மூட்டுகள், தலை முதலான இடங்களில் வலி இளைப்பு, சாயங்காலத்தில் தேகச்சூடு, சுவாசம், மூட்டுகளில் சிலிசிலிர்ப்பு, இருமல் முதலான குறிகள் உண்டாகும்.
Top bar Ad
4/2/19
கபவாத சுர குறிகள்
சந்தொடுதலையும் நொந்து தள்ளியே மிளைப்பு முண்டா
யந்தியுமழத்திநீங்காச்சுவாசமு மாகுங்கண்டாய்
நொந்துதான் சந்துதோறுங் குளிரும் நுண்ணிடையாய் கேளாய்
வந்திடு காசமய்யின் வாதத்தின் சுரமதாமே.
3/2/19
அத்திசுர லக்ஷ்ணம்
அத்தி சுரத்தின் குணஞ்சொல்லி லறவே வெதுப்பு முடம்பெல்லாம்
மெத்திக் கலங்கு முள்ளலையும் வெள்ளோக்காளம் போக்கி விக்கும்
சத்திகெடாது நீர்சிவக்கும் தம்பம்போலே கடத்திவிடும்
வத்தி வலிக்கும் வயிறிழியா வண்ணமதாகு குணந்தானே.
உடம்பில் எரிச்சல் அதிகமாகும். மனம் கலங்கும். வெள்ளோக்காளமெடுக்கம், சிறுநீர் சிவந்து இறங்கும். கட்டைபோல் கிடப்பான். உடம்பில் வலியும் உண்டாகும். மலம் போகாது.
2/2/19
ஆமச்சுர லக்ஷ்ணம்
ஆமச்சுரத்தின் குணஞ்சொல்லி லதிகமாக வெதும்பி விக்குஞ்
சாமந்தோரு கெழுந்திருக்குந் தானேமுறக்க முண்டாகுஞ்
சேமமாக உடம்பிளைக்குஞ் சிக்கப் பண்ணும் பசியில்லை
நாமந்தளரு முடம்போயும் நடுக்கியிருக்கு மிதுதானே
உடம்பில் அதிகமான எரிச்சல் உண்டாகும். ஒவ்வொரு சாமத்திலும் எழுந்திருப்பான். தூக்கமும் வரும். உடம்பு இளைத்துவிடும். பசி இராது. உடம்பில் ஓய்ச்சலும் அதிகமாகும்.
அதிசாரச் சுர லக்ஷ்ணம்
அறவே வெதுப்பு முள்ளலைக்கு மடிக்கடிக்குநீர்தாதாவென்று
முறவேயுடம்பு கிடக்க வொட்டாதூதுங்காத்து வயிரிழியும்
முறுக்குமுடம்பு தான்கடுக்குமுகமும்வேர்க்குந் தலைவலிக்குந்
தறுகாத் துயரு மதிசாரச் சுரமென்றரிவோர் சாற்றியதே.
உடம்பினுள் எரிச்சல் அதிகரிக்கும். அடிக்கடி தண்ணீர் கொடு என்று கேட்பான். ஒரு இடத்தில் கிடக்கமாட்டான். வாயுப்பரிந்து மலம் போகும். முகத்தில் வியர்வை, உடம்பு வலி, தலை வலி இவைகளும் உண்டாகும். இவை அதிஸார ஜ்வர லக்ஷ்ணங்களாகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)