ஆகாத உண்டிக்கெல்லாமாசிரா மத்தைப் பத்திப்
போகாத உதிரத்தீயைப் பிரம்பதுவீசப்பண்ணும்
பாகாரு மொழியினாளே! பங்கயன் விதித்தநூலின்
வேதாவின் வியாதிநீதி விளம்பினோந் தமிழினாலே.
ஆங்காரக் கோபத்தாலு மடிவெயிற் காய்கையாலு
மாங்கிலாப் படுக்கையாலும் பசித்த போதுண்ணாதாலும்
தாங்கொணாச்சுமையினாலு மஞ்சரு கிலையீறலாலுங்
தேங்கிய மலக்கட்டாலுந் தயநோய் சுரமதாமே
பண்டையில் மலச்சிக்காலும் பழயதோரசனத்தாலு
முண்டியில் பொல்லாங் காலும் மொண்டொடி வருத்தத்தாலுங்
கண்டுயி லாமையாலுங் கடும்புனல் வெட்டத்தாலு
மிண்டிய சுமைகளாலும் வெதும்புவந்துற்றவாரே.
தேகத்தில் சாப்பிட்ட உணவு சீரணமாகாமல் ஆமதோஷமாகி வயிற்றிலுள்ள ஜடராக்னியை வெளியே வீசச் செய்யும். அப்போது தொட்டால் சுரம் காயும். மேலும் கோபத்தினாலும், வெயிலில் நடப்பதாலும், படுத்திருப்பதாலும், பசித்த போது சாப்பிடாமலிருப்பதாலும், அதிகமாகத் தலையில் சுமையைத் தூக்குவதாலும், புகையிலையைப் போடுவதாலும், மலச்சிக்கலாலும் சுரநோய் உண்டாகும். நீடித்த மலச்சிக்கல் பழயமுது சாப்பிடுதல், ஆகாரம் சரியாக இல்லாமலிருத்தல், அதிகமான வருத்தம், தூங்காமலிருப்பது, தண்ணீரில் அதிகமாகக் குளிப்பது, பாரத்தைச் சுமப்பது இவைகளாலும் ஜ்வரம் ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக