Top bar Ad

18/1/19

வாத சுரம்‌

நடுக்கித்‌ திகைத்து மயிர்க்குத்தும்‌ நளிர்ந்து தலையை நோவதுவுங்‌ கடுக்கித்‌ தாமுரி நிமிர்ந்து கண்ணும்‌ வாயுங்கருகி...... யிடுக்கி நீர்வாய்‌ வருவது மிரைக்கு மிளைக்கும்‌ வாய்துவர்க்கும்‌ மடக்கி வலிக்கு முடம்பெல்லா மறிவாய்‌ வாதசுரமென்றே.

உடம்பில்‌ நடுக்கம் உண்டாகும்‌. பயங்கொள்வான்‌, மயிர்க்கூச்சல் உண்டாகும்‌. தலைவலி, கண்கள்‌, வாய்‌ இவற்றில்‌ கருநிறம்‌, வாயில்‌ நீர்‌ ஊறல்‌, இரைப்பு , தேக இளைப்பு, வாயில்‌ துவர்ப்புச்‌ சுவை, உடம்பில்‌ வலி முதலிய குறிகள்‌ கண்டால்‌ அது வாத சுரமாகும்‌.

17/1/19

சுர நிதானம்‌

ஆகாத உண்டிக்கெல்லாமாசிரா மத்தைப்‌ பத்திப்‌ போகாத உதிரத்தீயைப்‌ பிரம்பதுவீசப்பண்ணும்‌ பாகாரு மொழியினாளே! பங்கயன்‌ விதித்தநூலின்‌ வேதாவின்‌ வியாதிநீதி விளம்பினோந்‌ தமிழினாலே. ஆங்காரக்‌ கோபத்தாலு மடிவெயிற்‌ காய்கையாலு மாங்கிலாப்‌ படுக்கையாலும்‌ பசித்த போதுண்ணாதாலும்‌ தாங்கொணாச்சுமையினாலு மஞ்சரு கிலையீறலாலுங்‌ தேங்கிய மலக்கட்டாலுந்‌ தயநோய்‌ சுரமதாமே பண்டையில்‌ மலச்சிக்காலும்‌ பழயதோரசனத்தாலு முண்டியில்‌ பொல்லாங்‌ காலும்‌ மொண்டொடி வருத்தத்தாலுங்‌ கண்டுயி லாமையாலுங்‌ கடும்புனல்‌ வெட்டத்தாலு மிண்டிய சுமைகளாலும்‌ வெதும்புவந்துற்றவாரே.

தேகத்தில்‌ சாப்பிட்ட உணவு சீரணமாகாமல்‌ ஆமதோஷமாகி வயிற்றிலுள்ள ஜடராக்னியை வெளியே வீசச்‌ செய்யும்‌. அப்போது தொட்டால்‌ சுரம்‌ காயும்‌. மேலும்‌ கோபத்தினாலும்‌, வெயிலில்‌ நடப்பதாலும்‌, படுத்திருப்பதாலும்‌, பசித்த போது சாப்பிடாமலிருப்பதாலும்‌, அதிகமாகத்‌ தலையில்‌ சுமையைத்‌ தூக்குவதாலும்‌, புகையிலையைப்‌ போடுவதாலும்‌, மலச்சிக்கலாலும்‌ சுரநோய்‌ உண்டாகும்‌. நீடித்த மலச்சிக்கல் பழயமுது சாப்பிடுதல்‌, ஆகாரம்‌ சரியாக இல்லாமலிருத்தல்‌, அதிகமான வருத்தம்‌, தூங்காமலிருப்பது, தண்ணீரில்‌ அதிகமாகக்‌ குளிப்பது, பாரத்தைச்‌ சுமப்பது இவைகளாலும்‌ ஜ்வரம்‌ ஏற்படும்‌.

16/1/19

அபின்யாசன்‌ குணம்‌

மூவகைத்தொஷந்தானும்‌ முகமொடு தூக்கந்தானு மவ்வகை மெய்சயியாது மருவுங்சுவாசம்‌ பெரிதாகு மெவ்வகைப்‌ பசியுமில்லாஇருக்குமேல்‌ குறிகள்‌ கண்டால்‌ கவ்வகைப்‌ பயனாமபினியாசன்‌ கருதிமனுவுக்குரையீரே.

வாதம்‌, பித்தம்‌, கபம்‌ முதலான 28 தோஷங்களும்‌ பிரகோபிக்கும்‌. தூக்கம்‌ அதிகமாகும்‌. மூச்சுவிடுதல்‌ மிக பயங்கரமாயிருக்கும்‌. பசி இராது. இவை அபின்யாச சந்நியின்‌ குறிகள்‌.

15/1/19

சீதாங்க சந்தி குணம்

பனியென மெய்யுமாகும்‌ பசியாவாந்தி மிகச்செய்யும்‌ கனிமைபாந்தாகம்‌ விக்கல்‌ கழிச்சல்‌ சேட்டிமமுமாகுந்‌ துனிமையாந்‌ தினவுமாகுஞ்‌ சுவாசமார் பிளைப்புக்கம்ப மினிமையாங்‌ குளிருமெய்யில்‌ சீதாங்கத்தியல்பு தானே

தேகம்‌ பனிக்கட்டியைப்போல்‌ சில்லிட்டுப்போம்‌. பசியேற்படாது. வாந்தி அதிகரிக்கும்‌. தாகம்‌, விக்கல்‌, கழிச்சல்‌, கபம்‌, அரிப்பு மேல்மூச்சு, நடுக்கம்‌, குளிர்‌ முதலான பற்பல குறிகளும்‌ காணும்‌. இது சதோங்கச் சந்நியாகும்‌.