Top bar Ad

5/8/18

அகத்தியர்

திருவாதிரை நட்சத்திர நாயகனான திருக்கயிலாயபதி பூமியை சமன்படுத்துவதற்காக பூமியின் தென் முனைக்கு அகத்தியரை அனுப்பி வைத்தார் என்பது புராணக்கதை. உண்மையில் சிவப்பரம்பொருள் பூமிக்கு வடக்கே துவாதச பால்வெளி மண்டலத்திற்கு அப்பால் வெகு தொலைவில் துருவ நட்சத்திரமாய் இருந்து பூமியில் வாழும் மக்களுக்குத் திசைகளை உணர்த்தி வழிகாட்டுகிறது. துருவ நட்சத்திரம் உள்ள வடக்கு திசையைத் துல்லியமாக அறிந்துணர புலகர், கீரது, அத்திரி, புலத்தியர்,ஆங்கிரசர், வசிஷ்டர், மரீசி ஆகிய சப்தரிஷிகளும் உலக மக்கள் எளிதில் பார்க்கும் வகையில் சப்தரிஷி மண்டலமாக அமைந்திருந்து வட பாகத்தை சிவப்பரம்பொருளான துருவ நட்சத்திரம் உள்ள திசையை காண்பித்து வருகிறார்கள். துருவ நட்சத்திரம் பூமிக்கு பாதுகாப்பாக அகத்தியரும், பூமிக்கு தெற்கே வெகு தொலைவில் நாம் வாழும் பால்வழி மண்டலத்திலேயே மிக அதிகமாக ஒளி மிக்க நட்சத்திரமாக இருந்து பூமியின் சமன்பாட்டை பாதுகாத்து வருகிறார்.

அகத்தியர் உள்ள இடம்

அண்டார்டிகா கண்டத்தை உள்ளடக்கிய பூமிக்கு தெற்கே வெகு தொலைவில் உள்ள ஆர்கோ கப்பல் (ARGO THE SHIP) என்ற மிக பெரிய நட்சத்திர தொகுதி உள்ளது. அந்த கப்பலில் நான்கு தளங்கள் உள்ளன. நான்காவதான அடித்தளத்தில் ஆல்ஃபா அர்கஸ்(ALPHA ARGUS) என்ற அகத்தியர் நட்சத்திரம் உள்ளது. அதுவே அகத்தியர் நட்சத்திரம் ஆகும். இந்த அகத்தியர் அண்டவெளியில் உள்ள அனைத்து நட்சத்திர மண்டலங்களிலும் இரண்டாவது பேரொளி மிக்க நட்சத்திரமாக திகழ்கிறார்.
ஆல்ஃபா ஆர்கஸ் என்ற கிரேக்க மொழி சொல்லையும் அகத்தியர் என்ற தமிழ் சொல்லையும் கூர்ந்து கவனித்து பார்த்தால் சொல் அமைப்பிலும் பொருள் நுட்பத்திலும் இந்த இரண்டு சொற்களும் பெரிதும் ஒத்திருப்பதை காணலாம் [ஆல்ஃபா மனம் =அக மனம்].

2 கருத்துகள்: