வாதமானசுரமாகில் மருவும் பட்டினி மூன்றாகும்
சூது பித்தச் சுரமாகில் ஒன்றேயாகு முபவாசம்
சீதமான சுரமாகில் செய்ய நாளே யேழாகு
மாதே சுரத்தின் குத்தம் வர வருந்தவேண்டாம் மருந்து கொண்டே.
வாத சுரத்தில் 3 நாட்கள் பட்டினி போடவும். பித்த சுரத்தில் ஒரு நாள் உபவாஸம் இருந்தால் போதும். குளிர் சுரத்தில் 7 நாட்கள் உபவாஸம் இருக்க வேண்டும். ஆகவே சுரத்தில் மருந்துகள் கொடுத்துக் குற்றங்களை உண்டாக்க வேண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக