ பிரகோபித்து நோயின்‌ குறிகள்‌ குறைவாக இருந்தால்‌ நோயாளி இறப்பான்‌.

வியாதிகளைத்‌ தீர்மானிக்கும்‌ முறை

நாடியால் முன்னோர்‌ சொல்லும்‌ நன்குறிக்குணங்களாலும்‌ நீடிய விழியினாலும்‌ நிலைபெறு முகத்தினாலுங்‌ கூடிய வியாதி தன்னைக்‌ கூறிடு குணபாடத்தால்‌ சூடிய குணங்களாலே சுகப்பட மருந்து சொல்வாம்‌.

நாடிகளின்‌ கதியின்‌ பேதங்களினால்‌ ஏற்படும்‌ குறிகுணங்கள்‌, விழி, முகத்தின்‌ வேறுபாடுகள்‌, முதலியவைகளை நன்கு பரீட்சை செய்து, குணபாடத்தில் உள்ள படி வியாதிகளின்‌ குறி குணங்களையும்‌ மனதில்‌ வைத்துக்‌ கொண்டு வியாதிகளைத்‌ தீர்மானித்து மருந்துகள்‌ கொடுக்க வேண்டும்‌.

8/2/19

லங்கனத்திற்கு ஆகாதவர்‌

பாலகர்‌ கிழவர்தாது பாவிய நட்டர் கண்ணில்‌ சிலநோயானோர்‌ மத்தச் சயங்கொண்டோர்‌ கிராணியாளர்‌ சாலமுன்‌ வழிநடந்தோர் தாங்குகெர்ப்பிணி சேர்மாதர்‌ காலமா யிவர்கட்கெல்லாங் கடியலெங் கனமாகாதே.

குழந்தைகள்‌, கிழவர்‌, தாது நஷ்டமானவர்‌, கண்றோயுள்ளவர்‌, க்ஷயரோகி, கிராணியுள்ளவர்‌, வழிப்பிரயாணம்‌ செய்தவர்‌, கர்ப்பிணி முதலானவர்களுக்கும்‌ லங்கனம்‌ (உபவாஸம்‌) உதவாது.

7/2/19

லங்கனம்‌ செய்யக்‌ கூடாதவர்‌கள்

தொக்கமுமாய்‌ மூத்தோர்தூரத்திற்‌ சுமந்தோர்‌ மத்த மிக்க பாரிடித்தோர்‌ பின்னை விஷமுண்டோ ரய்ய மேற்றோ ரக்ககெனக்‌ காமத்தையா லடியுண்டோர் சிறியோர்‌ மூத்தோ ரிக்கண மொழியாய் கேளாயிவர்க்கு லங்கனமாகாதே.

வயது முதிர்ந்தோர்‌, வழி நடந்தோர்‌, பாரத்தைச்‌ சுமந்தவர்‌, விஷம்‌ உண்டவர்‌, ஸ்திரிபோகம்‌ செய்தவர்‌, சிறுகுழந்தைகள்‌ இவர்களுக்கு லங்கனம்‌ உதவாது.

6/2/19

சுர வகைகளில்‌ லங்கனக்கிரமம்‌

வாதமானசுரமாகில்‌ மருவும்‌ பட்டினி மூன்றாகும்‌ சூது பித்தச்‌ சுரமாகில்‌ ஒன்றேயாகு முபவாசம்‌ சீதமான சுரமாகில்‌ செய்‌ய நாளே யேழாகு மாதே சுரத்தின்‌ குத்தம்‌ வர வருந்தவேண்டாம்‌ மருந்து கொண்டே.

வாத சுரத்தில்‌ 3 நாட்கள்‌ பட்டினி போடவும்‌. பித்த சுரத்தில்‌ ஒரு நாள்‌ உபவாஸம்‌ இருந்தால்‌ போதும்‌. குளிர்‌ சுரத்தில்‌ 7 நாட்கள்‌ உபவாஸம்‌ இருக்க வேண்டும்‌. ஆகவே சுரத்தில்‌ மருந்துகள்‌ கொடுத்துக்‌ குற்றங்களை உண்டாக்க வேண்டாம்‌.

சுரம்‌ அதிகரிக்கக்‌ காரணம்‌

மெய்யில்வந்த யினஞ்சுரந்தான்‌ விட்டேவிட்டு வெதுப்புவிக்குங்‌ கையில்‌ வெதுப்புங்‌ கால்வெதுப்புங்‌ கன்னங்‌ காலில்‌ கனக்கவைக்கும்‌ உய்யுமுழலை வந்தவரை ஓடிக்‌ கட்டிக்‌ கொள்ளுமது அய்யோ பிழையேன்‌ காணென்று மதிகமாகுஞ்‌ சுரந்தானே.

ஆரம்ப நிலையிலுள்ள சுரம்‌ விட்டு விட்டு வரும்‌. காலில்‌ கனமேற்படும்‌. எரிச்சல்‌ உண்டாகும்‌. பின்னர்‌ சுரம்‌ அதிகரிக்கும்‌. நோயாளி ஐயோ! பிழைக்க மாட்டேன்‌ என்று அடிக்கடி சொல்வான்‌.

5/2/19

ஆதி சுர லக்ஷ்ணம்‌

ஆற்குமன்ப னாதிசுரத்துடனடவைக்‌ கேள்மின்‌ வேற்கும்‌ வெதுப்புங்‌ கண்சிவக்கும்‌ வெந்நீர்‌ வேண்டும்‌ பாலன்னும்‌ பார்க்கப்‌ பயமாயிருக்குதென்றும்‌ பலகாற்‌ கண்டகவி பாடுஞ்‌ சீர்க்கும்‌ வயறு சிக்குவிக்கும் தெருவிற்‌ புறப்பட்டோடிடுமே.

உடம்பில்‌ வியர்வை உண்டாகும்‌. கண்கள்‌ சிவப்பு. வெந்நீர்‌, பால்‌ இவைகளில்‌ விருப்பம்‌ உண்டாகும்‌. அடிக்கடி பயப்படுவான்‌. தொண்டையில்‌ சப்தம் உண்டாகும்‌. மலச்சிக்கல்‌ அதிகரிக்கும்‌.

4/2/19

விஷ சுர லக்ஷ்ணம்‌

பிந்தந்தான்‌ மொன்‌... டாய்‌ மொத்தலார்‌ குழலினாளே கொன்றொன்று மூன்றிரண்டும்‌ பத்துடனிருநாலாறும்‌ நின்றுதான்‌ பரந்து காயும்‌ வித்தக மாகத் தேவர் விஷசுர மென்னலாமே.

ஒன்று, இரண்டு, மூன்று, பத்து, எட்டு இந்நாட்களில்‌ திரும்பத்‌ திரும்ப வரக் கூடிய ஜ்வரம்‌ விஷ ஜ்வரமாகும்‌.

கபவாத சுர குறிகள்‌

சந்தொடுதலையும்‌ நொந்து தள்ளியே மிளைப்பு முண்டா யந்தியுமழத்திநீங்காச்சுவாசமு மாகுங்கண்டாய்‌ நொந்துதான்‌ சந்துதோறுங்‌ குளிரும்‌ நுண்ணிடையாய்‌ கேளாய்‌ வந்திடு காசமய்யின்‌ வாதத்தின்‌ சுரமதாமே.

மூட்டுகள்‌, தலை முதலான இடங்களில்‌ வலி இளைப்பு, சாயங்காலத்தில்‌ தேகச்சூடு, சுவாசம்‌, மூட்டுகளில்‌ சிலிசிலிர்ப்பு, இருமல்‌ முதலான குறிகள் உண்டாகும்‌.

3/2/19

அத்திசுர லக்ஷ்ணம்‌

அத்தி சுரத்தின்‌ குணஞ்சொல்லி லறவே வெதுப்பு முடம்பெல்லாம்‌ மெத்திக்‌ கலங்கு முள்ளலையும்‌ வெள்ளோக்காளம்‌ போக்கி விக்கும்‌ சத்திகெடாது நீர்சிவக்கும்‌ தம்பம்போலே கடத்திவிடும்‌ வத்தி வலிக்கும்‌ வயிறிழியா வண்ணமதாகு குணந்தானே.

உடம்பில்‌ எரிச்சல்‌ அதிகமாகும்‌. மனம்‌ கலங்கும்‌. வெள்ளோக்காளமெடுக்கம்‌, சிறுநீர்‌ சிவந்து இறங்கும்‌. கட்டைபோல்‌ கிடப்பான்‌. உடம்பில்‌ வலியும்‌ உண்டாகும்‌. மலம்‌ போகாது.

2/2/19

ஆமச்சுர லக்ஷ்ணம்

ஆமச்சுரத்தின்‌ குணஞ்சொல்லி லதிகமாக வெதும்பி விக்குஞ்‌ சாமந்தோரு கெழுந்திருக்குந்‌ தானேமுறக்க முண்டாகுஞ்‌ சேமமாக உடம்பிளைக்குஞ்‌ சிக்கப்‌ பண்ணும்‌ பசியில்லை நாமந்தளரு முடம்போயும்‌ நடுக்கியிருக்கு மிதுதானே

உடம்பில்‌ அதிகமான எரிச்சல்‌ உண்டாகும்‌. ஒவ்வொரு சாமத்திலும்‌ எழுந்திருப்பான்‌. தூக்கமும்‌ வரும்‌. உடம்பு இளைத்துவிடும்‌. பசி இராது. உடம்பில்‌ ஓய்ச்சலும்‌ அதிகமாகும்‌.

அதிசாரச்‌ சுர லக்ஷ்ணம்‌

அறவே வெதுப்பு முள்ளலைக்கு மடிக்கடிக்குநீர்தாதாவென்று முறவேயுடம்பு கிடக்க வொட்டாதூதுங்காத்து வயிரிழியும்‌ முறுக்குமுடம்பு தான்கடுக்குமுகமும்வேர்க்குந்‌ தலைவலிக்குந்‌ தறுகாத்‌ துயரு மதிசாரச்‌ சுரமென்றரிவோர்‌ சாற்றியதே.

உடம்பினுள்‌ எரிச்சல் அதிகரிக்கும்‌. அடிக்கடி தண்ணீர்‌ கொடு என்று கேட்பான்‌. ஒரு இடத்தில்‌ கிடக்கமாட்டான்‌. வாயுப்பரிந்து மலம்‌ போகும்‌. முகத்தில் வியர்வை, உடம்பு வலி, தலை வலி இவைகளும்‌ உண்டாகும்‌. இவை அதிஸார ஜ்வர லக்ஷ்ணங்களாகும்‌.

30/1/19

சேத்தும சுரம்‌

திகைக்குங்‌ கடுக்குங்‌ கால்கரமுஞ்‌ சிறுகப்பேச்சு மூச்சு வரும்‌ பகைக்கும்‌ வருவோர் தம்மோடே பசித்தேனென்றும்‌ பாடு சொல்லும்‌ வகைக்கு மிடந்தானில்லையென்று வயிறுங்‌ கழியாதினைப்பெடுக்கும்‌ முகைக்குந்‌ தலைக்கும்‌ வேர்வெடுக்கு முளறி மிராஞ்‌ சேத்துமமே.

திகைப்பு அதிகமாகும்‌. கை கால்கள்‌ கடுக்கும்‌. கொஞ்சம்‌ பேசினாலும்‌ மேல்‌ மூச்சு வாங்கும்‌. அடுத்து வருபவர்களிடம்‌ பகைத்துக்‌ கொள்வான்‌. பசி இருக்கிறதென்று கூறமாட்டான்‌. மலம்‌ கழியாது. சுவாசமேற்படும்‌. தலையில்‌ வியர்வையுண்டாகும்‌. இவை கப சுரக்குறிகளாம்‌.

29/1/19

பித்த வாத சிலேத்ம ஜ்வரக்‌ குறிகள்‌

காயுமுடம்புதான்‌ தடிக்குங்கண்ணுஞ்‌ சிவக்கும்‌ நாவுலரும்‌ வாயுங்‌ கறுக்கும்‌ வயிரிழியா மந்தம்‌ பாயிற்‌ கிடவாதுப்‌ பாயுமுழத்தித்‌ தானதிகம்பத்திவலிக்கு மொருபுறத்தைப்‌ பேயும்‌ பிடித்த தெனவாகும்‌ பித்தவாதசேற்றுமமே

உடம்பில்‌ ஜ்வரம்‌ உண்டாகும்‌. தடிப்புகள் ஏற்படும்‌. கண்கள்‌ சிவக்கும்‌. நாக்கு வறண்டு போகும்‌. வாய்‌ கறுக்கும்‌. மலச்சிக்கல் உண்டாகும்‌. பாயில்‌ ஒரே இடத்தில்‌ இருக்காமல்‌ இங்குமங்கும்‌ புரளுவான்‌. ஒரு பக்கமாக வலி இருக்கும்‌. பேய்‌ பிடித்தால்‌ எப்படி தவிப்பானோ அப்படி ஆவான்‌. இவை பித்தவாத சிலேத்மக்‌ குறிகளாகும்‌.