காயுமுடம்புதான் தடிக்குங்கண்ணுஞ் சிவக்கும் நாவுலரும்
வாயுங் கறுக்கும் வயிரிழியா மந்தம் பாயிற் கிடவாதுப்
பாயுமுழத்தித் தானதிகம்பத்திவலிக்கு மொருபுறத்தைப்
பேயும் பிடித்த தெனவாகும் பித்தவாதசேற்றுமமே
உடம்பில் ஜ்வரம் உண்டாகும். தடிப்புகள் ஏற்படும். கண்கள் சிவக்கும். நாக்கு வறண்டு போகும். வாய் கறுக்கும். மலச்சிக்கல் உண்டாகும். பாயில் ஒரே இடத்தில் இருக்காமல் இங்குமங்கும் புரளுவான். ஒரு பக்கமாக வலி இருக்கும். பேய் பிடித்தால் எப்படி தவிப்பானோ அப்படி ஆவான். இவை பித்தவாத சிலேத்மக் குறிகளாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக