நடுக்கித் திகைத்து மயிர்க்குத்தும் நளிர்ந்து தலையை நோவதுவுங்
கடுக்கித் தாமுரி நிமிர்ந்து கண்ணும் வாயுங்கருகி......
யிடுக்கி நீர்வாய் வருவது மிரைக்கு மிளைக்கும் வாய்துவர்க்கும்
மடக்கி வலிக்கு முடம்பெல்லா மறிவாய் வாதசுரமென்றே.
உடம்பில் நடுக்கம் உண்டாகும். பயங்கொள்வான், மயிர்க்கூச்சல் உண்டாகும். தலைவலி, கண்கள், வாய் இவற்றில் கருநிறம், வாயில் நீர் ஊறல், இரைப்பு , தேக இளைப்பு, வாயில் துவர்ப்புச் சுவை, உடம்பில் வலி முதலிய குறிகள் கண்டால் அது வாத சுரமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக