Top bar Ad

30/1/19

சேத்தும சுரம்‌

திகைக்குங்‌ கடுக்குங்‌ கால்கரமுஞ்‌ சிறுகப்பேச்சு மூச்சு வரும்‌ பகைக்கும்‌ வருவோர் தம்மோடே பசித்தேனென்றும்‌ பாடு சொல்லும்‌ வகைக்கு மிடந்தானில்லையென்று வயிறுங்‌ கழியாதினைப்பெடுக்கும்‌ முகைக்குந்‌ தலைக்கும்‌ வேர்வெடுக்கு முளறி மிராஞ்‌ சேத்துமமே.

திகைப்பு அதிகமாகும்‌. கை கால்கள்‌ கடுக்கும்‌. கொஞ்சம்‌ பேசினாலும்‌ மேல்‌ மூச்சு வாங்கும்‌. அடுத்து வருபவர்களிடம்‌ பகைத்துக்‌ கொள்வான்‌. பசி இருக்கிறதென்று கூறமாட்டான்‌. மலம்‌ கழியாது. சுவாசமேற்படும்‌. தலையில்‌ வியர்வையுண்டாகும்‌. இவை கப சுரக்குறிகளாம்‌.

29/1/19

பித்த வாத சிலேத்ம ஜ்வரக்‌ குறிகள்‌

காயுமுடம்புதான்‌ தடிக்குங்கண்ணுஞ்‌ சிவக்கும்‌ நாவுலரும்‌ வாயுங்‌ கறுக்கும்‌ வயிரிழியா மந்தம்‌ பாயிற்‌ கிடவாதுப்‌ பாயுமுழத்தித்‌ தானதிகம்பத்திவலிக்கு மொருபுறத்தைப்‌ பேயும்‌ பிடித்த தெனவாகும்‌ பித்தவாதசேற்றுமமே

உடம்பில்‌ ஜ்வரம்‌ உண்டாகும்‌. தடிப்புகள் ஏற்படும்‌. கண்கள்‌ சிவக்கும்‌. நாக்கு வறண்டு போகும்‌. வாய்‌ கறுக்கும்‌. மலச்சிக்கல் உண்டாகும்‌. பாயில்‌ ஒரே இடத்தில்‌ இருக்காமல்‌ இங்குமங்கும்‌ புரளுவான்‌. ஒரு பக்கமாக வலி இருக்கும்‌. பேய்‌ பிடித்தால்‌ எப்படி தவிப்பானோ அப்படி ஆவான்‌. இவை பித்தவாத சிலேத்மக்‌ குறிகளாகும்‌.

28/1/19

சன்னி வாத சுர லக்ஷணம்‌

அடித்தகொண்டி போல்கிடக்கு மறிவைக்‌ குலைக்கும்‌ பேச்சில்லை கொடிக்கும்‌ சீவனிராதென்று நோக்கிமேலே மூச்செரியு மிடக்குங்‌ கண்ணு நாவிழுந்துவெற்பராராத்‌ திளைப்புமில்லை தடித்த தசையுங்‌ கால்குளிருஞ்‌ சன்னிவாத சுரமென்றே.

நோயாளி போட்ட இடத்திலேயே கிடப்பான்‌. அறிவிழப்பான்‌. பேச்சு இராது. ஆகாயத்தை நோக்கியப்படி மேல்‌ மூச்சு மெள்ள விடுவான்‌. கண்கள்‌ நாக்கு இவைகள்‌ வீழ்ந்து விடும்‌. தசை தடிக்கும்‌. காலில்‌ குளிர்ச்சி ஏற்படும்‌. இவை சன்னிவாத சுரத்தின்‌ குறிகளாகும்‌.

27/1/19

வாத கபக்‌ குறிகள்‌

தடிக்குங்‌ கடுக்கு முடம்பெல்லாந்‌ தலையுங்‌ கனக்குந்‌ தாள்‌ வலிக்கு முடக்கு முடம்புங்‌ குரல்கம்மும்‌ முழத்துனாவு முள்ளடங்கும்‌ குடிக்குங்‌ குளிரும்‌ வாய்திறவாக்‌ கூழு மிறங்கா வெதுப்பிவரும்‌ விடக்கும்‌ வேர்க்கும்‌ விட்டுவிடும்‌ மேல்மூச்செறியும்‌ சக்தி வரும்‌ மடக்கும்‌ வாதமய்ய மென்று அறிவோரறிந்து கொள்வீரே.

உடம்பு நடுக்கும்‌. தலை கனக்கும்‌ முழங்கால்‌ வலியும்‌ ஏற்படும்‌. உடம்பில்‌ முடக்கம்‌ உண்டாகும்‌. நாக்கை அசைக்க இயலாது. குளிர்‌ அதிகமாகும்‌. கூழ்‌ முதலான பதார்த்தங்கள்‌ உட்செல்லாது. எரிச்சல்‌ இருக்கும்‌. அடிக்கடி வியர்க்கும்‌. மேல்மூச்சும்‌, வாந்தியும்‌ ஏற்படும்‌. இவை வாத கபக்‌ குறிகளாகும்‌.