தூக்கம் பெருக்குஞ் சுரந்தோன்றும் சுவாசமடரும் பிரமையுமாம்
தாக்கும் வேதனையதிசாரந்தாகம் நெஞ்சைத் தினவு தின்னும்
நாக்குங் கறுத்துத் தடிப்புண்டாம் நாடியடரும் மேல்மூச்சு
மாக்குங் குணங்க ளிவைகண்டா லறிவீர்தாந்தி ரீகனிதே
அதிகமான தூக்கம் ஏற்படும். சுரம் அதிகமிருக்கும். மேல் மூச்சு வாங்கும். மயக்கம் ஏற்படும். உடம்பு வலி, கழிச்சல் (பேதி) , நெஞ்சு எரிச்சல், நாக்கில் கறுமை நிறம், தடிப்பு முதலான குறிகள் காணில் அது தாந்திரீக சந்நியாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக