Top bar Ad

12/1/19

சித்தவிப்ரமன்‌ குணம்‌

மோகம்‌ பெருக்கும்‌ விருமையுமா முதிருந்தாகஞ்சிறப்புடனே வாகாம்‌ பிரலாபதீத முடன்‌ மண்ணு (மனது) நிறைந்த வைக்கலியத்‌ தாகம்பீளை கண்ணதைநிலச் சாய்த்துபார்க்குங்‌ குணங்‌ கண்டால்‌ ஆகாச்சித்த விப்பிரம னறிவீர்‌ புவியில்‌ மடவீரே.

மயக்கம் ஏற்படும்‌. தாகம் அதிகரிக்கும்‌. அதிகமாகப்‌ பிரலாபிப்பான்‌. மனது ஒரே நிலையில்‌ இராமல்‌ அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும்‌. தாகம்‌ ஏற்படும்‌. கண்களில்‌ பீளை சாறும்‌. தலையை ஒரு பக்கமாய்ச்‌ சாய்த்துப்‌ பார்ப்பான்‌. இவை சித்தவிப்பிரம சந்தி லக்ஷ்ணங்களாகும்‌.

11/1/19

தாந்திரிகன்‌ குணம்‌

தூக்கம்‌ பெருக்குஞ்‌ சுரந்தோன்றும்‌ சுவாசமடரும்‌ பிரமையுமாம்‌ தாக்கும்‌ வேதனையதிசாரந்தாகம்‌ நெஞ்சைத்‌ தினவு தின்னும்‌ நாக்குங்‌ கறுத்துத்‌ தடிப்புண்டாம்‌ நாடியடரும்‌ மேல்‌மூச்சு மாக்குங்‌ குணங்க ளிவைகண்டா லறிவீர்தாந்தி ரீகனிதே

அதிகமான தூக்கம்‌ ஏற்படும்‌. சுரம்‌ அதிகமிருக்கும்‌. மேல்‌ மூச்சு வாங்கும்‌. மயக்கம் ஏற்படும்‌. உடம்பு வலி, கழிச்சல்‌ (பேதி) , நெஞ்சு எரிச்சல்‌, நாக்கில்‌ கறுமை நிறம்‌, தடிப்பு முதலான குறிகள்‌ காணில்‌ அது தாந்திரீக சந்நியாம்‌.

சந்திரிகன் குணம்

வாக்குத்தானிறை செலுத்தும்‌ வருந்துஞ்‌ சூலை காசமுடன்‌ தாக்கும்‌ வேதனையுடன்‌ புலருஞ்‌ சாத்துங்‌ குணங்களிவை கண்டால்‌ நீக்குஞ்‌ சந்திரிக னீதென்று நிலையைக்‌ கண்டு புவி மீதில்‌ காக்கவுயிரை மருந்தழித்துக்‌ கருதிப்‌ பாரீர்‌ புலவீரே.

நோயாளி பிரலாபிப்பான்‌, உடம்பில்‌ வலி, இருமல்‌ இவைகள் ஏற்பட்டுத்‌ தேகம்‌ மெலியும்‌. இவை சந்திரிக சந்நி லட்சணங்கள்‌.

10/1/19

சந்நி நீடிக்கும்‌ காலம்‌

சந்திரிகனே ழுநானாந்‌ தாந்திரிக னிருபத்தஞ்சாம்‌ மந்தகன்‌ பத்துநாளா மபினயாசன்‌ பதினஞ்சேநாள் முந்துசீதாங்கன்‌ பதினஞ்சு கண்ணிகன்‌ மூன்று மாதம்‌ வந்தருத்ர னிருபது வழுத்துபிரலாபகன்‌ பதினாலே பத்துநா ளிரத்தசாட்டிப்‌ பகருசீதக னேழாநா ளொத்தபதி மூன்‌ றுகண்ட குச்சனோரெட்டுப்புக்கு நேத்திரன்‌ சித்தவிப்ரம விருபத்‌துநாலுந்‌ திகழுஞ்சன்னிநாள்கண்டு மெத்தனவுஞ்‌ சிந்தாமணியின்‌ விதத்தையுரைத்தோங்‌ கண்டீரே
‌ ‌ ‌‌ ‌ ‌ ‌
சந்திரிகள்‌ 7 நாட்கள் வரை உடலை வருத்தும்‌
தாந்திரிகள்‌ 25 நாட்கள்வரை உடலை வருத்தும்‌
அந்தகன்‌ 10 நாட்கள் உடலை வருத்தும்‌
அபின்யாசன்15 நாட்கள் வரை உடலை வருத்தும்‌
கதோங்கன்‌ 15 நாட்கள் வரை உடலை வருத்தும்‌
கன்னிகன்‌ 3 மாதங்கள்‌ வரை உடலை வருத்தும்‌
ருத்ரன்‌ 20 நாட்கள்‌ வரை உடலை வருத்தும்‌
பிரலாபன்14 நாட்கள் வரை உடலை வருத்தும்‌
ரத்த சாட்டியன் 10 நாட்கள் வரை உடலை வருத்தும்
சகன்‌ 7 நாட்கள் வரை உடலை வருத்தும்‌
கண்டகுச்சன்19 நாட்கள் வரை உடலை வருத்தும்‌
புக்கு நேத்திரன்8 நாட்கள்வரை உடலை வருத்தும்
சித்தவிப்ரமன் 24 நாட்கள் வரை உடலை வருத்தும்‌
என்று சிந்தாமணியில்‌ காணப்படுகிறது.