சந்திரிகனே ழுநானாந் தாந்திரிக னிருபத்தஞ்சாம்
மந்தகன் பத்துநாளா மபினயாசன் பதினஞ்சேநாள்
முந்துசீதாங்கன் பதினஞ்சு கண்ணிகன் மூன்று மாதம்
வந்தருத்ர னிருபது வழுத்துபிரலாபகன் பதினாலே
பத்துநா ளிரத்தசாட்டிப் பகருசீதக னேழாநா
ளொத்தபதி மூன் றுகண்ட குச்சனோரெட்டுப்புக்கு நேத்திரன்
சித்தவிப்ரம விருபத்துநாலுந் திகழுஞ்சன்னிநாள்கண்டு
மெத்தனவுஞ் சிந்தாமணியின் விதத்தையுரைத்தோங் கண்டீரே
| சந்திரிகள் | 7 நாட்கள் வரை உடலை வருத்தும் |
| தாந்திரிகள் | 25 நாட்கள்வரை உடலை வருத்தும் |
| அந்தகன் | 10 நாட்கள் உடலை வருத்தும் |
| அபின்யாசன் | 15 நாட்கள் வரை உடலை வருத்தும் |
| கதோங்கன் | 15 நாட்கள் வரை உடலை வருத்தும் |
| கன்னிகன் | 3 மாதங்கள் வரை உடலை வருத்தும் |
| ருத்ரன் | 20 நாட்கள் வரை உடலை வருத்தும் |
| பிரலாபன் | 14 நாட்கள் வரை உடலை வருத்தும் |
| ரத்த சாட்டியன் | 10 நாட்கள் வரை உடலை வருத்தும் |
| சகன் | 7 நாட்கள் வரை உடலை வருத்தும் |
| கண்டகுச்சன் | 19 நாட்கள் வரை உடலை வருத்தும் |
| புக்கு நேத்திரன் | 8 நாட்கள்வரை உடலை வருத்தும் |
| சித்தவிப்ரமன் | 24 நாட்கள் வரை உடலை வருத்தும் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக