Top bar Ad

4/8/18

சுப்பிரமணியர்

            சிவனாரின் தவஞான நிலையில் ஆக்ஞைபீடமாக அவருடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளாக வெளிப்பட்ட ஞான ஒளிவிளக்கே சுப்பிரமணிய சித்து.பஞ்ச முக சிவத்தின் ஆக்ஞை மையத்திலிருந்து பிரபஞ்ச ஆற்றலின் உன்னத நிலையான ஆறுமுகசிவமாக இந்த சித்து வெளிப்பட்டது.இந்த சித்து மனித இதயமான அகத்திற்கு உணர்த்திய உன்னத ஞானமே சுப்பிரமணிய ஞானம். ஒரு உண்மை குரு முகமாக இந்த ஞானத்தைப் பெறுபவர்கள் யாவருமே அகத்தியர்கள்தான். அகத்தியர் என்ற சொல் ஒரு காரணப் பெயர் "அகம்+தீ+அர்"எனப் பிரித்தால் அது "ஞானத்தீயையே இதயமாக கொண்டவர் என்றே பொருள்படும். இந்த அகத்தீயைத் தன்மயமாகக் கொண்டவர் சுப்பிரமணியர்.இந்த காரணப்பெயர் "சு+பிரமம்+மணி+அர்"எனப்பிரிந்து"தூய,பரவெளிமுழுவதும் ஊடுருவி நிறைந்துள்ள இரத்தினமயமான ஞானப்பேரொளியாக உள்ளவர்"என்று பொருள்படும். இவரது அகத்தீயைத் முழுவதுமாக உள்வாங்கி எங்கும் பிரதிபலித்துவரும் பண்பின் உருவக வெளிப்பாடே அகத்தியர். இங்கு அகத்தியம் என்பது ஒவ்வொரு மனிதனின் உண்மையான ஆத்ம தரிசனமே ஆகும். இந்த ஆன்ம தரிசனத்தை முழுமையாகப் பெற்றே ஒரு ஆன்மா வானவெளியில் நம் சூரியனை விட பல மடங்கு அதிக ஒளியுள்ள ஒரு மகா நட்சத்திரமாக ஒளிவீசிக் கொண்டிருக்கிறது . 
அதுவே அகத்தியர் என்னும் மாமுனிவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக