சிவன் கோவில்களிலெல்லாம் சிவலிங்கத்திற்கு நேர் எதிரில் லிங்கத்திற்கு சம உயரத்தில் லிங்கத்தையே பார்த்த வண்ணம் நேர் எதிரில் அமைந்திருப்பதை காணலாம். நந்தியின் அனுமதி பெற்று தான் சிவதரிசனம் செய்ய வேண்டும் என்பதும் நந்திக்கும் சிவலிங்கத்திற்கும் இடையே நின்று நந்தி தேவரை மறைத்து நின்று சுவாமி தரிசனம் செய்யக் கூடாது என்பது சைவ சமயமரபு. அதற்கு காரணம் நந்தி, சிவத்திடம் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பதே.
உடல்கூற்று அடிப்படையிலயே சிதம்பரம் முதலான பழங்கால சிவாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. சித்தர்கள் நெறிப்படி சிவத்திற்கும் நந்திக்கும் இடையே இடைவிடாது வாசி (உள் சுவாசம், வெளி சுவாசம்) ஓட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சுவாச ஒட்டத்தில் நந்தியம்பெருமான் ஆக்ஞையைந்த நாசி துவாரங்களாகவும்
சிவப்பரம்பொருள் சகஸ்ர தளமாகவும் உள்ளன. சிவமும் நந்தியும் பிரிக்க முடியாத ஒன்று. குருதட்சணாமூர்த்தியிடம் ஞானம் பெற்ற எண்மரில் ஒருவரான திருமூலர் இறைவனை நந்தியாகவே கொண்டுள்ளது. சிவமும் நந்தியும் வேறுவேறல்ல என்பதை உறுதி செய்கிறது.
இவற்றையெல்லாம் சேர்த்து எண்ணிப்பார்த்தால் சிவன், நந்தி, முருகன் ஆகிய மூவருமே மூலப்பரம் பொருளின் புறவடிவங்கள் தான் என்பது எளிதில் விளங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக